Friday, July 17, 2009

சோர்வை விரட்ட...சோர்வை விரட்ட…வாழ்க்கை மிகவும் வெறுப்பாக இருக்கிறதா? மிகவும் சோர்ந்து போய் விட்டீர்களா? சில எளிய வழிகளால் மீண்டும் உங்களை பழைய நிலைக்கு உற்சாகமுள்ளவராக புதுப்பித்துக் கொள்ள முடியும்.


1. முதலில் உங்களுக்கு இதுவரை வந்த பாராட்டு, ஊக்கம் முதலியவற்றை நினைத்துப்பாருங்கள். பிறகு, நீங்கள் பாராட்ட நினைக்கிறவர்களுக்கு பாராட்டுக் கடிதம் எழுதுங்கள். நன்றிக் கடிதம் எழுதுங்கள். நீங்கள் அன்று சொன்ன ஒரு சொல், அல்லது உங்களின் போன வருடக்கடிதம் எனக்கு ஊக்கத்தை புதுப்பித்துள்ளது, நன்றி என்று கூறிஎழுதிப்பாருங்கள், போனிலும், நேரிலும் சொல்லத் தயங்கும் பாராட்டு, நன்றிமுதலியவற்றை கடிதங்கள் மூலம் எளிதில் சொல்லமுடியும்.

2. உடம்பை ஒருமுறை நன்கு குலுக்குங்கள். அல்லது ஒரு ஐந்து நிமிடங்கள் ஆடுங்கள். உங்கள் சக்தி அதிகரிக்க ஆரம்பிக்கும்.

3. ஐந்து நிமிடங்கள் வாய்விட்டுச் சிரியுங்கள். நகைச்சுவைக் கட்டுரை படிக்கலாம்.அல்லது நகைச்சுவைக் காட்சிகளை டி.வி.யில் அரைமணி நேரம் பாருங்கள். மன இறுக்கம் உடனே அகலும்.

4. ஒரு தலையணையை தலைக்கு வைத்துக்கொண்டு நீட்டிப்படுங்கள். இரண்டு கைகளையும் தொப்புளில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சு உள்ளே சென்று வெளியே வருவதை கற்பனையில் பாருங்கள். பிறகு கால்களை படுத்த நிலையிலேயே உயரத்தில் தூக்குங்கள். பிறகு கால் பாதங்கள் தரையில் தொட்டுக் கொண்டிருக்க இடுப்பையும், முழங்கால்கலையும் முன்னோக்கித் தூக்குங்கள். இந்த பயிற்சியை தினமும் 5 நிமிடங்கள் அல்லது 10 நிமிடங்கள் செய்தால் உங்களின் சக்தி அதிகரிக்கும்.

5. எப்போதும் தைரியமாக வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள். நமது மாபெரும் பயங்களை வெல்லக்கூடிய ஒரே மாற்று மருந்து, நச்சு முறிவு மருந்து தைரியமான எண்ணங்களும், செயல்களும்தான், தைரியமான செயல் முறையால் மிகப்பெரிய சக்தி நம்முள் எழுகிறது. இதுவே படைக்கும் திறன், உடல் உறுதி, சமாளித்து வெற்றிபெற தேவையான ஆற்றல் முதலியவற்றைத் தந்து நம்மை உயர்த்துகிறது.

6. வேலை செய்யப் பிடிக்காதபோது, பதட்டமாக உள்ளபோதும் மூச்சை நன்கு இழுத்துவிடுங்கள். இந்த மூச்சுப் பயிற்சியால் வெறுமை நிலை ஏற்படாது. மன அமைதிகிடைக்கும்.

7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் உங்கள் சக்திக்கு உட்பட்ட சிறு சிறு பரிசுப் பொருள், வாழ்த்து அட்டை போன்றவற்றை அனுப்புங்கள். அவர்கள் காட்டும்பிரதிபலிப்பில் குதூகலிப்பீர்கள். இது உறுதி.

