Saturday, August 27, 2011

மனோசக்தி பாடம் 7

தியானம்மன அலைச் சுழலை Beta Frequency யிலிருந்து படிப்படியாகக் குறைக்கும் கலைக்கு தியானம் என்று பெயர்...
மனதின் அதிர்வெண்கள்
14 - 40 Cycles / Sec Beta
8 - 13 Cycles / Sec Alpha
4- 7 Cycles / Sec Theta
1 - 3 Cycles / Sec Delta

அதிர்வெண்களை EEG(Electro Encephologram) மூலம் அறியலாம்.
நாம் பெரும்பாலும்
பீட்டா நிலையிலேயே இருக்கின்றோம். இந்த நிலை உணர்ச்சிவயப்பட்ட நிலை.

ஆல்பா நிலை கொஞ்சம் அமைதியான நிலை. தியானம் செயதால் இது கிடைக்கும்.

தீட்டா நிலை ஆல்பாவிற்கு அடுத்த நிலை ஆழமான அமைதி.

டெல்டா நிலை இது மருத்துவ அறிவியலில் கோமா நிலை. இங்கே மனிதனுக்கு சுயநினைவு இருப்பதில்லை.
ஆனால் தவத்தில் பழகப் பழக மனம் இறைநிலையுடன் தொடர்பு கொள்ளும்
இதுதான் சமாதி...
அஷ்டாங்க யோகத்தின் கடைசிக் கட்டம் சமாதி....
யோகத்தின் வகைகள்
யம, நியம, ஆசன, ப்ரத்தியாகாரா, ப்ராணாயாமா, தாரணா, தியானா, சமாதி
என எட்டு நிலைகள் கொண்டதே யோகம் . இதில் தியானம் என்பது ஒரு படி
சக்கரங்கள்
கண்ணுக்கு தெரியாமல் (சூட்சமத்தில் ) இருக்கக்கூடிய சக்தி மையங்கள் 7

மூலாதாரம்,
ஸ்வாதிஸ்டானம் ,
மணிப்பூரகம் ,
அனாகதம்,
விசுத்தி ,
ஆக்ஞை ,
மற்றும் சஹஸ்ராரம் ( ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை )

Thursday, August 25, 2011

மனோசக்தி பாடம் 6

யோகா முத்திரைகள்


முத்திரை யோகம் ஹதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.
ஆயுர்வேதம் மற்றும் யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த
“பஞ்ச மஹாபூதங்கள்” ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி. ஆகாயம் “ஈதர்” என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கபதத்துவமாக சொல்லப்படுகிறது. வாயு உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து வாயு உடலில் வாதத்தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. அக்னி பித்தம். லகுவானது. வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த பஞ்சபூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.
நமது கைகளின் ஐந்து விரல்கள் பஞ்ச பூதங்களை குறிக்கின்றன
1. கட்டைவிரல் – அக்னி
2. ஆள்காட்டி விரல் – வாயு
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – பூமி
5. சுண்டுவிரல் – நீர்.
இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால்
உடல் நலம் கூடும்.
முத்திரைகளை பயிலும் முறை
1. “பத்மாசனம்” போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.
2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.
3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு “சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.
4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.
5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.
6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.
முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில
1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.
பயன்கள் – களைத்தை உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.
2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.
பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி ‘பிராண முத்திரையுடன் செய்தால்’ தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.
3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.
பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சலியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.
4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.
5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.
6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.
7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.
பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.
8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.
பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.
9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.
பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
எச்சரிக்கை
1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.
2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.
11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.
பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.
12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.
பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.
நமது பழங்கால முனிவர்கள் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்.

