Thursday, November 26, 2009

பிராணாயாமம்


நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய் எதிர்ப்பு தன்மையின்றியும் இருக்கிறது, மேலும் நாம் குடிக்கும் குடிநீர். சுவாசிக்கும் காற்று. மண் போன்ற இயற்கை வளங்கள் அனைத்தும் கெட்டுள்ளது, இவற்றின் மூலம் நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கினால் இரத்தம் கெடுகின்றன, இரத்தம் அசுத்தம் ஆவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு நோய்கள் உருவாகின்றன,

உலகம் என்பது பரந்து விரிந்துள்ளது, நாம் உலகத்தை சுத்தம் செய்ய முடியாது, நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கை சுத்தம் செய்ய முடியும், உடல் அழுக்கானால் எப்படி சோப்பு போட்டு குளிக்கின்றோமோ அதைப் போல் நம் உடலின் உள்ளே இருக்கும் உயிர்காற்றைகó கொண்டு பிராணாயாமம் என்னும் பயிற்சியின் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்கின்றோம்,

மேலும் பிராணாயாமப் பயிற்சியின் மூலம் இரத்தத்தின் ஓட்டமும் பிராணனுடைய இயக்கமும் உடல் முழுவதும் சரிசமமாக இயக்கப்படுவதால் அதிகப்படியான சக்தியையும். ஆற்றலையும் பெறுகின்றனர், இதனால் நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் கூடிய துடிப்பான உடல் இயக்கமும் இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கமும் ஏற்படுகிறது, நோய் நொடிகள் இன்றி மாத்திரை மருந்துகள் இன்றி வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்விற்கு பிராணாயாமப் பயிற்சி வழி வகுக்கிறது,

Monday, August 24, 2009

மனோசக்தியை அற்புதங்கள் நிகழ்த்துவதற்கு பயன்படுத்தவும்


மனித மனத்தில் உருவாகிற எண்ணங்கள் சக்தியாகையால் உருவான மறுவினாடியே அது நம் மூளையை விட்டு உடலை விட்டு பிரபஞ்சத்தில் பரவத் தொடங்கிவிடுகிறது. இதனை ஒரு உயிருள்ள வானொலி ஒலிபரப்பு நிலையம் செயல்படுவதாக நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சாதாரணமாக ஒருவர் பேசுகின்றொலி ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் மற்றவர்களுக்கு கேட்பதில்லை. ஒரு ஒலி பெருக்கியைப் பயன்படுத்துகிறபோது ஒலியின் தன்மை பல மடங்காக (AMPLIFY) பெருக்கப்பட்டு இன்னும் அதிக தூரத்திற்கு கேட்கச் செய்ய முடிகிறது. அதே ஒலி நுண் அலைகளாக (Microwave) மாற்றப்படும்பொழுது அது மிக நீண்ட தூரம் சென்று மீண்டும் நுண் அலைகள் சாதாரண அலைகளாக மாற்றப்பட்டு கேட்கச்செய்கிறது.

மனித மனத்தின் எண்ணங்களும் இப்படி நுண் அலைகளாக மாற்றப்பட்டால்தான் அது அதிக தொலைவு ஏன் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவும்.

சாதாரணமான எண்ணங்கள் இப்படி பரவினாலும் வேகாமாக வெகு தொலைவிற்கு செல்லாது.

ஒவ்வொரு மனித மனத்திலிருந்தும் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் (FREQUENCY) எண்ணங்கள் ஒலிபரப்பாவதால் அதே அலை வரிசையில் மனத்தை வைத்திருப்பவர்களின் மூளையை அது தாக்கி அங்கு அந்த சிந்தனை தொடர்பான சிந்தனைகள் தோன்றக் காரணமாக அமைகிறது.

இந்த நிகழ்வுகளை ஒரு சோதனைச்சாலையில நிரூபணமாக செய்ய முடியாது. ஆயினும் ஒரு பேருண்மையை நாமனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதாவது ஒத்த எண்ணமுடைய எண்ண அலைவரிசையையுடைய மனிதர்கள் மட்டுமே மனப்பூர்வமான நிறைவான உணர்வுப் பூர்வமான நட்பில் நிலைக்க முடியும்; நண்பர்களாக வாழமுடியும்.

மாறுபட்ட எண்ண அலைவரிசையுடையவர்கள் நண்பர்களாக இருக்க இயலாது. சில சமயம் மாறுபட்ட எண்ணமுடையவர்கள் சில காலம் ஒன்றாக இருப்பார்கள். ஆனால் அது மனம் இணையாத உடல்கள் மட்டும் அருகில் இருக்கும் போலியான தோற்றம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போலி, கபட நட்பாகத்தான் இருக்க முடியும்.

ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் என்பது உலக இயற்கை. விதி, நியதி. இது மாறாதது.

எண்ணங்களைப் பொருத்த மட்டில் தன்னை ஒத்த எண்ணங்களை, தன்னை ஒத்த சிந்தனை உள்ள மனிதர்களை கவர்ந்து இழுப்பது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

“கற்றாரைக் கற்றாரே காமுருவர்” என்பதும், “பாம்பின்கால் பாம்பறியும்” என்கிற சொற்றொடர்களும் இந்த பிரபஞ்ச எண்ண விதிகளின் படிதான்.

இல்லை, போதவில்லை, வறுமை பற்றாக்குறை, பஞ்சம் என்று வாடிக்கையாகப் பேசுபவர்கள் வறுமை எண்ணங்களையும், வறுமையிலும் பற்றாக்குறையிலும் பரிதவிப்பவர்களையும், ஏழைகளையும், வறுமைச் சூழலையும் வாழக்கையில் கவர்ந்து இழுத்து மேலும் மேலும் வறுமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஆனால் வளமை எண்ணம் உடைய செல்வந்தர்கள் வளமான வணிகத்தையும் வரப்போகிற வருமானத்தையும் வளமான வணிகம் செய்கிற நண்பர்களையும் பிரபஞ்ச விதிப்படி ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் என்கிற விதிப்படி ஈர்த்து வசதியான வளமான வசந்த வாழ்க்கை விளைகிறது.

ஒருவேளை உங்களிடம் இன்றைக்கு பணமில்லை என்றாலும் நாளை வரப்போகிற பணத்தை செல்வத்தை எண்ணி வளமான சிந்தனையை மனத்தில் இருத்துங்கள்.

“POVERTY BEGETS POVERTY” “RICH BECOMES RICHER” பிச்சைக்கார வறுமை எண்ணம் ஏழ்மையை கொண்டு வருகிறது. செல்வ மனநிலை வளமான வாழ்க்கையை வருவிக்கிறது.

இந்த எல்லாவற்றையும் தீர்க்கமாக சிந்தித்த “மனவளக்கலை” என்கிற மார்க்கத்தை தமிழ் மக்களுக்குத்தந்த தவசீலர் மகரிஷி வேதாத்திரி அவர்கள் “வாழ்க வளமுடன்” என்று வாழ்த்தி வரவேற்கச் சொன்னதும் வாழ்த்தச் சொன்னதும் இந்த பிரபஞ்ச நியதியையும் விதியையும் விஞ்ஞானபூர்வமாக அறிந்ததன் விளைவே.

மனிதர் தங்களின் ஆசைகளையும் விருப்பங்களையும் அடைய முயற்சி செய்கிறார்கள். முயற்சிகள் தோல்வியடைகிற பொழுது கடவுளிடம் கேயேந்த தொடங்குகிறார்கள்.

இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை

உண்மைதான். இந்த பிராத்தனையை ஏன் தொடக்கத்திலேயே செய்யக்கூடாது. சொல்லுகிறேன்”

பிரார்த்தனை விஞ்ஞானப்பூர்வமானது விசுவாசியுங்கள், உணர்ச்சிகள் இவையாவும் ஒன்றிணைவதால் இந்தப் பிரபஞ்சம் முழுவது பரவி தக்க நபரைத் தாக்கி அந்த மனிதரின் மூலம் நம் எண்ணங்கள் ஈடேறுவதற்கான சூழல் வாழ்க்கயில் உண்டாகிறது.

அற்புதத்தை உருவாக்குகிற அற்புதங்களை நிகழ்த்துக்கிற ஆற்றல் இப்படித்தான் உருவாகிறது.

பிரார்த்தனையை அமைதியாக தனிமையில் (தியானம் செய்வதுபோல) ஒரு அறையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட படம் அல்லது இலை முன்பு (சூழல் அழகாக இருந்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும் எதிர்மறை சிந்தனைகள் உருவாகாது) மனம் கமழும் சூழலில் ஆச்சார இயம - நியம விதிகளின்படி குளித்துவிட்டு ஈர உடையுடனோ அல்லது குளிர்ந்த உடலுடனோ (அப்போதுதான் ஆழ்மனம் விழிப்படையும்) நினைவு மன செயல்பாடுகள் ஒடுங்க ஆழ்மனம் விழிக்க எண்ண அலைகளின் போக்குவரத்து குறைவாக இருக்கும் பிரம்ம முகூர்த்த வேளைகளில் (அதிகாலை 3.00 மணியிலிருந்து 6 மணிக்குள் சூரியன் உதிப்பதற்கு முன்) நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் உணர்ச்சிபூர்வமாக சங்கல்பிக்கிற ஆசைகள், அபிலாஷைகள் தீர்மானங்கள் விஞ்ஞான விதிகளைப் போல செயல்பட்டு விளைவுகளை உருவாக்கும். நினைத்தது நிறைவேறும்.

டாக்டர் பண்டிட் ஜி. கண்ணைய யோகி என்கிறவர் சென்னையில் வாழ்ந்து மறைந்த ஞானி. “மானச யோகம்” என்கிற தன்னுடைய நூலில் அவர் எண்ணங்களைப்பற்றி அற்புதமான செய்திகளையும் விளக்கங்களையும் விரிவாக தந்திருக்கிறார்கள்.

