வாழ்வில் மன அபத்தம் ஒரு பகுதியாதலால் அதை நம்மால் முற்றிலும் விலக்கிவிட முடியாது. எனினும் அதை நாம் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி, அடக்கியாண்டால் நாம் மனம் மற்றம் உடல் நலத்துடன் இருப்போம். அதற்கு இரண்டு வழிகள் உள்ளன.
1. உங்கள் விழிப்புணர்வின் அளவை அதிகரித்தல் உங்கள் உடல் உணரும் மன அழுத்தத்தின் அளவையும், மன அபத்தத்தைக் கொணரும் நிகழ்வுகளின் தன்மையையும் விழிப்புடன் கவனியுங்கள். நாள் முழுதுமான உங்கள் மன அழுத்தத்தை ஆராய்ந்து பாருங்கள். அச்சமயங்களில் நீங்கள் உணரும் மன அபத்த அளவை நீங்களே பத்துப் புள்ளி அட்டவணையில் பதிவு செய்யுங்கள். இதைச் செய்ய உங்கள் உடலை கூர்ந்து கவனியுங்கள். உங்கள் தசைகள் இறுகுகின்றனவா? இதயம் சரிவர துடிக்கிறதா? உங்கள் கைகளில் வேர்த்து கொட்டுகிறதா? குளிர்ந்து போகிறதா? உங்களால் வழக்கம்போல மனதை ஒருமுகப் படுத்த இயலுகிறதா? என்று பாருங்கள். உங்கள் மன அழுத்தத்தின் அளவை சரிவர கணக்கிடுவதில் தேர்ச்சி பெற்ற பின்னர் உங்கள் மன அழுத்தத்தைத் தூண்டும் மக்கள், பொருட்கள், நிகழ்வுகள் பற்றி வர்ந்தாராயுங்கள். இவற்றையும் பத்துப்புள்ளி அட்டவணையில் நீங்களே பதிவு செய்யுங்கள். உதாரணமாக உங்களின் நெருங்கிய நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது உங்கள் பணி உங்கள் மன அழுத்தத்தின் அளவை தீடீரென உயர்துவன நீங்கள் உணரக்கூடும். அச்சூழ்நிலையில் அவ்வாறு உங்கள் மன அழுத்ததினை தூண்டுபவர்களை தவிர்ப்பதற்கும், அல்லது அவர்களோடு மிக இயல்பாக நடந்து கொகள்வதற்கும் பழகிக் கொள்ள வேண்டும். 2. உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க ஆக்கப் பூர்வமான செயல்களில் ஈடுபடுதல்:- i. அமைதியுடன் இருக்க பழகுதல்:- உடலும் மனமும் ஓய்வு கொள்ளவும், புத்துணர்வைப் பெறவும் இடையிடையே நாம் ஓய்வு கொள்ளல் மிகவும் இன்றியமையாதது. இசையைக் கேட்பது, விளையாடுவது, நடப்பது, அதிக நேரம் குளிப்பது முதலான உங்களுக்கு விருப்பமான, நன்கு அனுபவிக்கும் செயல்களில் ஈடுபட நேரத்தை ஒதுக்குங்கள். மன உளைவு, தளர்ச்சியடையும் நேரங்களில் வழக்கமான செயற்பாடுகளிலிருந்து நீங்கி புது செயல்களில் ஈடுபடுவது உங்களுக்கு உதவும். சிலரோ சிறு இடைவெளியை எடுப்பது பயனுள்ளது என்று கருத, வேறு சிலர் தொடர்ந்து நீண்ட விடுப்பை எடுத்துக் கொள்வது பயனுள்ளது என்று நினைக்கின்றனர். ஓய்வான பொழுதுபோக்கு, ஆழ்ந்த சுவாசப் பயிற்சி உங்களுக்கப் பயனளிக்கக் கூடும். படிப்படியாக உஉடற்தசைக்கு ஓய்வு தருதல், தியானம், யோகாசனம், உடற்பயிற்சிகள், உடலை வருடி விடுதல், காட்சி உருவகங்கள் முதலான பலவகை பொழுது போக்கு நுட்பங்கள் உள்ளன. அங்காடிகளில் இதுபோன்ற ஓய்வுப் பொழுது போக்குகளுக்கான ஒலி நாடாக்கள் கிடைக்கும். அவற்றை