Friday, August 19, 2011

மனோசக்தி பாடம் 5

ஆழ்நிலை தியானம்


ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. அத்துடன் இதன் பண்பும், பயனும் பல அறிவியல் ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே இப்பயிற்சி முறை மொழி, சமயம், மார்க்கம் போன்ற குறுகிய எல்லைகளையெல்லாம் கடந்து பரந்து விரிந்து நிற்கிறது. மன இறுக்கமும், மனத் தொய்வும், மகிழ்ச்சியின்மையும் மாற்றுகின்ற ஒரு அரிய மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பரபரப்பு, மனக்கலக்கம், மனத்தவிப்பு, மனத்தொய்வு, தூக்கமின்மை, மன இறுக்கம், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய்க்கு முன் தோன்றும் வேதனை, மலக்குடல் குறைபாடு போன்ற பல குறைபாடுகளை நீக்கவல்லது.
இந்த தியான முறையெனக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக மூப்படைவதையே இத்தியான முறை தடை செய்யக் கூடும் என ஒரு ஆய்வு முடிவு உறுதிப்படுத்துகிறது.
அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.

ஆழ்நிலை தியானத்தின் நன்மைகள் பற்றிப் பேசுகின்ற போது “ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனத்தின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்த கற்றுக் கொள்வது என்பது உடல் நலம் பேண உதவுகின்ற ஒரு நல்ல முறையாகும். நாள் தோறும் நமது நரம்பு மண்டலத்தில் ஏற்படுகின்ற தேய்மானங்களை நீக்கி நரம்புகளை நெறிப்படுத்தி உள்ளத்திற்குப் புத்துணர்ச்சியும், புது உணர்வும் தருவதுடன் நமது தடுப்பாற்றல் சக்தியை உயர்த்தவும் மனநிலை தொடர்புடைய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது” என்று தமது ‘மெடிடேசன் பார் எவிரி படி’ (பெண்குயின்) என்னும் நூலில் குறிப்பிடுகிறார் புகழ் மிக்க உளவியலாரான லூயி புரோடோ.
இலக்கின்றி அலைகின்ற மனதை அடக்கி, அதன் பொருளற்ற புலம்பல்களை நிறுத்தி உள்ளத்தில் சாந்தியும், அமைதியும் நிலவச் செய்வதே தியான முறையாகும். ஆனால் இதைச் செய்கின்ற வழி ஒவ்வொரு தியான முறைக்கும் வேறுபடுகிறது.

ஆழ்நிலை தியானத்தைப் பொருத்தவரை அமைதியான முறையில் அமர்ந்து ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் மனதிற்குள் ஜெபம் செய்வதாகும். மனப்பாடம் செய்கின்ற காலத்தில் மனம் சில நிமிட நேரம் மனத்தில் ஒன்றலாம். சில நேரம் விலகியும் போகலாம். அது பற்றிக் கவலை கொள்ளாமல் திரும்பத் திரும்ப மனதை ஒரு முகப்படுத்த வேண்டும். நாட்கள் செல்லச் செல்ல, பழக்கம் மனதில் படியப், படிய தொடர்பில்லாத சிந்தனைகள் வருவதும் மனம் அலைபாய்வதும் மட்டுப்படும். மேற்பரப்பில் உயர்ந்தும், தாழ்ந்தும் அலை அலைபாய்கின்ற கடலின் அடியில் சென்று பார்த்தால் நீரின் கீழே ஒரு ஆழ்ந்த அமைதி தென்படுவது தெரியும். அந்த நிலையை ஆழ்நிலை தியானத்தின் மூலம் மனதிற்குள் உணர முடியும்.
‘பீல் கிரேட் வித் டி.எம்’ என்னும் தமது நூலில் டி.எம் என்னும் இவ்வரிய பயிற்சி, மன முறுக்கினை அவிழ்த்து, உடற் தசைகளைத் தளர்வித்து இதுவரை உணராத ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது”, என்று கூறுகிறார்கள். ஜிம் ஆண்டர்சனும், பில் ஸ்டீவன்சனும், அமைதியான நிலையில் எழுகின்ற சிந்தனைகள் வலுமிக்கதாகவும், ஆழ் மனதிலிருந்து எழுவதாகவும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