ஒரு உதாரணம்: வீட்டில் குழந்தைகள் விளையாடுவதற்காக வாங்கித்தரும் மோட்டார் கார், பஸ் போன்ற பொம்மைகள் பாட்டரி மின்சாரத்தினாலோ அல்லது சாவி கொடுப்பதன் மூலமோ இயங்குபவைகள். அவைகளை தரையில் வைத்து இயக்கிவிட்டு அதன் ஒரு பாதையில் ஏதோ மரக்கட்டையோ ஒரு கனமான புத்தகத்தையோ குறுக்கே வைத்து தடையை ஏற்படுத்தினால் அந்த பொம்மை முன்னேறிச் செல்ல முடியாமல் நிற்கும்.

எறும்புகள் செல்லும் பாதையில் இதுபோல தடைகளை ஏற்படுத்தினால் அந்த எறும்புகள் தடையைத் தாண்டி தடையின் மீது ஏறியோ அல்லது வலமாகவோ இடமாகவோ திரும்பி பாதையை மாற்றி தன் பயணத்தை தொடருகிறது.

பொம்மைக்கும் எறும்புக்கும் செயல்பாடுகளில் உள்ள வேறுபாடு எதனால் என்று சிந்தித்தால் ஒன்றை அறியலாம். அதாவது எறும்பின் அறிவு, எண்ணம் செய்லபடுவதால் செயல்பாட்டில் மாற்றத்தை கொண்டு வந்தது. பொம்மைக்கு ‘எண்ணம்’ இல்லை. செயலில் மாற்றம் ஏற்படுவதில்லை.

வெளியூரில் உள்ள நண்பரின் விலாசத்தை தந்து அந்த ஊருக்கு வேறு ஏதோ ஒரு வேலை விஷயமாக செல்லும் உள்ளூர் நண்பரிடம் ஒரு பொருளைக் கொடுத்து சேர்ப்பித்துவிட்டு வரச்சொன்னால் உள்ளூர் நண்பர் தன் அறிவாலும் முயற்சியாலும் அவ்வாறு செய்வார் .

இதுபோலவே நம்மூரில் கிடைக்காத ஒரு பொருளை வெளியூரில் வாங்கிவருமாறு உறவினருக்கோ நண்பருக்கோ வேண்டுகோள் விடுத்தால் அவர்கள் அவ்வாறே அந்த ஊர்களுக்குச் செல்லும் பொழுது தேடிப்பிடித்து முயற்சி செய்துத வாங்கிவருவார்கள். அறிவு என்கிற எண்ணமும் முயற்சி என்னும் முனைப்பும் உடலை தூண்டி, இயக்கி அவ்வாறு செய்யத் துணைபுரிகிறது.

இந்த மேற்கண்ட பணிகளைச் செய்த நண்பர்கள், உறவினர்கள் இவர்களுக்கு தகவல்களைத் தந்துவிட்டு, அவர்களின் அறிவாகிய எண்ணத்தில் பணிக்கான முனைப்பை ஏற்படுத்திவிட்டு உடலையும் எண்ணத்தையும் வேறாக பிரித்து கற்பனையாக உடல் இல்லை எண்ணம் மட்டுமே உள்ளது என்ற நிலையில் அங்கே செயல் நிகழுமா என்று நாம் எண்ணிப் பாத்தாலோ அல்லது சோதித்துப் பார்த்தாலோ ஒன்றை நாம் நிச்சயமாக உய்த்துணரலாம்.

தகவல்கள் தரப்பட்ட அறிவுறுத்தப்பட்ட அறிவு செயல்பட முனையும். செயல்படும் உடல் இல்லாத நிலையில் உலகுக்கு வெளிப்படையாக அறிவின் எண்ணத்தின் செயல்பாடு தெரியாது. ஆனால் அறிவு வெளியூரில் உள்ள நண்பர்களின் எண்ணத்தைத் தாக்கி விளைவை ஏற்படுத்தும். வாங்கிவரச் சொன்ன பொருள் தகவல் தந்தவருக்கு கிடைக்க வழிமுறைகளைச் செய்யும். இதே தத்துவத்தை பயன்படுத்தி ஒரு மனிதரின் உள்ளத்திலிருந்து மற்றொரு மனிதருக்கு செய்தியை அறிவிக்கும் செயல்பாட்டை “மானச தந்தி” (Telepathy) என்று அழைக்கலாம். செய்யவும் செய்யலாம்.

பல நேரங்களில் இயற்கையாகவே இதுபோல நண்பர்களைப் பற்றியோ உறவினர்களைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கும்போதோ அதற்கு உரியவர்கள் நேரில் வந்த அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டோ பேசும்பொழுது “நினைத்தேன்! வந்தாய்! நூறுவயது!” என்று வியப்படைக் கூடிய செயல்களை பலமுறைபார்க்கலாம்.

இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் வாசக அன்பர்கள் இந்த தத்துவத்தைப் பயன்படுத்தி சோதித்துப் பார்க்கலாம். உண்மையை அறியலாம். உடல் கருவியைப் பயன்படுத்தாமல் உள்ளத்தின் ஆற்றலை மனோ சக்தியால் மற்றவர்களின் மனங்களின் கருத்துக்களைச் செலுத்தி காரியங்களைச் செய்ய முயற்சி செய்யலாம்.

வணிகத்தில், தொழிலில் விற்பனையை அதிகரிக்க வாடிக்கையாளர்களை கவர, விற்ற பிறகு பணத்தைபெறுவதற்கும் முரண்பாடுள்ள மனிதர்களுக்கு இடையே நல்லுறவுகளை உருவாக்கவும், கணவன் மனைவிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கும், பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும், மனதால் விரும்புகிறவர்களின் மனதில் இடம்பிடிக்கவும், முதலாளி தொழிலாளி உறவுகள் மேம்படவும், ஒரு காரியம் நடைபெற உதவி கேட்டு செல்லும்பொது தடையின்றி மற்றவர்களுக்கு உதவவும், ஒத்துழைக்கவும், இந்த மானசீக மனோசக்தி உத்தியைப் பயன்படுத்தி மாற்றங்களை வேண்டும் வகையில் உருவாக்கலாம்.

உணர்ச்சி பூர்வமாக மற்றவர்களின் உருவங்களை மனதில் கற்பனையாக எண்ணி அவர்களின் மீது அன்பு கொண்டு வாழ்த்துவதன் மூலமும் மானசீகமாக வேண்டிக்கொள்வதின் மூலமும் நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கேற்ற உதவியை ஒத்துழைப்பைப் பெறலாம். நம் சொல்லுக்குக் கீழ்படியாத குழந்தைகளையும் ஒத்துப் போகாத மனிதர்களையும் உணர்ச்சிகளையும் வாழ்த்துவதன் மூலமாக கீழ்ப்படியவும் ஒத்துப்போகவும் செய்யலாம்.

மனோசக்தியை அற்புதங்கள் நிகழ்த்துவதற்கு பயன்படுத்தவும்.

Monday, August 17, 2009

வசீகர மனோ சக்தி!!!


சித்தர் ஆசியுடன் ஆத்ம தியானம்,

ஆத்ம உரையாடல், ஆத்ம சிகிச்சை, ஜஸ்வர்ய வசீயம்,

பஞ்ச தேவதை, ஆத்ம டௌசிங் பெண்டுலம்,

உடல் யாத்திரை, குண்டலினி யோகம்,

கானாமற் போனவரை வரவழைத்தல்

இரசமணி செய்முறை, எளிய முறை யோகாசனம்,

வாசியோகம், பிரமிட் வாஸ்து,

காஸ்மிக் ஆல்பா தியானம், வசீகர மனோ சக்தி,

மலர் மற்றும் பயோ மாற்று மருத்துவம்,

மந்திர சக்தி மற்றும் பல இரகசிய கலைகள்

சித்தர் உதவியோடு உங்களிடம்

பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்

முயற்சியோடு தொடர்ந்து பழகி வரவும்

Saturday, August 8, 2009

அமைதியான மனதை அடைய
அமைதியான மனதை அடைய என்ன வழி?

"தியானம்" தான். தியானம் ஒன்று மட்டுமே நம் மனதைப் பண்படுத்தி நம் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இப்போது "விடக்கா" என்றச் சொல்லைப் பற்றிச் சொல்கிறேன். பாலி மொழியில் "டக்கா" என்றால் தர்க்கம் எனப்படும். " விடக்கா" என்றால் மனிதனின் அலைபாயும் மனதைக் குறிக்கும். அன்றாட வாழ்க்கையில் கடந்து போன சம்பவங்கள் திரும்பத் திரும்ப நினைவில் வந்து நம்மை மூழ்க வைக்கும். இந்த நிலையை விடக்கா என்று சொல்லலாம். இந்த நிலை நமக்குள் இருக்கும் நமக்குள் இருக்கும் சக்தியை உணரவிடாமல் செய்கிறது. "பிரமிட் தியானம்" இந்தச் சக்தியைக் கொடுக்கிறது. இதை "ஆனாபானா சதி "என்ற பெயரில் அழைக்கின்றனர். இதை ஒழுங்காகச் செய்தால் இந்த "விடக்கா "என்ற பலதரப்பட்ட எண்ண ஓட்டங்களிலிருந்து விடுபடலாம். மனம் சலனமற்ற நிலையை அடைகிறது.

ஆனாபானாசதி, பாலி மொழியில் "ஆனா" என்றால் உள்ளே இழுக்கும் மூச்சு. "அபானா" என்றால் வெளியே விடும் முச்சு. "சதி" என்றால் உடன் இருத்தல். அதாவது உள்மூச்சு வெளிமூச்சுடன் நாம் உடன் இருக்க வேண்டும். அப்படியே ஒன்ற வேண்டும். அதையே உன்னிப்பாய் கவனிக்க வேண்டும். இயற்கையாக சுவாசித்தலைக் கவனிக்க வேண்டும். இந்த தியானம் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

இதைச் செய்யும் முறை :

வசதியான விதத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றாகக் கோர்த்துக் கொண்டு கண்களையும் மூடிக் கொள்ளுங்கள். எல்லா உறுப்புக்களையும் தளர்த்திக் கொள்ளுங்கள். மனதால் எல்லா உறுப்புக்களும் தளர்ந்து விட்டதை உணருங்கள். பின் தியானம் ஆரம்பம்.