வாங்கிப் பயனடையுங்கள். ii. உடஉற்பயிற்சிகள்:- உடற்பயிற்சிகள் உங்கள் மன அழுத்ததினைக் குறைக்கவும், சுயமதிப்பை வளர்க்கவும் உதவும். அவை உங்கள் நோய் தடுப்பாற்றலை முறையாகச் சீராக்குவதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் முக்கிய பங்காற்றும். நல்ல உடல் நலன், அதிக ஆற்றல், உறக்கத்தை அதிகரித்தல், நல்ல மன ஒருமைப்பாடு, இதயத்தடை (பிமீணீக்ஷீt ணீttணீநீளீ ) ஏற்படும் அபாயத்தை குறைத்தல், மனமகிழ்ச்சியுணர்வு அதிகரித்தல், தன் மதிப்பு உயர்தல் முதலியவற்றோடு உடற் பயிற்சிக்குத் தொடர்புள்ளது. உடற் பயிற்சி கடுமையாக இருக்கத் தேவையில்லை. கடுமையான மெது ஓட்டத்தைப் போலவே நாள் தோறும் 20-30 நிமிடங்கள் வேகமாக நடப்பது பயனுள்ளது. அது மன அழுத்தத்தைக் குறைக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறே நல்ல சீரான உணவு உண்பதும் உங்கள் உடல் நலனைப் பேணும். அளவுக்கதிகமாக உண்ணுவதும் அதிக அளவில் மதுபானங்களை அருந்துவதும், புகை பிடிப்பதும் உங்கள் உடல் அழுத்தத்தை அதிகரிக்கும்.
iii. எல்லைகளை வகுத்துக் கொள்ளல் நாம் செய்ய முடிந்ததைக் காட்டிலும் அளவுக்கதிகமாக செய்ய நேரிடும்போது மன அழுத்தம் ஏற்படுகிறது. வாழ்வில் அடைய வேண்டியவற்றை நாம் அளவுக்கதிகமாக எதிர் பார்க்கிறோம். துரதிருஷ்டவசமாக இதுவே நமது மனஅழுத்தத்தை அதிகரிக்கும் முதற் காரணமாகிறது. இது நமது வாழ்வில் எவை உண்மையில் இன்றியமையாதவை, நமது உண்மையான தேவைகள், விருப்பங்களை மதிப்பீடு செய்து பார்ப்பதில் பெரிதும் உதவும். எங்களுக்கு இயழுமோ அங்கெல்லாம், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் நீங்கள் அடைய விரும்பும் வாழ்க்கை மாற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க முயல வேண்டும். உதாரணமாக நீங்கள் திருமணம் செய்து கொள்வது, ஒரு வீட்டை வாங்குவது, வீட்டைப் புதுப்பிப்பது, குழந்தையைப் பெறுவது, வேற பணியில் சேருவது இவையனைத்தையும் ஒரே ஆண்டில் செய்வத உங்கள் மன அழத்தத்தை அதிகரிக்கும். iv. திறமையான கருத்துப் பரிமாற்றம் :- நாம் உடன்படவும் உதவவும் விரும்புவதால் சில நேரங்களில் கண்டிப்புடன் இருப்பது கடனமே. நாம் பிறர் வேண்டுகோளை மறுக்க இயலாததையும் உணரலாம். இதனால் நாம் திணறலாம். நமது உடன்பாட்டு மனப்பான்மையால் சிக்கல்களில் சிக்கிக் கொள்வதையும் அறிகிறோம். இதன் விளைவாக நாம் கோபத்துக்கும் உதவி செய்ய இயலாமைக்கும் ஆளாவதை உணரலாம். நாம் நம் உடல் நலனை நம் நன்மையைப் பேண விரும்பினால் 'இல்லை' என்று கூறப் பழகுவது மிகவும் இன்றியமையாதது. ஒரு வேண்டுகோளை மறப்பதற்கு கீழ்க்கண்டவை உதவும். - வேண்டுகோள் விடுப்போனின் வேண்டுகோளை எற்பது
- மறப்பதற்கான உங்கள் காரணங்களைக் கூறுவது
- திடமாக 'இல்லை' என்று மறுப்பது.