உரத்த குரலில் ஜெபிப்பதும், மனப்பாடம் செய்வதும் புத்த மதத்தினரின் ஸென் எனப்படும் தியான முறையில் பின்பற்றப்படுகிறது. இதில் ஒரே சீராக மூச்சு விடுவதும் மார்பு உயர்ந்து தாழ்வதுமே உணரப்படுகிறது. விபாஸ்ஸனா என்னும் மற்றுமொரு வகைப் புத்த மதத்தினரின் தியான முறையில் உடலிலிருந்து விடுபட்ட நிலையில், வெளியிலிருந்து கொண்டு, உடலையும், மனதையும் உற்று நோக்குதல் பயிலப்படுகிறது.
தய் சூ ச்சுஹான் என்னும் போர்க் களப் பயிற்சி முறையும் அய்க்கிடோ என்னும் ஜப்பானியப் பயிற்சியும் அசைவு அல்லது இயக்கத்தின் மூலம் செய்யப்படுகின்ற தியான முறைகள் என்று கருதப்படுகின்றன.

இந்த தியான முறையில், பயிற்சி பெறுபவர்க்கு ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை சொல்ல வேண்டும் இந்த மந்திரத்தை தினம் காலையிலும் மாலையிலும் 1/2 மணி நேரம், மனதுக்குள்ளேயே ஜபிக்க வேண்டும். இதற்காக பத்மாசனத்தில் தான் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும் என்பதில்லை. நாற்காலியில் உட்கார்ந்து கூட ஜபிக்கலாம். ஜபிக்கும் போது மனது அலைபாய்ந்து எண்ணங்கள் சிதறினாலும், விடாமல் மந்திரத்தை சொல்லிக் கொண்டே (மனதுக்குள்) இருக்க வேண்டும். ஆழ்நிலை தியானத்தை பயின்றவர்கள் மனதை ஒரு முகப்படுத்துவது இந்த முறையால் சுலபமாகிறது என்கின்றனர்.

Monday, August 15, 2011

மனோசக்தி பாடம் 4


ஹாரா தியானம்

ஹாரா என்பது மையம் என்ற பொருளைத் தரும் ஜப்பானியச் சொல். இது தொப்புளுக்குக் கீழ் இரண்டு விரல் அகலம் கழித்து இருக்கும் பகுதியைக் குறிக்கும். இது மணிப்புரா சக்ரா சக்தி மையத்தைக் குறிக்கும். இது உடலின் வலிமைக்கு முக்கிய மையமாக கருதப்படுகிறது. ஒருவன் இந்த சக்தி மையத்தில் கவனத்தைக் குவித்து தியான நிலையில் இருக்கும் போது எல்லையற்ற சக்தியுடையவனாக இருக்கிறான் என்கிறார்கள். அய்கிடோ (Aikodo) என்ற ஒரு வகை ஜப்பானிய மல்யுத்ததில் இந்த ஹாரா பகுதி மிக முக்கியத்துவம் வகிக்கிறது.

அய்கிடோவை உலகத்திற்கு அளித்த Morihei Ueshiba ஹாராவில் தன்னை ஐக்கியமாக்கி இருக்கும் கலையில் இணையற்ற நிபுணராக விளங்கினார். அப்படி ஒரு முறை அவர் இருக்கையில் சக்தி வாய்ந்த ஐந்தாறு மனிதர்கள் என்ன முயன்றும் அவரைத் தூக்கவோ, அவரை நகர்த்தவோ பிரம்மப் பிரயத்தனம் செய்தும் முடியாமல் தோற்றுப் போனார்கள். இன்னொரு நிகழ்ச்சியில் ஒரு சேர ஆறு பயிற்சி வீரர்கள் அவரைத் தாக்க வந்த போது எந்த வித அலட்டலும் இல்லாமல் அந்த ஆறு பேரையும் ஒவ்வொருவராக அவர் தூக்கி எறிந்ததாகச் சொல்லப்படுகிறது. இது கேட்பதற்கு தமிழ் சினிமா கதாநாயகன் போடும் சண்டைக் காட்சி போல தோன்றினாலும் பல பேர் முன்னிலையில் நடத்திக்காட்டப்பட்ட சம்பவங்கள்.
பண்டைய மருத்துவ சிகிச்சை முறைகளிலும் ஹாரா பகுதி மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது. உடலின் எல்லா நோய்களையும் கண்டறிய வயிற்றுப் பகுதியே அதிகம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. உடலுறுப்புகளின் ஒருங்கிணைப்பு முறையாக இல்லாவிட்டாலும் அதை ஹாரா பகுதி மூலம் அக்காலத்தில் கண்டறிந்தார்கள். அதை சரி செய்யவும் ஹாரா பகுதியை பலப்படுத்தவும் மூச்சுப் பயிற்சியும், தியானமும் பயன்படுத்தப்பட்டன. இனி ஹாரா தியானம் செய்யும் முறையைக் காண்போம்.
1) தரையில் சம்மணமிட்டோ, அல்லது நாற்காலியிலோ சௌகரியமாகவோ நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள்.