மூச்சு உள்ளே, வெளியே செல்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். எண்ணங்கள் வந்து போகலாம். அது தானாகவே வந்து போய், பின் அடங்கி விடும். அதைக் கட்டுப்படுத்தாதீர்கள். எண்ணங்களின் மேல் இருக்கும் கவனிப்பை விடுத்து சுவாசத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.

நம் மூக்கு தான் பிரமிட் என்று எண்ண வேண்டும். கொஞ்ச நேரத்தில் மன அழுத்தம் குறைந்து மனம் மலர்ந்து விரிவதைப் பார்க்கலாம். இதைச் செய்வதால் பிராணசக்தி நம் உடலில் பெருகுகிறது. மனம் தெளிவு பெறுகிறது. உணர்ச்சிப் பெருக்கில் நல்ல மாற்றம் உண்டாவது நமக்குத் தெரிகிறது. ஒரு சாந்த நிலை ஏற்படுகிறது. ஆன்மா ஊக்கப்படுகிறது. இந்தத் தியானம் ஆரம்பத்தில் பத்து நிமிடங்கள் செய்யலாம். பின் நன்கு பயிற்சி ஆனபின், 60 நிமிடம் வரை செய்யலாம்.

எகிப்து தேசத்தின் பிரமிட்கள் சுமார் 5000 வருடங்கள் பழமையானவை. இறந்த உடல்கள் இங்கு கெடாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள். . பிரமிட்டின் கீழே தூங்குபவர்களுக்கு ஹைபர்டென்சன், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் மறைகின்றன.

விஞ்ஞானி லியால் வாட்சன் சொல்கிறார், "சிறிது நேரம் இதன் கீழ் அமர்ந்து மௌனமாகக் கண்களை மூடினாலும் கூட அது பலனைக் கொடுத்து விடுகிறது. மன அழுத்தம் மிகப்பெருமளவில் குறைந்து விடுகிறது"

பிரமிட் வடிவ டப்பாவில் நகைகள் அப்படியே புதுப் பொலிவுடன் இருக்கின்றன. சிறிது நீரை இதனுள் வைத்துப் பின் முகம் கழுவ, முக சுருக்கம் மறைகிறது. முக லோஷன் போல் உதவுகிறது. காய்கறிகள் பிரமிட்டில் வைக்க அப்படியே வாடாமல் இருக்கின்றன, உணவுப் பொருட்களும் கெடுவதில்லை. தவிர, மருந்துகளும் பிரமிட் டப்பாவில் வைக்க கூடுதல் நன்மை அளிக்கின்றனவாம்.
தலைவலிக்கு பிரமிட் போன்று அட்டையில் வடிவம் அமைத்து தலையில் தொப்பி போல் வைத்துக் கொள்ள, தலைவலி மறைகிறது. சிலர் வீடுகளிலும் இந்த மாதிரி வடிவம் அமைத்துக் கொள்கிறார்கள்.
தமிழ் நாட்டில் கோயம்பத்தூரில் வடவள்ளி என்னும் இடத்தில் பெரிய பிரமிட் கட்டிடம் உள்ளது. இதனுள் அமர்ந்து பலர் தியானம் செய்கிறார்கள். இதில் மூன்று மாடிகள் உள்ளன. மூன்றும் பிரமிட் வடிவம் தான். இந்தத் தியானம் செய்யும் முறை மிக எளிது என்பதால் எல்லோரும் இதைச் செய்ய முடியும். இத்தனை உபயோகம் தரும் இதை நாம் வாழ்க்கையில் பழக்கப்படுத்திக் கொள்ளலாமே!

****Wednesday, August 5, 2009

ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை


ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை தூரத்தில் இருந்தபடியே சிகிச்சை அளிக்கும் முறை (Distance Healing) இப்போது பிரபலமாகி வருகிறது. காரணம், மிகவும் பயனுள்ள நலம் பயக்கிற உறுதி செய்யப்பட்ட ஆற்றல் வாய்ந்த சிகிச்சை முறையாக இந்தச் சிகிச்சை இருந்து வருகிறது.என்னிடம் சிகிச்சை பெற விரும்புகிற யாவரையும் அன்புடன் வரவேற்கிறேன். இது முற்றிலும் இலவசமாகும். தாங்களின் முழு உருவ படத்துடன் பெயர்,இடம்,உங்களின் தொலைபேசி எண்,உங்கள் வியாதி பற்றி முழு விபரம், அனுப்பி வைக்கவும்.ஈமெயில்-muhamedsaleem@gmail.com WHATSAPP NO:+919791825692 நம்பிக்கையோடு தொடர்பு கொள்ளவும். இறைவன் அருளால் உங்கள் பிரச்சனை விலகும்.

Monday, August 3, 2009

ஆழ்மனத்தின் சக்தி


அதைப் பயன் படுத்தி உங்களை ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்

அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும் என்பது சித்தர் பாடிய பாடல் வரி.அண்டம் என்பது பிரபஞ்சம்! பிண்டம் என்பது நம் ஒவ்வொருவரின் மனித உடல்!!!

இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான சக்திகள் உள்ளன.அவற்றில், ஒன்று காஸ்மிக் சக்தி.இதைப் பயன்படுத்தி நமது நியாயமான ஆசைகளை நம் ஒவ்வொருவராலும் நிறைவேற்றிக்கொள்ளமுடியும்.இந்த காஸ்மிக் சக்தியைப்பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் நமது ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.
ஆழ்மனதை நமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர நாம் தினமும் தியானம் இருமுறை செய்துவர வேண்டும்.காலையில் எழுந்து குளித்துத் தயாரானதும்,இரவில் தூங்கும் முன்பாகவும் 15 நிமிடம்வரை நாம் தியானம் செய்துவரவேண்டும்.

மனக்காட்சியின் மூலம் விரும்புவதை அடைவதுஎப்படி? இதுதான் ஆழ்மனத்தைப்பயன்படுத்தும் சுலப வழிமுறை.இதற்கு ஆங்கிலத்தில் கிரியேட்டிவ் விசுவலிசேசன் என்று பெயர்.இதை தமிழில் படக்காட்சியாகக் கற்பனை செய்துபார்த்தல் எனக்கூறலாம்.இதை அறிவியல் பூர்வமாக கண்டுபிடித்து நெறிப்படுத்தியவர் ஜோஸ் சில்வா என்ற ஆங்கிலேயர் ஆவார்.
இன்று இதை ஐரோப்பா.அமெரிக்கா கண்டங்களில் எப்படி கற்பனை செய்து பார்ப்பது? என்பதற்கு தனிப்பயிற்சி வகுப்புகள்(workshops)நடத்திக்கொண்டே இருக்கின்றனர்.இதனால்தான் மேலை நாட்டினர் பலகோடிரூபாய்கள் சம்பாதித்துக்கொண்டே இருக்கின்றனர்.(நேர்மையான வழிமுறையில்)

Wednesday, July 29, 2009

மன அழுத்தம்

மன அழுத்தம்


மன அழுத்தம் (Stress) என்றால் என்ன?


மன அழுத்தம் என்பது வாழ்வில் மிகச் சாதாரணமானது. பெரும்பாலான மக்கள் சில சமயங்களில் மன அழுத்தத்தை உணர்வார்கள். பல்வேறு வழிகளில் மன அழுத்தம் வர வாய்ப்புள்ளது. பணி, பள்ளி, குடும்பம், உறவுகள், உடல்நலன் மற்றம் பல்வேறு வாழ்க்கை செயற்பாடுகளில் மன அழுத்தம் தோன்றுவதை நாம் உணரலாம்.

 • குடும்பச் சிக்கல்கள்
  மனைவி, குடும்ப உறுப்பினர், வாழ்க்கை துணைவர் இவர்களின் உறவுச் சிக்கல்களால் சாதாரணமாக மனஅழுத்தம் ஏற்படும். மணமுடித்தல், புது மணைபுகுதல், நோய்வாய்ப்பட்ட குடும்ப உறுப்பினரைப் பேணுதல், குழந்தை பேற பெறுதல் முதலானவை மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும்.
 • பணிச் வேலைச் சிக்கல்
  குறைவான நேரத்தில் பல்வேறு பணிகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் நேரிடலாம். இதனாலும் மன அழுத்தம் ஏற்படும். உங்கள் பணியையோ அல்லது உடன் பணி புரிபவர்களை விரும்ப முடியாமற் போவதும் மன அழுத்தம் ஏற்படுத்தும், புது பணியைத் தொடங்குவதும் செலவினங்களை குறைக்க வேண்டி வருவதும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
 • உடற்சிக்கல்கள்
  அடிபடுதல், உடற்பிணி உங்களைக் கவலைக்குள் ஆழ்த்தி மன அழுத்தத்தை ஏற்படுத்தும், சரியாக உறங்க முடியாமை, உங்கள் மன ஒருமைப்பாட்டைப் பாதித்து சாதாரண சிக்கல்களைக் கூட சந்திக்க முடியாமற் செய்யும். இதுவும் மிகுந்த மன அழுத்தத்தைத் தரும்.