உதாரணமாக " இன்றிரவு நீங்கள் சில பணிகளை நான் உங்களுக்குச் செய்ய வேண்டுமென விரும்புவரை அறிகிறேன், ( அவரது வேண்டுகோலை அவருக்கே திருப்பிச் சொல்லலாம்) எனக்கு அவ்வாறு செய்ய விருப்பமே என்றாலும் இன்று இரவு என் குடும்பத்தில் வேறு சில திட்டங்கள் எற்கனவே வகுத்து விட்டோம் (காரணங்களைக் கூறல்) எனவே உங்களுக்கு உதவி செய்ய முடியாத நிலையில் உள்ளேன்." (முடியாது என்று கூறுதல்)" இவ்வாறு நீங்கள் மறுத்துக்கூறுவதற்கு முன்னர், உங்களுடைய முடிவான பதிலை வீட்டில் கண்ணாடியின் முனநின்று கூறிப்பழக வேண்டும். உங்கள் உடல்மொழி இதில் முக்கிய பங்காற்றும். நேராக அமர்ந்தோ, நின்றோ, நெஞ்சை நிமிர்த்தி, கண்களோடு கண்கள் இணைத்து மென்மையான. ஆனால் உறுதியான குரலில் பேச வேண்டும்.
v. காலத்தைச் சவிர கையாறுதல் நேரம் போதாமையால் அடிக்கடி நீங்கள் மன அழுத்தத்தை உணர்வீர்கள். விரிவாக காலத்தைக் கையாளும் திட்டங்களை விளக்க முடியாமற் போனாலும் சில பொதுவான முறைகள் கீழே தரப்பட்டுள்ளன. இலக்குகளை முடிவெடுத்து முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துதல். - 'இதைச் செய்' என்ற பட்டியலை வைத்திருக்க வேண்டும்.
- உங்கள் இலக்குகளையும், செய்கைகளையும் முன்னுரிமைப்படுத்தி முக்கியமானவற்றை முதலில் செய்ய வேண்டும்.
- ஒரு மணி நேரம் திட்டமிடல் 3-4 மணி நேரப் பணி மீதப்படுத்துமாதலால் செய்முறை படுத்துவதற்கு முன்னர் நன்கு திட்டமிட வேண்டும்.
- நீங்கள் ஆக்கபூர்வமான மனநிலையில் உள்ள நேரத்தில் உங்கள் பெரும்பாலான செயல்களைச் செய்யவேண்டும். உதாரணமாக, சிலர் மதிய நேரங்களைக் காட்டிலும் காலை நேரங்களில் அதிகமாகப் பணியாற்றுவார்கள். அத்தகு செயலாக்க நேரங்களில் விருந்தாளிகள், தொலைபேசி பேச்சு முதலியவற்றைக்குறைத்துக்கொள்ள வேண்டும்.
- உங்களுடைய தொலைபேசி பேச்சுக்களை ஒரே நேரத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
- உங்களுடைய செயல்களில் சிலவற்றைப் பிறருக்கு ஒப்படைககப் பழக வேண்டும்.
- இடைநிறுத்தவும், ஓய்வு கொள்ளவும் குறிப்பிட்டு நேரத்தை ஒதுக்க வேண்டும்.
vi. எதிர்மறை எண்ணங்களை ஆராய்ந்து தடுங்கள் நமக்கு நாமே பேசிக்கொள்வது நமது எண்ணங்களையும் மனநிலையையும் பாதிக்கும். எதிர்மறை எண்ணங்களில் ஈடுபடுபவர்கள் வெகு எளிதில் கவலைக்கும் சோர்வுக்கும் ஆளாவார்கள். உதாரணமாக இரண்டு மனிதர்கள் தத்தமது அலுவலகங்களுக்குள் வருகிறார்கள். அவர்களது முதலாளிகள் அவர்களைக் கோபத்துடன் பார்க்கிறார்கள். ஒருவர் உடனே குற்ற உணர்வுடன் தனக்குத்தானே "நான் நேற்று ஏதோ தவறு செய்திருப்போம் போலுள்ளது" என்று கூறிக்கொள்கிறார். அவர் அதைப் பற்றியே கவலைப்படத்தொடங்கி பணியில் சரிவர ஈடுபட முடியாமற் போகிறார். மற்றவரோ அந்தச் சூழ்நிலையைப் புறக்கணித்துவிட்டு பணியில் ஈடுபடத்தொடங்குகிறார். அவர் தனக்குள்தானே, "இன்று காலையில் முதலாளி ஏதோ கெட்ட மனநிலையில் உள்ளார் போலுள்ளது. ஏதோ ஒன்னு அவர் மனதைப் பாதிததிருக்க வேண்டும். அவர் மகிழ்ச்சியுமாறு நான் என்னவாவது செய்ய முடியுமா? என்று கூறிக்கொள்கிறார். இருவர் இருந்தது ஒரே சூழ்நிலை ஆனால் அவர்களது எண்ணங்களும், செயல்களும் முற்றிலும் மாறானவை. - மன அழுத்தத்தை உண்டு பண்ணும் கீழ்க்கண்ட சிலவகை எண்ணங்களைத் தவிருங்கள்:
- மன ஆய்வு (Mind Reading ) உதாரணமாக "எனது கணவர் என் சமையலை வெறுக்கிறார் என்று நினைக்கிறேன்."