2) படத்தில் காட்டியுள்ளது போல் உங்கள் வலது கைவிரல்கள் மீது இடது கைவிரல்களை வைத்து இரு பெருவிரல்களும் லேசாகத் தொட்டுக் கொண்டிருக்கும் படியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் கைகள் ஒரு நீள்வட்டத்தை உருவாக்கி இருக்கும். மிகவும் பவித்திரமான ஒரு பொருளை அந்தக் கைகளில் வைத்திருப்பது போல் கவனத்துடன் இந்த முத்திரையை வைத்திருங்கள். இந்த முத்திரை மனதை அமைதியாக வைத்திருக்க மிகவும் உதவுவதாகக் கருதப்படுகிறது. உங்கள் கைகள் உங்கள் அடிவயிற்றை லேசாக ஒட்டியபடி இருக்கட்டும்.


3) உங்கள் கவனம் உங்கள் மூச்சில் இருக்கட்டும். மூச்சு சீராகும் வரை முழுக்கவனமும் மூச்சிலேயே வைத்திருங்கள்.


4) அமைதியை உள்மூச்சில் பெறுவதாகவும், டென்ஷன், கவலை போன்றவற்றை வெளிமூச்சில் வெளியே அனுப்பி விடுவதாகவும் எண்ணிக் கொள்ளுங்கள். சில மூச்சுகளில் மூச்சு சீராகி மனமும் அமைதி அடைந்தவுடன் உங்கள் கவனத்தை ஹாரா மீது திருப்புங்கள்.

5) ஹாரா பகுதியில் ஒரு பொன்னிற பந்து இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்தப் பந்தை சக்திகளின் இருப்பிடமாக எண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் உள்மூச்சில் அந்தப் பொன்னிறப்பந்து விரிவடைவதாகவும், வெளிமூச்சில் பழைய நிலைக்கு சக்தி பெற்று திரும்புவதாகவும் நினைத்துக் கொள்ளுங்கள்.

6) இப்படி நீங்கள் செய்யச் செய்ய உங்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள இறுக்கம் எல்லாம் குறைந்து ஒரு விதமாக லேசாவதை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்.

7) இந்தப் பயிற்சியால் ஹாரா அல்லது மணிப்புரா சக்ரா கழிவுகள் நீங்கி சுத்தமடைவதாகவும், பெரும் பலம் பெறுவதாகவும் உணருங்கள்.

8) ஆரம்பத்தில் உருவகப்படுத்தி செய்த இந்த தியானம் பயிற்சியின் காலப்போக்கில் உண்மையாகவே ஹாராவின் சக்தியை பலப்படுத்தி அசைக்க முடியாத மன அமைதியையும், மன உறுதியையும் ஏற்ப்படுத்த ஆரம்பிக்கும்.

இந்த தியானம் மன அமைதியை மட்டுமல்லாமல் உடல் வலிமைக்கும் மிகவும் உதவுகிறது. நாம் முன்பு கண்டபடி Aikodo வில் மட்டுமல்லாமல் உடலின் பொதுவான பலத்திற்கும், இந்த ஹாரா தியானம் பெருமளவு உதவுகிறது. ஹாராவில் மனதைக் குவித்து ஐக்கியமாகி இருக்கும் சமயங்களில் எந்த வித தாக்குதலிலும் தளர்ந்து விடாமலும், நிலை குலைந்து விடாமல் இருத்தல் மிக சுலபமாகிறது.