நல்ல மன அழுத்தம், தீய மன அழுத்தமும்

நல்ல மன அழுத்தம் உங்களை கடினமாக உழைக்கவும், செயல்களைச் செம்மையாகச் செய்யவும் வழிவகுக்கும் நம் ஒவ்வொருக்கும் சிறப்பாகப் பணிபுரிய சிறிதளவு மன அழுத்தம் தேவை என்றாலும் அது குறைந்த அளவில் நம் கட்டு பாட்டுக்குள் இருக்க வேண்டும். தீய மன அபத்தம் அல்லது அளவுக்கதிகமான மன அபத்தம் ஒரு மனிதனிடம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி உடலில் அல்லது உணர்ச்சியின் அறிகுறிகளாக வெளிபடும். இதனால் மனிதனை அளவுக்கதிகமாக மது பானங்களைக் குடிக்கவும், உலகை மறக்க வைக்கும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகவும் தூண்டும்,

தீவிர மன அழுத்ததால் உடலில் நோய் சமாளிப்பு ஆற்றல் அழிந்து போகும். தீவிர இதயநோய், உயர் இரத்த அழுத்தம் முதலான உடல் நலக் குறைகளும் சோர்வு, ஏக்கம், கவலை போன்ற மனச் சிக்கல்களும் அம்மனிதனை வந்தடையும். மன அழுத்தத்தைக் கட்டுப் படுத்திக் கொகள்ள பழுழவது உங்களை மகிழ்ச்சியாக வாழ வைக்கும்

மன அழுத்தத்தின் அறிகுறிகளும் அடையாளங்களும்


1. உடல் அறிகுறிகள்:

 • அடிக்கடி தலைவலி வருதல்
 • மயக்கம், தலைச்சுற்றல்
 • காதில் தொடர்ந்து ரீங்கார ஒலி கேட்டல்
 • உடல் நடுக்கம்
 • மார்பில் எரிச்சல், உலைச்சல்
 • பேதியாதல் அல்லது மலச்சிக்கல்.

2. மனம் அல்லது உணர்ச்சி அறிகுறிகள்:

 • உறக்கம் வராமை
 • கவலை அல்லது அச்சம்
 • சோர்வு அல்லது தாழ்வு மனப்பான்மை
 • 'ஓ' வென அழ வேண்டுமென்ற உணர்வு
 • முன்கோபம் எடுக்க முடியாமை
 • நிற்னையம் எடுக்க முடியாமை
 • சிக்கல்களுக்கிடையே சிந்திக்க முடியாமை
 • சிக்கல்களை தீர்க்க இயலாமை

மன அழுத்தம் சிக்கல்களைத் தூண்டும்


1. மனக் கவலைக் கோளாறுகள்

 • உயர் இரத்த அழுத்தம்
 • இதயவலி
 • செரிப்பு கடற்புண் நோய்
 • தோல் வெடிப்பு, தோற் கட்டிகள்
 • மன உலைவு, தலைவலி, கடுமையான ஒற்றைத் தலைவலி
 • குடல் எரிச்சல்

2. சிறிய மனநிலை நோய்க் கோளாறுகள்:-

 • கவலையில் மூழ்கல்
 • மனநிலை தடுமாற்றம்
 • தன் உடல்நலன் பற்றி அளவுக்கதிகமாக கவலையுறுதல்
 • உணர்ச்சியில், சமூக வாழ்வில் தடுமாறுதல்
  மன அழுத்தத்தை அடக்கியாள சில வழி முறைகள்


  வாழ்வில் மன அபத்தம் ஒரு பகுதியாதலால் அதை நம்மால் முற்றிலும் விலக்கிவிட முடியாது. எனினும் அதை நாம் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி, அடக்கியாண்டால் நாம் மனம் மற்றம் உடல் நலத்துடன் இருப்போம். அதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

  1. உங்கள் விழிப்புணர்வின் அளவை அதிகரித்தல்

  உங்கள் உடல் உணரும் மன அழுத்தத்தின் அளவையும், மன அபத்தத்தைக் கொணரும் நிகழ்வுகளின் தன்மையையும் விழிப்புடன் கவனியுங்கள். நாள் முழுதுமான உங்கள் மன அழுத்தத்தை ஆராய்ந்து பாருங்கள். அச்சமயங்களில் நீங்கள் உணரும் மன அபத்த அளவை நீங்களே பத்துப் புள்ளி அட்டவணையில் பதிவு செய்யுங்கள். இதைச் செய்ய உங்கள் உடலை கூர்ந்து கவனியுங்கள். உங்கள் தசைகள் இறுகுகின்றனவா? இதயம் சரிவர துடிக்கிறதா? உங்கள் கைகளில் வேர்த்து கொட்டுகிறதா? குளிர்ந்து போகிறதா? உங்களால் வழக்கம்போல மனதை ஒருமுகப் படுத்த இயலுகிறதா? என்று பாருங்கள்.

  உங்கள் மன அழுத்தத்தின் அளவை சரிவர கணக்கிடுவதில் தேர்ச்சி பெற்ற பின்னர் உங்கள் மன அழுத்தத்தைத் தூண்டும் மக்கள், பொருட்கள், நிகழ்வுகள் பற்றி வர்ந்தாராயுங்கள். இவற்றையும் பத்துப்புள்ளி அட்டவணையில் நீங்களே பதிவு செய்யுங்கள். உதாரணமாக உங்களின் நெருங்கிய நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது உங்கள் பணி உங்கள் மன அழுத்தத்தின் அளவை தீடீரென உயர்துவன நீங்கள் உணரக்கூடும். அச்சூழ்நிலையில் அவ்வாறு உங்கள் மன அழுத்ததினை தூண்டுபவர்களை தவிர்ப்பதற்கும், அல்லது அவர்களோடு மிக இயல்பாக நடந்து கொகள்வதற்கும் பழகிக் கொள்ள வேண்டும்.

  2. உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க ஆக்கப் பூர்வமான செயல்களில் ஈடுபடுதல்:-

  i. அமைதியுடன் இருக்க பழகுதல்:-

  உடலும் மனமும் ஓய்வு கொள்ளவும், புத்துணர்வைப் பெறவும் இடையிடையே நாம் ஓய்வு கொள்ளல் மிகவும் இன்றியமையாதது. இசையைக் கேட்பது, விளையாடுவது, நடப்பது, அதிக நேரம் குளிப்பது முதலான

  உங்களுக்கு விருப்பமான, நன்கு அனுபவிக்கும் செயல்களில் ஈடுபட நேரத்தை ஒதுக்குங்கள். மன உளைவு, தளர்ச்சியடையும் நேரங்களில் வழக்கமான செயற்பாடுகளிலிருந்து நீங்கி புது செயல்களில் ஈடுபடுவது உங்களுக்கு உதவும். சிலரோ சிறு இடைவெளியை எடுப்பது பயனுள்ளது என்று கருத, வேறு சிலர் தொடர்ந்து நீண்ட விடுப்பை எடுத்துக் கொள்வது பயனுள்ளது என்று நினைக்கின்றனர். ஓய்வான பொழுதுபோக்கு, ஆழ்ந்த சுவாசப் பயிற்சி உங்களுக்கப் பயனளிக்கக் கூடும். படிப்படியாக உஉடற்தசைக்கு ஓய்வு தருதல், தியானம், யோகாசனம், உடற்பயிற்சிகள், உடலை வருடி விடுதல், காட்சி உருவகங்கள் முதலான பலவகை பொழுது போக்கு நுட்பங்கள் உள்ளன. அங்காடிகளில் இதுபோன்ற ஓய்வுப் பொழுது போக்குகளுக்கான ஒலி நாடாக்கள் கிடைக்கும். அவற்றை வாங்கிப் பயனடையுங்கள்.

  ii. உடஉற்பயிற்சிகள்:-
  உடற்பயிற்சிகள் உங்கள் மன அழுத்ததினைக் குறைக்கவும், சுயமதிப்பை வளர்க்கவும் உதவும். அவை உங்கள் நோய் தடுப்பாற்றலை முறையாகச் சீராக்குவதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் முக்கிய பங்காற்றும். நல்ல உடல் நலன், அதிக ஆற்றல், உறக்கத்தை அதிகரித்தல், நல்ல மன ஒருமைப்பாடு, இதயத்தடை (பிமீணீக்ஷீt ணீttணீநீளீ ) ஏற்படும் அபாயத்தை குறைத்தல், மனமகிழ்ச்சியுணர்வு அதிகரித்தல், தன் மதிப்பு உயர்தல் முதலியவற்றோடு உடற் பயிற்சிக்குத் தொடர்புள்ளது. உடற் பயிற்சி கடுமையாக இருக்கத் தேவையில்லை. கடுமையான மெது ஓட்டத்தைப் போலவே நாள் தோறும் 20-30 நிமிடங்கள் வேகமாக நடப்பது பயனுள்ளது. அது மன அழுத்தத்தைக் குறைக்கும் வாய்ப்புள்ளது.


  இவ்வாறே நல்ல சீரான உணவு உண்பதும் உங்கள் உடல் நலனைப் பேணும். அளவுக்கதிகமாக உண்ணுவதும் அதிக அளவில் மதுபானங்களை அருந்துவதும், புகை பிடிப்பதும் உங்கள் உடல் அழுத்தத்தை அதிகரிக்கும்.

  iii. எல்லைகளை வகுத்துக் கொள்ளல்
  நாம் செய்ய முடிந்ததைக் காட்டிலும் அளவுக்கதிகமாக செய்ய நேரிடும்போது மன அழுத்தம் ஏற்படுகிறது. வாழ்வில் அடைய வேண்டியவற்றை நாம் அளவுக்கதிகமாக எதிர் பார்க்கிறோம். துரதிருஷ்டவசமாக இதுவே நமது மனஅழுத்தத்தை அதிகரிக்கும் முதற் காரணமாகிறது. இது நமது வாழ்வில் எவை உண்மையில் இன்றியமையாதவை, நமது உண்மையான தேவைகள், விருப்பங்களை மதிப்பீடு செய்து பார்ப்பதில் பெரிதும் உதவும்.