8. பாதிப்பாதியாக நிறைய வேலைகள் அப்படியே உள்ளனவா? முடிக்காத வேலைகளைப் பட்டியல் எடுத்து ஒவ்வொன்றாக முடியுங்கள். இந்த ஒழுங்கு முறையை வீட்டிலும் அலுவலகத்திலும் பின்பற்றினால் உங்கள் மீது உங்களுக்கு சுயமரியாதை அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் அடுத்ததைச் சந்திக்க உற்சாகமாக இருக்கும்.

9. உங்கள் உடைகளில் மாற்றம், முடிவெட்டிக் கொள்வதில் மாற்றம், வாரம் ஒரு முறை, அருகில் உள்ள இதுவரை செல்லாத ஊர்களுக்குச் சென்று வருதல் என்று உங்கள் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம். உடை அணிவதில் காட்டும் இந்த மாற்றம் உங்களுக்கு அளவற்ற உற்சாகத்தைத் தரும். சுத்தமான ஆடைகளையே தினமும் அணியுங்கள்.

10. உங்களுக்கு மிகவும் பிடித்தமான மூன்று பொருள்களைக் குறிப்பிடுங்கள். எந்தமூன்றைக் கண்டு வெறுக்கிறீர்கள்! சிறந்த மூன்றிலிருந்து நீங்கள் உலகிற்கு கொடுத்தசிறப்பு எது? பதிலை எழுதுங்கள். வெறுக்கின்ற மூன்று அம்சங்களில் உங்களின் பயங்களும் அறியாமையுமே முதலிடத்தில் இருக்கும். எனவே, பயப்படாமல் அறிவுடன் வாழ முடிவு செய்யுங்கள்.

11. உங்களது வாழ்க்கை முறை, சத்துணவு முதலியவற்றை நன்கு ஆராயுங்கள். உங்கள் பணி, உடல் நலன் முதலியவற்றிற்கு ஏற்ப சத்துணவுத் திட்டம் தயார்படுத்திபின்பற்றுங்கள்.

12. உங்கள் உடல்நலமும், செல்வ வளமும் நன்கு இருப்பதைக் கற்பனையில் சதாபாருங்கள். உங்கள் உருவத்தை வெற்றிகரமான, ஆரோக்கியமான மனிதராகவே பாருங்கள். பொட்டாசியம், மக்னீஷியம் உள்ள பழங்களையும், பருப்பு வகைகளையும் நன்கு சேர்த்துவந்தால் நரம்பு மண்டலம் துடிப்பாகவும் அமைதியாகவும் இருந்து,சுறுசுறுப்பான வாழ்க்கையை உங்களுக்கு உருவாக்கித்தரும். வாழ்வில் சோர்வு தலைகாட்டாது.

சோர்வை நீக்கும் உணவு வகைகள்:

சோர்வை நீக்கி மூளைக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தருவதில் சோளம், புரதம் நன்கு உள்ள உருளைக்கிழங்கு, அதிக நேரம் மன உளைச்சலுடன் வேலை பார்க்க நேரிட்டாலும் இதயம் சிறப்பாக இயங்க ஃபோலிக் அமிலம் உள்ள முட்டை கோஸ்,சப்பாத்தி, கொண்டைக்கடலை முதலியவைகளில் உள்ள தயாமின் என்ற வைட்டமின்,ஆக்ஸிஜனை உடலின் அனைத்துச் செல்களுக்கும் அனுப்ப பேரீச்சை, மொச்சை, பீட்ரூட் முதலியவைகளில் உள்ள இரும்புச்சத்து தாராளமாக உதவும். இந்த உணவுகள் அடிக்கடி உங்கள் உணவில் இடம் பெற்றால் மனமும் உடலும் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

நமது மாபெரும் பயங்களை வெல்லக்கூடிய ஒரே மாற்று மருந்து, நச்சு முறிவு மருந்து தைரியமான எண்ணங்களும், செயல்களும்தான், //
well said...

இராஜராஜேஸ்வரி said...

picture is awesome.

Post a Comment