மன அமைதி, உடல் வலிமை இரண்டையும் தரவல்ல ஹாரா தியானத்தை நீங்களும் செய்து பார்த்து பலனடையலாமே

Sunday, August 14, 2011

நம்பிக்கை


நம்பிக்கை


நம்பிக்கை மாபெரும் சக்தி. அது மலைகளை நகர்த் துவதோடு, தடைகளை தகர்த்தெறியும் சக்தி கொண்டது. அது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தருவ தோடு வாழ்க்கையை சந்தோசமாகவும் மாற்றிவிடுகின்றது.

எமது அனைத்து விதமான சிக்கல்கள், தோல்விகளுக்கும் தீர்வு நம்பிக்கை தான் எனலாம். எமது உள்ளத்தில் எப்போது அது நுழைகின்றதோ அப்போதே எம்மை விட்டும் ஏமாற்றம் அழுத்தம் என்பன வெளியேற்றப்படுகின் றன. "கடுகளவு நம்பிக்கை வைத்துக் கொண்டு மலையை நகருமாறு சொல்லுங்கள். அது நகர்ந்துவிடும்" என் றொரு முன்னோர் கருத்தும் இருக்கின்றது.

நம்பிக்கை தடைகளைத் தாண்டும்
தன்னம்பிக்கையே வெற்றியின் இரகசியம்" என ராலிப் வார்டோ இமர்சன் கூறுகிறார். அதேபோல கோதே (Gothe) என்ற ஜேர்மனிய கவிஞன் "நீ எவ்வளவு வேக மாக உன்மீது நம்பிக்கை கொள்கிறாயோ அவ்வளவு விரைவாக வாழ்க்கைத் தத்துவத்தை புரிந்து கொள் வாய்" என்றான்.
எனவே வாழ்வின் சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நம்பிக்கை என்பது அவசியமாகின்றது. பிரச்சினைக ளின் போது கஷ்டப்படுத்திக் கொள்ளாதீர்கள். அமை தியாக (Stay calm) நம்பிக்கையோடு (Be faith) இருங்கள். ஏனெனில் நம்பிக்கை என்பது அனைத்து கஷ்டங்களை யும் தகர்த்தெறியக் கூடியது.

நேர்முகச்சிந்தனை

நேர்முகச்சிந்தனை
நீங்கள் வெற்றிபெறப் பிறந்தவர்; நினைத்தை முடிக்கும் ஆற்றல் பெற்றவர்; விரும்பியதை அடையும் தகுதியும் திறமையும் இயற்கையாக உங்களிடம் உள்ளன.
உங்களைப் போன்றுதான் எல்லா மனிதர்களுமே படைக்கப்பட்டுள்ளனர். இயற்கை, மனிதன் வளர்வதற்கேற்ப, உயர்வதற்கேற்ப, முன்னேறுவதற்கேற்ப, வெற்றிபெறுவதற்கேற்ப, அவன் உடலையும், மனதையும் நுணுக்கமாக உருவாக்கியுள்ளது.
ஆனால், பெரும்பாலான மனிதர்கள் வறுமையில் வாடுகின்றனர். பற்றாக்குறையில் பரிதவிக்கின்றனர். தோல்வியில் துவண்டுபோய் இருக்கின்றனரே! இது ஏன்?நீங்கள் எதிர்மறைச் சிந்தனை என்னும் சிறையில் அகப்பட்டுக் கொண்டீர்கள்.