  எங்களுக்கு இயழுமோ அங்கெல்லாம், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் நீங்கள் அடைய விரும்பும் வாழ்க்கை மாற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க முயல வேண்டும். உதாரணமாக நீங்கள் திருமணம் செய்து கொள்வது, ஒரு வீட்டை வாங்குவது, வீட்டைப் புதுப்பிப்பது, குழந்தையைப் பெறுவது, வேற பணியில் சேருவது இவையனைத்தையும் ஒரே ஆண்டில் செய்வத உங்கள் மன அழத்தத்தை அதிகரிக்கும்.

  iv. திறமையான கருத்துப் பரிமாற்றம் :-

  நாம் உடன்படவும் உதவவும் விரும்புவதால் சில நேரங்களில் கண்டிப்புடன் இருப்பது கடனமே. நாம் பிறர் வேண்டுகோளை மறுக்க இயலாததையும் உணரலாம். இதனால் நாம் திணறலாம். நமது உடன்பாட்டு மனப்பான்மையால் சிக்கல்களில் சிக்கிக் கொள்வதையும் அறிகிறோம். இதன் விளைவாக நாம் கோபத்துக்கும் உதவி செய்ய இயலாமைக்கும் ஆளாவதை உணரலாம். நாம் நம் உடல் நலனை நம் நன்மையைப் பேண விரும்பினால் 'இல்லை' என்று கூறப் பழகுவது மிகவும் இன்றியமையாதது.

  ஒரு வேண்டுகோளை மறப்பதற்கு கீழ்க்கண்டவை உதவும்.

  • வேண்டுகோள் விடுப்போனின் வேண்டுகோளை எற்பது
  • மறப்பதற்கான உங்கள் காரணங்களைக் கூறுவது
  • திடமாக 'இல்லை' என்று மறுப்பது.

  உதாரணமாக " இன்றிரவு நீங்கள் சில பணிகளை நான் உங்களுக்குச் செய்ய வேண்டுமென விரும்புவரை அறிகிறேன், ( அவரது வேண்டுகோலை அவருக்கே திருப்பிச் சொல்லலாம்) எனக்கு அவ்வாறு செய்ய விருப்பமே என்றாலும் இன்று இரவு என் குடும்பத்தில் வேறு சில திட்டங்கள் எற்கனவே வகுத்து விட்டோம் (காரணங்களைக் கூறல்) எனவே உங்களுக்கு உதவி செய்ய முடியாத நிலையில் உள்ளேன்." (முடியாது என்று கூறுதல்)"

  இவ்வாறு நீங்கள் மறுத்துக்கூறுவதற்கு முன்னர், உங்களுடைய முடிவான பதிலை வீட்டில் கண்ணாடியின் முனநின்று கூறிப்பழக வேண்டும். உங்கள் உடல்மொழி இதில் முக்கிய பங்காற்றும். நேராக அமர்ந்தோ, நின்றோ, நெஞ்சை நிமிர்த்தி, கண்களோடு கண்கள் இணைத்து மென்மையான. ஆனால் உறுதியான குரலில் பேச வேண்டும்.


  v. காலத்தைச் சவிர கையாறுதல்
  நேரம் போதாமையால் அடிக்கடி நீங்கள் மன அழுத்தத்தை உணர்வீர்கள். விரிவாக காலத்தைக் கையாளும் திட்டங்களை விளக்க முடியாமற் போனாலும் சில பொதுவான முறைகள் கீழே தரப்பட்டுள்ளன. இலக்குகளை முடிவெடுத்து முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துதல்.

  • 'இதைச் செய்' என்ற பட்டியலை வைத்திருக்க வேண்டும்.
  • உங்கள் இலக்குகளையும், செய்கைகளையும் முன்னுரிமைப்படுத்தி முக்கியமானவற்றை முதலில் செய்ய வேண்டும்.
  • ஒரு மணி நேரம் திட்டமிடல் 3-4 மணி நேரப் பணி மீதப்படுத்துமாதலால் செய்முறை படுத்துவதற்கு முன்னர் நன்கு திட்டமிட வேண்டும்.
  • நீங்கள் ஆக்கபூர்வமான மனநிலையில் உள்ள நேரத்தில் உங்கள் பெரும்பாலான செயல்களைச் செய்யவேண்டும். உதாரணமாக, சிலர் மதிய நேரங்களைக் காட்டிலும் காலை நேரங்களில் அதிகமாகப் பணியாற்றுவார்கள். அத்தகு செயலாக்க நேரங்களில் விருந்தாளிகள், தொலைபேசி பேச்சு முதலியவற்றைக்குறைத்துக்கொள்ள வேண்டும்.
  • உங்களுடைய தொலைபேசி பேச்சுக்களை ஒரே நேரத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
  • உங்களுடைய செயல்களில் சிலவற்றைப் பிறருக்கு ஒப்படைககப் பழக வேண்டும்.
  • இடைநிறுத்தவும், ஓய்வு கொள்ளவும் குறிப்பிட்டு நேரத்தை ஒதுக்க வேண்டும்.

  vi. எதிர்மறை எண்ணங்களை ஆராய்ந்து தடுங்கள்

  நமக்கு நாமே பேசிக்கொள்வது நமது எண்ணங்களையும் மனநிலையையும் பாதிக்கும். எதிர்மறை எண்ணங்களில் ஈடுபடுபவர்கள் வெகு எளிதில் கவலைக்கும் சோர்வுக்கும் ஆளாவார்கள்.

  உதாரணமாக இரண்டு மனிதர்கள் தத்தமது அலுவலகங்களுக்குள் வருகிறார்கள். அவர்களது முதலாளிகள் அவர்களைக் கோபத்துடன் பார்க்கிறார்கள். ஒருவர் உடனே குற்ற உணர்வுடன் தனக்குத்தானே "நான் நேற்று ஏதோ தவறு செய்திருப்போம் போலுள்ளது" என்று கூறிக்கொள்கிறார். அவர் அதைப் பற்றியே கவலைப்படத்தொடங்கி பணியில் சரிவர ஈடுபட முடியாமற் போகிறார். மற்றவரோ அந்தச் சூழ்நிலையைப் புறக்கணித்துவிட்டு பணியில் ஈடுபடத்தொடங்குகிறார். அவர் தனக்குள்தானே, "இன்று காலையில் முதலாளி ஏதோ கெட்ட மனநிலையில் உள்ளார் போலுள்ளது. ஏதோ ஒன்னு அவர் மனதைப் பாதிததிருக்க வேண்டும். அவர் மகிழ்ச்சியுமாறு நான் என்னவாவது செய்ய முடியுமா? என்று கூறிக்கொள்கிறார். இருவர் இருந்தது ஒரே சூழ்நிலை ஆனால் அவர்களது எண்ணங்களும், செயல்களும் முற்றிலும் மாறானவை.

  • மன அழுத்தத்தை உண்டு பண்ணும் கீழ்க்கண்ட சிலவகை எண்ணங்களைத் தவிருங்கள்:
  • மன ஆய்வு (Mind Reading ) உதாரணமாக "எனது கணவர் என் சமையலை வெறுக்கிறார் என்று நினைக்கிறேன்."
  • சோதிடம் கூறுதல், உதாரணம் "இந்தத்திட்டம் உறுதியாகத் தோல்வியுறும் பாருங்கள்".
   தீய விளைவுகள் வருமென அளவுக்கதிகமாக அச்சமுறுதல் உதாரணம்: "இந்தத் தவற்றுக்காக நான் நிச்சயமாக திட்டப்படுவேன்.
  • நிலை தடுமாற்றமுறுதல் உதாரணம் : " இதற்கு பிறகு நான் எப்போதும் யாரையும் எதிர்கொள்ள முடியாமற் போவேன்.
  • அதிகம் பொதுமைபடுத்தல் உதாரணம்: ஒவ்வொருவரும் இனி என்னை தாழ்வாக நோக்குவார்கள்
  • "shoulds, oughts and musts" உதாரணம்: நான் எதைச் செய்தாலும் அது திறமையானதாக இருந்து தீரவேண்டும்.
  • திறம்பட செய்வேன் எண்ணம் உதாரணம்:நான் ஒன்று இதைத் திறமையுடன் செய்து தீரவேண்டும் அல்லது செய்யவே முயற்சி எடுக்காதிருக்க வேண்டும்.

  vii. சமூக துணை:

  பெரும்பாலான மக்கள், தாம் மனமுடையயும்போது தமது வேதனைகளைப் பிறருக்கு எடுத்துரைப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறார்கள். முயற்சி செய்து நல்ல, தீர்ப்பு ஏதும் கூறூத கேட்பவரை அடையாளங்களை காணுங்கள். உதாரணமாக உங்களுக்கு நம்பிக்கைக்குரிய குடும்ப உறுப்பினர், அல்லது நெருங்கிய நண்பர், அல்லது நீங்கள் நம்பும், எளிமையாகப் பழகும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். நன்கு கேட்போரிடம் மனத்திறந்து பேசுதல் ஒருவரது சிக்கலின் உண்மைநிலையை, இயல்புருவைக்காண உதவும் மனதிலேயே புதைத்து வைத்து குமுழுறும் விசயங்களை பிறருக்கு எடுத்துரைப்பதே மன அழுத்தத்தைப் பெருமளவில் குறைக்கும்.


  நாம் எப்போது உதவியை நாடவேண்டும்?


  உங்களுக்கு ஆழ்ந்த மன அழுத்தம் ஏற்படும்போதும் எதிர்வரும் மன அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமற் போகும்போதும் தொழில்ரீதியான கருத்துரைப்போர்களைக் கலந்து சிந்திப்பது மிகவும் அறிவுபூர்வமானது. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்திச் சீராக்கும் நுட்பங்களை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். சில சமயங்களில் சில அறிகுறிகளைத் தனிக்க மருந்துகளும் தேவைப்படலாம். மென்மையான சோர்வையகற்றும் மயக்கப்பொருட்கள் அம்மருந்துகளில் அடங்கியிருக்கலாம். உங்கள் மருத்துவர் அத்தகைய மருந்துகள் உங்களுக்குத் தேவைப்படும் என்றால் பரிந்துரைப்பார்

Tuesday, July 28, 2009

குண்டலினி

எளிய முறை குண்டலினி

எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம். காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம். புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும். ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்.