- சோதிடம் கூறுதல், உதாரணம் "இந்தத்திட்டம் உறுதியாகத் தோல்வியுறும் பாருங்கள்".
தீய விளைவுகள் வருமென அளவுக்கதிகமாக அச்சமுறுதல் உதாரணம்: "இந்தத் தவற்றுக்காக நான் நிச்சயமாக திட்டப்படுவேன். - நிலை தடுமாற்றமுறுதல் உதாரணம் : " இதற்கு பிறகு நான் எப்போதும் யாரையும் எதிர்கொள்ள முடியாமற் போவேன்.
- அதிகம் பொதுமைபடுத்தல் உதாரணம்: ஒவ்வொருவரும் இனி என்னை தாழ்வாக நோக்குவார்கள்
- "shoulds, oughts and musts" உதாரணம்: நான் எதைச் செய்தாலும் அது திறமையானதாக இருந்து தீரவேண்டும்.
- திறம்பட செய்வேன் எண்ணம் உதாரணம்:நான் ஒன்று இதைத் திறமையுடன் செய்து தீரவேண்டும் அல்லது செய்யவே முயற்சி எடுக்காதிருக்க வேண்டும்.
vii. சமூக துணை:
பெரும்பாலான மக்கள், தாம் மனமுடையயும்போது தமது வேதனைகளைப் பிறருக்கு எடுத்துரைப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறார்கள். முயற்சி செய்து நல்ல, தீர்ப்பு ஏதும் கூறூத கேட்பவரை அடையாளங்களை காணுங்கள். உதாரணமாக உங்களுக்கு நம்பிக்கைக்குரிய குடும்ப உறுப்பினர், அல்லது நெருங்கிய நண்பர், அல்லது நீங்கள் நம்பும், எளிமையாகப் பழகும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். நன்கு கேட்போரிடம் மனத்திறந்து பேசுதல் ஒருவரது சிக்கலின் உண்மைநிலையை, இயல்புருவைக்காண உதவும் மனதிலேயே புதைத்து வைத்து குமுழுறும் விசயங்களை பிறருக்கு எடுத்துரைப்பதே மன அழுத்தத்தைப் பெருமளவில் குறைக்கும்.
|
5 comments:
பதிவு ரொம்ப நீளம் என்றாலும் பல அருமையான தகவல்களை கொண்டுள்ளது. நன்றி.
வடுவூர் குமார் said...
பதிவு ரொம்ப நீளம் என்றாலும் பல அருமையான தகவல்களை கொண்டுள்ளது. நன்றி. மிக்க நன்றி வடுவூர் குமார் தொடர்ந்து படிக்கவும்.
நண்பர் முஹம்மத் சலீம் அவர்களுக்கு, நான் கடந்த வருடம் என் பணிச் சுமை காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளனேன். இதனால் தூக்கம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமம் பட்டேன், இன்றுவரை தூக்கத்தில் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது, இச்சமயத்தில் மனஅழுத்தம் சம்பந்தமாக இணையத்தில் தகவல்கள் தேடி படித்து அதுகுறித்த விழிப்புணர்வை எனக்குள் அதிகரித்து வருகிறேன், அதுபோல் தேடும் போது உங்களுடைய ஆக்கம் கிடைக்கப்பெற்றேன், மிகவும் அழகாக நான் சந்தித்த அனைத்து பிரச்சனைகளையும் விரிவாக விளக்கி இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள், உங்களுடைய கட்டுரையில் இருந்து எனக்கு நிறைய அறிவுரைகள் ஆலோசனைகள் கிடைக்கப் பெற்றேன், அல்லா உங்களுக்கு நல்லருள் புரியட்டுமாக,,,
மிகவும் எளிமையாகப் புரிந்து, செயல்படுத்தத்
தக்கதாக அமைந்திருக்கிறது. பாராட்டுக்கள்.
இலவசச சிகிச்சை அளிக்கும் உங்கள் தொண்டுள்ளத்திற்கு வாழ்த்துக்கள்.
இறைவன் தங்களுக்கு எல்லா நலமும் அருளப் பிரார்த்திக்கிறேன்.
Post a Comment