வேறு யாரும் உங்களைச் சிறையில் அடைக்கவில்லை.சிறையை அமைத்தவரும் நீங்கள்தான். அதனுள் அடைத்துக் கொண்டவரும் நீங்கள் தான். சுதந்திரத்தை இழந்து துன்பப்படுபவரும் நீங்கள்தான்.எவராவது நம் அறையை நோக்கி வர மாட்டார்களா? கதவைத் திறக்க மாட்டார்களா? நம்மைச் சிறைமீட்க மாட்டார்களா? என்று ஏங்கிக் கொண்டுள்ளீர்கள்.சிறைக்கதவில் உள்ள “முடியாது, நடக்காது, ஆகாது, கிடைக்காது” என்னும் நான்கு கம்பிகளையும் எண்ணிக் கொண்டுள்ளீர்கள்.“வறுமை, பற்றாக்குறை, தோல்வி” ஆகிய சிறையிலிருந்து நீங்கள் விடுதலை பெறுவது எப்படி? ஒன்று முடியாது, ஆகாது, கிடைக்காது என்னும் நான்கு கம்பிகளையும், வளைத்து முறித்துக்கொண்டு வெளியில் வரவேண்டும். அல்லது சிறைக்கதவின் பூட்டைத் திறக்கும் சாவி எங்கே, எவரிடம் உள்ளது என்று கண்டுபிடிக்க வேண்டும்.உங்கள் விடுதலையைத் தடை செய்யும் கம்பிகளை முறிப்பது கடினமானதன்று.
அத்துடன் சிறைக்கதவின் பூட்டைத்திறக்கும் சாவி உங்களிடமே உள்ளது என்பது ஒரு ஆச்சரியமான, அதிர்ச்சிதரும் உண்மை.“எதிர்மறை எண்ணம்” என்னும் கற்களால் சிறையை அமைத்து, “முடியாது, நடக்காது, ஆகாது, கிடைக்காது” என்னும் கம்பிகளால் கதவை அமைத்து, உங்களை நீங்களே சிறையில் அடைத்துக்கொண்டு, கதவைத் திறக்கும் சாவியை சட்டைப்பையில் போட்டுக் கொண்டீர்கள்.“மனம்” என்னும் சட்டைப்பையில் “எண்ணம்” எனும் சாவியைப் போட்டது நீங்கள்தான். ஆனால், பூட்டுவதற்குப் பயன்பட்ட எண்ணம் என்னும் சாவிதான் திறப்பதற்கும் பயன்படும் உண்மை உங்களுக்கு தோன்றவில்லை.உண்மையில் உங்களை விடுதலையாக்கும் “ஆக்கமனப்பான்மை” என்னும் சாவி உங்கள் மனம் என்னும் சட்டைப் பையில்தான் உள்ளது.அதை நீங்கள் எடுக்க வேண்டும், அடைத்துக் கொண்டதும் “எண்ணம்” என்னும் சாவியால்தான்; சிறைக்கதவின் பூட்டைத்திறக்கப் பயன்படுத்தப்போவதும் “எண்ணம்” என்னும் சாவிதான்.எண்ணம் என்னும் சாவிக்கு இரு முகங்கள்உண்டு. ஒன்று ஆக்க முகம் மற்றொன்று எதிர்மறை முகம் ஆனாலும் சாவி ஒன்றுதான் அப்படியானால், ஆக்கமனப்பான்மை, என்றால் என்ன? அச்சாவியை கொண்டு வறுமை என்னும் சிறைக்கதவின் பூட்டைத்திறந்து, வெற்றி என்னும் விடுதலையை அடைவதுஎப்படி? என்று அறிவதில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.நல்லது. அறிந்துகொள்வோம்.