மனம் வேறு உயிர் வேறு என்று தான் பொதுவாக மக்கள் கருதுகிறார்கள். அப்படியல்ல. உயிரே தான் படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. உயிர் உடலில் இயங்கும் போது எக்காரணத்தாலும் உடலில் எந்தப் பகுதியிலேனும் அணு அடுக்கச் சீர் குலைந்து போனால் உயிருக்குத் துன்ப உணர்ச்சி ஏற்படுகிறது. அவ்வுணர்ச்சியிலிருந்து மீள ஒரு பொருளோ, செயலோ, பிறர் உதவியோ தேவைப்படுகின்றது. அப்போது தேவை என்ற மனநிலையாக உயிர் ஆற்றல் ஓங்கி நிற்கின்றது. பின் அதுவே முயற்சி, செயல், இன்ப துன்ப விளைவுகள், அனுபோகம், அனுபவம், தெளிவு, முடிவு என்ற நிலைகளாகப் படர்ந்து இயஙகுகின்றது. இந்த உண்மை யோகத்தின் முதல் படியாகிய ஆக்கினை தவப்பயிற்சியால் தெளிவாக விளங்கும்.

ஆக்கினை சக்கரம்

உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலைதான் மாயை எனப்படும். உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகள் அறுவகைக் குணங்களாகும்.

அவையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்வேட்பு, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்பனவாகும். அறுகுண வயபட்டு மக்கள் செயலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம்.

ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகின்றது. மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது தனது ஆற்றலை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை மணம் இவையாக மாற்றி அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது.

தனது இயக்க விளைவுதான் இன்பமும் துன்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவு பெற்றுத் தன் ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும். தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும் தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டு சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவுக்குத் திறமை பெருகும். மெய்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில் ஆக்கினைச் சக்கர யோகமேயாகும். ஆசானால் எழுப்பப் பெற்ற குண்டலினி சக்தியின் இயக்க விரைவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கும். உடல்நலம், மனநலம் ஓங்கும். முகம் அழகு பெறும்.

Monday, July 27, 2009

ரீகி


ரீகி, Dr. Mikao usui என்பவரால் 18 ம் நூற்றாண்டின் கடைசியில் கண்டுப்பிடிக்கப்பட்டது. ரீகி என்றால் “பிரபஞ்ச உயிர்சக்தி” என்று பொருள். ரீகி சக்தி மிகுவும் சக்தி வாய்ந்தது.சக்தி வாய்ந்த ஒரு சுய சிகிச்சை முறை. இதை பண்ணணினால் உடனே முழு மன அமதி, உடல் தளர்வு, எல்லாம் கிடைக்கும்.

“ரீ” “கி” என்ற இரண்டு வார்த்தைகளின் கூட்டுதான் ரீகி. “ரீ என்றால் பிரபஞ்சம் “கி” என்றால் உயிர் சக்தி. உயர்ந்த நிலையில் உள்ள சக்தியின் மறு டிவம்தான் ரீகி.

ரீகி என்பது Rei-Ki (ரீ-கி), (Rei) ரீ என்பது Universe, (Ki) கி என்பது மின் காந்த சக்தி, ரீகியை Universal Life Force என்று சொல்கிறோம். அண்ட சராசரத்தில் நிரம்பி இருக்கின்ற மின்காந்த சக்தியை (universal Life Force) “தலை” வழியாக எடுத்து “கை” வழியாக பாய்ச்சும் முறையைத்தான் ரீகி என்கிறோம்.

நம் வாழ்க்கை முறை

நம்முடைய சக்தியின் இருப்புக் குறைய குறையத்தான் நாம் ஆரோக்கியம் இழக்கின்றோம். ரீகி என்னும் இந்த கலையில் கை மூலம் அண்ட சராசரத்திலுள்ள சக்தியை கிரகித்து, உடம்பில் அனுப்பி தீய சக்திளை விரட்டி நல்ல சக்திகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஹீலிங், கையை வைத்து குணப்படுத்தும் சிகிச்சை, காஸ்மிக் சக்தியை உபயோகப்படுத்தும் சிகிச்சை சிறிது காலமாக மக்கள் மத்தியில் பிரபலம் ஆகிக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் ஏழையோ, பணக்காரனோ, தெருவில்போகும் பிச்சைக்காரனோ அவர்களுக்குள்ளே ஒரு உலகமே அடங்கியுள்ளது. அவர்கள் உடம்பில் காஸ்மிக் சக்திதான் உள்ளது. நாம் எப்பொழுதும் நமக்குள் இருக்கும் இந்த சக்தியை வெளி உலகத்திற்கு பரப்பிக் கொண்டு இருக்கின்றோம்.

பூமியில் உள்ள அண்ட சராசரத்தில் உள்ள சக்தியை கிரகித்து நம்மையும் குணப்படுத்தி, மற்றவர்களையும் குணப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் இந்த மாபெரும் சக்தியை கொடுத்திருக்கிறார். ஆனால் நாம் இதையெல்லாம் விட்டு விட்டு எல்லா நேரமும் நம்முடைய பேராசையை பூர்த்தி செய்தவற்காக நம்மை பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கின்றோம்.

அதனால் நம்முடைய, எண்ணம், சொல், செயல் எல்லாம் சுயநலமாக உள்ளது. இதனால் உலகில் தோல்வி மனப்பான்மையும், அராஜகமும், கோபமும், பெருகி விடுகின்றது.

இந்த கலியுகத்தில் இந்த மாதிரி சக்தி இருப்பது இறைவன் நமக்கு கொடுத்து இருப்பது இந்த உலகைக் காப்பதற்காகத்தான்.

ரீகியை எப்படி கற்றுக்கொள்வது ?

ரீகியைக் கற்றுக்கொள்ள பள்ளியிலோ, கல்லூரியிலோ படித்த பொது அறிவு மட்டும் போதும். ஒரு மாஸ்டரின் முறையாக கற்றுக்கொள்ள வேண்டும்.

ரீகி தீட்சை பெற்றவுடன் அண்ட சராசரங்களில் உள்ள சக்தி தலைவழியாக கைகளுக்கு வந்தடைகிறது. கைகளில் குறுகுறு என்று போவது தெரியும். கைகளில் இதமான சூடு இருக்கும். பிறகு போகப் போக மற்றவர்களுடைய சக்தியின் ஓட்டத்தை அறிய முடியும். ஒரு மின்காந்தம் உடலில் பாய்வது போல் ஒரு ஆனந்தமான ஒரு உணர்வு ஏற்படும்.

அன்புள்ளம் வேண்டும்

ரீகிக்கு அன்பு பொங்கும் உள்ளம் வேண்டும். “கருணை பொங்கும் உள்ளம் கடவுள் வாழும் இல்லம்” என்று சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன். நாமும் நல்லா இருக்கணும் மற்றவரும் நல்லா இருக்கணும் என்ற நல்ல எண்ணம் வேண்டும்.

ரீகி மாஸ்டர் என்கிற முறையில் உங்களிடம் ஒரு உண்மையைச் சொல்லுகிறேன். அன்புடன் கையை வையுங்கள் வியாதி சரியாகிவிடும். அழும் குழந்தைக்கு அம்மா தட்டிக்கொடுப்பதும், நமக்கு வயிற்று வலி என்றவுடன் தானாக கைகள் சென்று அந்த இடத்தில் வைக்கிறோம். வலி போய்விடுகிறது.அன்பு தான் இன்ப ஊற்று. அன்பு உள்ளம் வேண்டும். கலியுகத்திற்கு மனித சமுதாயத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட பெரிய பொக்கிஷம் இந்த ரீகி. ஆனால் இது மிகவும் சுலபமாக இருப்பதால் மக்கள் அதை நம்ப மறுக்கிறார்கள். இந்து மத தத்துவங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்தால் அதில் சொல்லப்பட்டது எல்லாம் ரீகி தான்.

நம் மக்களுக்கு நம்முடைய முறை என்றாலே ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. அது இன்னும் போகவில்லை. டாக்டர். மிக்கா உஷி இ ரீகியை எளியமுறையில் பரப்பி விட்டார்.

நம்மிடமே எல்லா சக்தியும் உள்ளது. இதைத்தான் “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் எல்லாம் தேடி அலைகின்றார் ஞான தங்கமே” என்கிறார் கவிஞர் கண்ணதாசன். “வருமுன் காப்போம்” தான் ரீகி.

ரீகியின் பயன்கள்

மனத்தளர்ச்சி நீங்கி நிம்மதி தோன்றும். மனத்தளர்ச்சி, மனச்சோர்வு, பயம், எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிடும். வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தோடு, புதிய நம்பிக்கையோடு பார்க்கக்கூடிய அளவிற்கு மன மாற்றம் உண்டாகும்.

சுயசிகிச்சை மூலம் நம்மை நாமே நேசிக்கும் குணமும், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளும் எண்ணமும் உண்டாகிறது. ரீகி மூலம் மனத்தெளிவு உண்டாகிறது. ஆக்கப்பூர்வத் திறன் இறைவனுக்கும் நமக்கும் உள்ள ஒரு இணைப்பைப் புதுபித்துக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு ரீகி பண்ணும் போது அவர்களும் இதையே உணர்வார்கள்.

நாம் அன்றாடம் கடைபிடிக்கும் முறைதான் இந்த ரீகி ஏதோ தேவையில்லாத முறை என்று நினைத்து விடாதீர்கள். வாழ்க்கையில் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய கலை இது. இது ஒரு வாழ்க்கை கலை, வாழும் கலை, வாழ்க்கை விஞ்ஞானம்.

இதைக்கற்றுக்கொண்டால் வாழ்க்கையில் எல்லா விதமான துன்பங்களும் நீங்கிவிடும். இது ஒரு ஆன்மீக ரீதியான மனதையும், உள்ளத்தையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் கலை. இந்த கலியுகத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட மாபெரும் பரிசு. இதை நீங்கள் கற்றுக்கொண்டால் வாழ்க்கை, வளமாகவும்,இன்பமாகவும் இருக்கும்.

Sunday, July 26, 2009

பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறைWelcome


பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்தினால் நோய்த்தடுப்பு சக்தி அதிகரிக்கும். இந்தியாவின் பண்டைய ரிஷிகள் பிராண சக்தியை நோய்களைக் குணமாக்கப் பயன்படுத்தினார்கள். பண்டைய முறையின் அடிப்படை, இன்றைய மனநிலை ஆகியவற்றின் அடிப்படையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் தோன்றி வடிவமைக்கப்பட்டது பிரானிக் ஹீலிங் () என்ற இந்தப் புதிய சிகிச்சை முறை.

டாக்டர்கள் கைவிட்ட நோயாளிகளையும் பிரானிக் ஹீலிங் முறையில் எளிதாகக் குணப்படுத்திவிடலாம்.

பக்கவாத நோயாளிகள் வாரம் இரண்டு நபர் பிரானிக் ஹீலிங் சிகிச்சை எடுத்துக் கொண்டால்கூட விரைந்து குணமாகிவிடுவார்களாம்.

நவீன மருத்துவத்தின் தந்தையான ஹிப்போக்கிரட்டீஸ் கூட நம்முடைய உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் சக்தி படைத்தது என்று கூறியுள்ளார். உடலில் நோயால் பாதிப்படைந்துள்ள பகுதிக்குப் பிராண சக்தியை அளித்தால் போதும். விரைந்து குணமாகிவிடலாம்.

எப்படி சிகிச்சை அளிக்கின்றனர்?

நம் உடலைச் சுற்றி ஐந்து அங்குலம் வரை ஆரா () எனப்படும் ஒளி வட்டம் காணப்படுகிறது. இது ஆரோக்கியக் கவசமாக இருந்து நம் உடலில் நோய் தோன்றுவதற்கு மூன்று மாதம் முன்பே இந்த ஒளி வட்டக்கவசம் பாதிக்கப்படுகிறது. ரஷ்ய விஞ்ஞானி கிரிலான் என்பவர் இந்த ஒளி வட்டத்தைப் படமாகக்கூட எடுத்துக்காட்டியுள்ளார்.

எனவே, நோயாளியைத் தொடாமலேயே பிரானிக் ஹீலர் இந்த ஒளி வட்டத்திற்குச் சிகிச்சை அளித்துக் குணப்படுத்துவார்.

மூட்டுவலி, சர்க்கரை நோய், இதய நோய்கள், இரத்த அழுத்தம், புற்று நோய், மனக்கோளாறு, மூச்சுக் கோளாறுகள் முதலியவற்றைச் சிரமமின்றி எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம். நாட்பட்ட நோய்க்குச் சிகிச்சை எடுத்துக் கொள்பவர் பிரானிக் சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஐந்து மடங்கு வேகத்தில் விரைந்து குணமாவார். பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை இது.

தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளப் பத்து நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து வெளிவரும் மூச்சு வழியாக தன் நோயை வெளியே தள்ளுவது போல் மனக்கண்ணால் பார்த்தால் போதும். எந்த அளவு நல்லெண்ணத்துடன் நோய்ப்பட்ட சக்தியை விடா முயற்சியுடன் கழிவுகளாக வெளியே தள்ளுவதுபோல காட்சியாகப் பார்கிறோமோ அந்த அளவுக்கு விரைந்து குணமாகிவிடுவோம்.

நம் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்கள் உடலைத் தொடாமலேயே நம் உள்ளங்கைகளை நோயுள்ள பகுதியில் காட்ட வேண்டும். நம் கையிலிருந்து செல்லும் சக்தி அவர்கள் உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, அவர்கள் மூச்சை வெளியே தள்ளுவது போலக் கற்பனை செய்தால் போதும், நல்ல பலன் கிடைக்கும்.

இதில் பயிற்சி பெறப்பெற நோயாளியைப் பார்த்தவுடனேயே உடலைச் சுற்றியுள்ள ஒளி வட்டத்தில் எங்கே கோளாறு என்பதை நோயாளியின் உடலைத் தொடாமலேயே வெறும் கைகளால் ஸ்கேன் செய்து எளிதில் சிகிச்சை அளித்துவிடலாம்.

தியானம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள் தினமும் தங்கள் உடலில் உள்ள கெடுதலான பொருட்கள் உருண்டு திரண்டு சாம்பல் நிறத்தில் தங்கள் மூச்சு வழியாக வெளியேறுவதாக கற்பனை செய்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடலைச் சுற்றியுள்ள ஆரோக்கிய கவசம் பாதுகாப்பாக இருக்கும்.


காந்த மருத்துவம்


காந்த மருத்துவம்
சிறந்த மாற்று மருத்துவ முறையில் ஒன்றாக திகழ்வது காந்த மருத்துவம். இம்முறையில் மருந்து, மாத்திரை, ஊசி என்று எதுவுமில்லை. அறுவை சிகிச்சைகள் இன்றி பக்க விளைவுகள் ஏதுமின்றி ஓர் எளிய சிகிச்சை முறை இது.

சித்தா, ஆயுர்வேதம் போன்ற மற்ற மருத்துவ முறைகளுடன் காந்த மருத்துவத்தை ஒரு துணை மருத்துவமாகவும் பயண்படுத்தலாம். அதனால் நோய் விரைவில் குணமாகும்.

காந்த சிகிச்சை முறையில் உள்ளுக்கு அருந்தும் மருந்து காந்த நீர் மட்டுமே. இது உடலின் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் ஜீரண உறுப்புகள், நரம்புகள், ரத்தகுழாய்கள் ஆகியவற்றில் உண்டாகும் குறைகளை நீக்குகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

உடலில் சேரும் கொழுப்புகள் (கொலஸ்ட்ரால்) சிறுநீரகத்தில் ஏற்படும் கல் முதலியவற்றை கரைக்கும் தன்மை காந்தநீருக்கு உண்டு.

பல் வலியையும், பல் கூச்சத்தையும் நீக்கும் திறனும் காந்த நீருக்கு இருக்கிறது. காந்தநீரானது உடலில் தேவையற்ற கழிவுகளை நீக்கி ஆரோக்கியத்தை பேணிக் காக்கிறது.

சைனஸ், உடல் பருமன், தீராத நாட்பட்ட தலைவலி, மூட்டுவலி, இடுப்பு வலி, கழுத்துவலி, பெண்கள் மாதவிடாய் தொடர்புடைய கோளாறுகள் போன்ற பல நோய்களை காந்த மருத்துவத்தின் மூலம் குணமாக்கலாம்.

பயன்கள் :

நம் உடம்பிலுள்ள நோய் எதிர்ப்பு திறனை வளர்த்து வியாதிகளை நீக்குகிறது. இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தி உடலுறுப்புகளை சரியாக இயங்கச் செய்கிறது.

நோய் உள்ள இடங்களில் வட துருவ, தென் துருவ காந்த வட்டுகளை வைத்து சிகிச்சை செய்தால் நோயின் வீரியம் படிப்படியாக குறைந்து அறவே நீக்கச் செய்யலாம்.

தேவைப்பட்டால் உணவிலும் கொஞ்சம் மாறுதல்களை செய்துகொள்ள வேண்டும். கட்டுப்பாடான உணவு முறையும் காந்த மருத்துவமும் நோயை விரைவில் குணப்படுத்தி இயற்கை நல் வாழ்வை அளிக்கும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை :

* காலை, மாலை மட்டுமே காந்த மருத்துவ சிகிச்சைக்கு ஏற்ற நேரங்கள்.

* காந்த வட்டுகளும், காந்த பட்டையும் சிகிச்சைக்கு அவசியம்.

* சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்தோ சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

* சாப்பிட்டதுமே காந்த நீரை அருந்தக் கூடாது - ஒரு மணி நேரம் கழித்தே அருந்தலாம்.

* காந்த வைத்தியம் செய்து கொண்ட அரைமணி நேரத்திற்குள் குளிக்கக்கூடாது, குளிர்ந்த பானங்கள் எதுவும் அருந்தக்கூடாது. குளிர்ந்த நீரும் குடிக்கக் கூடாது.

* பேறுகால பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் காந்த மருத்துவம் செய்வது தவறு.

* காந்த மருத்துவம் எடுத்துக் கொள்ளும் போது கைக்கடிகாரத்தை கழற்றிவிடுவதுடன் பேட்டரிகளில் இயங்கும் பொருட்களான கால்குலேட்டர்,
டிரான்ஸிஸ்டர் ரேடியோ முதலியவற்றுடனும் உடலுக்கு தொடர்பு கூடாது. சாவி போன்ற இரும்பாலான எந்த பொருளும் இருக்கக் கூடாது.

* மர நாற்காலி, மரப்பலகை அல்லது பாயின் மீது உட்கார்ந்து தான் காந்த சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.

* காந்த கருவிகளை இதயத்தின் அருகிலும், மூளையின் அருகிலும் பயன்படுத்தக்கூடாது. மருத்துவரின் அறிவுரைப்படி நோய்க்கு தக்கவாறு ஏற்ற காந்த கருவிகளை பயன்படுத்துவது மிகவும் இன்றியமையாதது.

காந்த நீர் தயாரிப்பது எப்படி?

மத்திய தர காந்தங்களை ஒரு மரப்பலகையில் வைக்க வேண்டும். கொதிக்கவைத்து ஆறிய குடிநீரை இரு ப்ளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டில்களில் நிரப்ப வேண்டும். ஒரு பாட்டில் நீரை காந்தத்தின் வட துருவத்தின் மீதும் மற்றொரு பாட்டில் நீரை தென் துருவத்தின் மீதும் வைத்து எட்டு மணி நேரம் கழித்து எடுக்க வேண்டும். இரு பாட்டில் நீரையும் பிறகு ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கலக்கவும். இதை மீண்டும் தனித்தனி பாட்டில்களில் ஊற்றி மரப்பலகை மீது வைக்க வேண்டும். இந்த நீரே இரு துருவ காந்த நீர். பெரியவர்கள் 2 அவுன்ஸ் வீதம் குடிக்க வேண்டும்.

இரண்டாவது முறை :

கொதித்து ஆறிய குடிநீரை ஒரு பாட்டிலில் நிரப்ப வேண்டும். அதை மத்தியத்தர காந்தத்தின் தென் துருவத்தின் மீது வைக்க வேண்டும். இன்னொரு மத்திய தர காந்தத்தின் வட துருவம் அதன் மேல்பகுதியில் படுமாறு வைக்கவேண்டும். 8 மணி நேரம் கழித்து காந்தங்களை விட்டு நீரை எடுத்து ஒரு மரப்பலகை மீது வைக்க வேண்டும். இதுவும் இரு துருவ நீராகும்.

காந்தங்கள் :

அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை எடையுள்ள நடுத்திறன் காந்தம் மற்றும் ஈ என் டி காந்தங்கள் ஆகியன இம்மருத்துவத்திற்கு தேவையான பொருட்கள். அத்துடன் காந்தப் பட்டைகளும் தேவை. ஒவ்வொரு நோய்க்கும் உரிய பட்டைகளை நோய்க்குரிய இடத்தில் கட்டிக்கொண்டு சிகிச்சை அளித்துக் கொள்ளலாம்.

அந்த வகையில் தலைப்பட்டை, கழுத்துப்பட்டை, இடுப்புப்பட்டை, வயிற்றுப்பட்டை, நீரிழிவு பட்டை, ஆஸ்துமா பட்டை, மூட்டுப்பட்டை, இரத்த அழுத்தப்பட்டை, காந்த மூக்குக் கண்ணாடி என இதில் பல வகைகள் உள்ளன. இவற்றை உரிய காந்த மருத்துவரை அணுகிப் பெறலாம்.

Saturday, July 18, 2009

சூரிய கிரகணம்


சென்னை: ''வரும் ஜூலை-22 ஆம் தேதி ஏற்பட உள்ள சூரிய கிரகணத்தை வெறும் கண்களினால் பார்க்கக் கூடாது அதற்கான பிரத்யேக கண்ணாடி வடிவமைக்கப்பட்டுள்ளது."என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் இராமலிங்கம் தெரிவித்தார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்..' வருகிற 22 ஆம் தேதி காலை 5.52 முதல் 6.21 வரை சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்தியாவில் குஜராத்,அஸ்ஸாம் வழியாக 170 மைல்கள் தொலைவுக்கு சீனாவரை இந்த கிரகண நிழலை காணமுடியும்.

சென்னையில் 68 சதவீதம் இந்த கிரகணத்தை காண முடியும். சென்னை மெரினா கடற்கரையில் தீருவானமியூர் திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் இந்த கிரகணத்தை பார்க்க அறிவியல் இயக்கம் சார்பில் 500 கண்ணாடிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் 10 இடங்களில் இந்த கண்ணாடி மூலம் கிரகணத்தை பார்க்க வழி செய்யப்பட்டுள்ளது. இந்த கிரகண காலத்தில் நாம் இயல்பாக எல்லா வேலைகளையும் செய்யலாம்.

நிலநடுக்கம், சுனாமி ஆகிய பாதிப்புகள் ஏற்படாது. வீட்டில் எந்த பரிகாரமும் செய்ய வேண்டாம்.

இவ்வாறு சொல்வதெல்லாம் மூட நம்பிக்கையின் அடிப்படையிலானது. அறிவியல்ரீதியானது இல்லை." என்றார்.

Friday, July 17, 2009

வாழ்நாளை உயர்த்தும் பழக்கங்கள்Air

காற்று நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது. இது நன்கு வீட்டினுள் வர ஜன்னல்களைத்திறந்து வையுங்கள். குறிப்பாக, படுக்கை அறையில்பாதுகாப்பையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

Breathe

நன்கு ஆழ்ந்து சுவாசியுங்கள். குறிப்பாகக் காலையில் ஆழ்ந்து மூச்சுப் பயிற்சிசெய்யவும். இளமையைப் புதுப்பிக்கும் எளிய வழி இது.

Chill

கடும் குளிரும் கடுமையான வெப்பமும் இடர்களை உண்டாக்கும். முடிந்தவரைஇவையிரண்டையும் தவிர்த்து, அன்றாட வாழ்வை ஒழுங்குபடுத்தி வாழுங்கள்.

Dwell

தூய்மையான இடத்தில் வாழுங்கள். அசுத்தமான வீடுகளில் வசிப்பதால் உடல் நலத்திற்கு எளிதில் தீங்கு உண்டாகும்.

Eat

வாழ்வதற்காக உணவு உண்ணுங்கள். உண்பதற்காக வாழ்பவர்கள் மிகுந்தசிரமத்திற்குள்ளாவார்கள்.

Fly

ஈக்களும் பிற பூச்சியினங்களும் தூய்மையைக் கெடுக்கும். கொசுக்கள் நோய்நுண்மங்களை காற்றில் பரப்பும். இந்த இரண்டும் உங்கள் வீட்டில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Getup

அதிகாலையில் எழுந்துவிடுங்கள். இதனால் ஒவ்வொரு நாளையும் சிறப்பாக ஆர்வத்துடன் தொடங்கி வாழலாம்.

Herbs

உடலுக்கு நன்கு ஊட்டம் தரத்தக்கவை மூலிகைகள், பழங்கள், காய்கறிகள். அதாவதுஇயற்கை உணவுவையே உட்கொள்ளுங்கள். செயற்கை உணவைத் தவிருங்கள்.

Illness

பெரும்பாலும் கவனமின்மையால்தான் நோய்கள் தாக்குகின்றன. ஆறுமாதத்திற்கு ஒருமுறை மருத்துவ செக்கப் செய்து கொள்வது நல்லது.

Jogging

காலையோ அல்லது மாலையோ மெல்லோட்டம் செல்வது உடற்கட்டை நன்கு பராமரிக்க உதவும். (மெல்லோட்ட நேரம் : 30 நிமிடங்கள்)

Keep

உலகில் அனைத்து நன்மைகளையும் தரக்கூடியது தூய்மை. தினமும் குளியுங்கள்.தூய்மையான ஆடைகளையே எப்போதும் அணியுங்கள். சுத்தமாக வாழுங்கள்.

Laugh

மகிழ்ச்சியாக வாழுங்கள். கஷ்டங்களின் போது தன்னம்பிக்கையுடன் மனம்விட்டுச்சிரியுங்கள். சிரிப்பு கஷ்டங்களைத் துரத்தும்.

Meditate

ஆழ்ந்து சிந்தித்து வெல்லவும், உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கவும் தினமும்தவறாமல் தியானம் செய்யவும்.

Nicotine

ஒரு போதும் புகைபிடிக்காதீர்கள். சிகரெட்டினால் ஒரு சிறு நன்மையும் இல்லை.வலிந்து நச்சு வலையில் விழாதீர்கள்.

Overweight

அதிக எடை ஏறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அளவான உணவு, உடற்பயிற்சிமுதலியவற்றால் உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மாரடைப்பைத்தவிருங்கள்.

Province no meat

இறைச்சி உணவுகள் உங்கள் உணவுத்தட்டில் இடம் பெறவே கூடாது. இவை நஞ்சு மிகுந்த உணவுகள்.

Quietness

ஒரு நாளில் இருபது நிமிடங்களாவது பரபரப்பு இல்லாமல் அமைதியாகவும் ஓய்வாகவும் இருங்கள். இதனால் நரம்புமண்டலம் சிறப்பாக இயங்க போதுமான அளவு ஓய்வும் இணக்கமும் நரம்புகளுக்கு கிடைக்கின்றன.

Resist

மனம் அமைதியாக இருந்தால் உடல் ஆரோக்கியம் எப்போதும் சீராக இருக்கும்.எப்போதும் நேர்மையான செயல்களை மட்டுமே கவனமாகச் செய்து வந்தால் மனம் எப்போதும் அமைதியாக இருக்கும். குறுக்கு வழிகள் தான் மன அமைதியைக் கெடுக்கின்றன.

Think

நம்மிடம் உள்ள செல்வத்தைவிட உயர்ந்தது நமது உடல்நலம்தான். எனவே, உங்கள் உடல்நலம் பற்றி சிந்தித்து அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஏற்ப வாழுங்கள்.

Ulcer

மதுபானங்கள் அருந்தாதீர்கள். கவலைப்படாதீர்கள். இரண்டும் வயிற்றில் புண்களைஉண்டாக்கும்.

Value

மருத்துவ ஆலோசனைகளின் மதிப்பை உணர்ந்தால், அவற்றைப் பின்பற்றினால் எல்லாவிதமான நோய்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

Wisdom

உண்மையான அறிவு நமக்குத் தேவை. இதுவும், ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கை முறையும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உதவும்.

X-Ray

உங்களுக்குத் தெரியாமல் இருக்கும் பிரச்னைகளையும் நோய்களையும் எக்ஸ்ரேயும்,உங்களின் இரத்தம், சிறுநீர் போன்ற பரிசோதனைச்சாலை முடிவுகளும் தெள்ளத்தெளிவாக வெளியே காண்பித்தருளும். எனவே, இதுபோன்ற நவீன பரிசோதனைகளைத் தவிர்க்காதீர்கள்.

You are

உங்கள் வேலைகளுக்குச் சமமாக தூங்கும் நேரமும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கடின உழைப்புத் தேவை. அதற்காக அடிப்படை ஓய்வைத் தவிர்க்கவேண்டாம்.

உடல்நலத்தில் அக்கறை கொள்ளாவிடில் எதையும் செய்யாத பிறந்தோம் வாழ்ந்தோம்என்ற ஒன்றுமே இல்லாத, பூஜ்யமாக நம் வாழ்க்கை முடிந்துவிடும். அதற்கு இடம்கொடுக்காதீர்கள்.