நீங்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில்வெற்றி பெற விரும்புகிறீர்கள் அல்லது தொழில், வணிகத்தில், ஐந்து ஆண்டுகளில் ஒருகோடி ரூபாய் சம்பாதிக விரும்புகிறீர்கள். அல்லது நீங்கள்பணியாற்றும் கல்லூரியின் முதல்வர் ஆக விரும்புகிறீர்கள். அல்லது தமிழ் நாட்டளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆக விரும்புகிறீர்கள் அல்லது தமிழ் நாட்டு அமைச்சராக விரும்புகிறீர்கள்.மேற்கூறிய குறிக்கோளில் ஒன்றை அல்லது உங்கள் ஆசையில் ஒன்றை மட்டும், தேர்ந்தெடுத்து அதற்கான முயற்சியில் இறங்கிவிட முடியுசெய்யுங்கள்.நீங்கள் தேர்ந்தெடுத்த குறிக்கோளை நினைத்துக்கொண்டே சற்று நேரம் கண்களை மூடுங்கள். கண்களை மூடிய நிலையிலேயே ‘என் குறிக்கோளில் நான் வெற்றிபெற முடியுமா?’ என்று வாய்விட்டுக் கேளுங்கள். மீண்டும் மீண்டும் சில நிமிடங்களுக்கு இதே கேள்வியைக் கேளுங்கள்.நீங்கள் கேட்ட கேள்விக்கு ‘முடியும்’ என்னும்பதில் கிடைத்திருக்கலாம். சிலருக்கு ‘முடியாது’ என்னும் பதில் கிடைத்திருக்கலாம்.குறிக்கோளை நிறைவேற்றத் தேவையான சம்பவங்கள் நடக்குமா? “நடக்கும்” நான் செய்ய விரும்பும் சாதனைக்கான உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்குமா? “கிடைக்கும்” . நான் செய்துவரும் முயற்சிகள் ஒன்று சேர்ந்து சாதனையாக மாறுமா? “மாறும்”.நீங்கள் கேட்ட வினாக்களுக்கெல்லாம் உங்களுக்குள்ளிருந்து “முடியும், கிடைக்கும், நடக்கும் ஆகும், வேண்டும். இருக்கிறது” என்னும் பதில்கள் கிடைக்குமானால் நீங்கள் ஒரு நேர்மறைச்சிந்தனையாளர்.நீங்கள் கேட்ட வினாக்களுக்கு உங்களுக்குள்ளிலிருந்து “முடியாது, கிடைக்காது, நடக்காது, ஆகாது, இல்லை” என்னும் பதில்களைப் பெறுவீர்களானால் நீங்கள் ஒரு எதிர்மறைச் சிந்தனையாளர்.நீங்கள் புரிந்துகொண்டாலும் இல்லாவிட்டாலும் இவ்விருவகைச் சிந்தனைகள்தான் உங்கள் வாழ்க்கையை நிர்ணயித்திருக்கின்றன. அல்லது நிர்ணயிக்கப் போகின்றன.
மீண்டும் ஒருமுறை அதே கேள்விகளைக்கேட்டு முடியும். நடக்கும், கிடைக்கும், ஆகும் போன்ற பதில்களை அழுத்தமாக உணர்ச்சியோடு, மனப்பூர்வமாச் சொல்லிப்பாருங்கள்.உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி த்தும்பும்; முகம் விரிவடையும், உடல் பூரிக்கும்; மனதில் தெம்பு உண்டாகும்.அதே கேள்விகளை மீண்டும் கேட்டு, முடியாது, நடக்காது, ஆகாது என்னும் பதில்களை உணர்ச்சியோடு சொல்லிப்பாருங்கள்.உங்கள் உள்ளத்தில் கவலையும், ஏமாற்றமும் உதிக்கும்; முகம் சோர்ந்து போய்விடும்; மனதில் இருக்கும் தெம்பு இறங்குவதை நீங்களே உணர முடியும்.ஆக்கச் சிந்தனையால் ஏற்படும் உடல் உணர்ச்சி மாறுதல்களை நீங்களே அனுபவித்து அறியலாம். எதிர்மறைச் சிந்தனையால் உண்டாகும் உடல், உணர்ச்சி மாறுதல்களையும் நீங்களே அனுபவித்து உணரலாம்.ஒரே ஒருமுறை முடியும், நடக்கும், ஆகும், கிடைக்கும் என்று நினைத்தாலே உடலும், உள்ளமும் மாற்றம் அடைகின்றன. பல்லாயிரம் முறை இதே ஆக்கச்சொற்களை திரும்பத்திரும்பச் சொல்லி உள்ளத்தில் பதியவைத்தால், அப்பதிவு உங்கள் உடலிலும், உள்ளத்திலும், உணர்விலும் மிகப்பெரும் மாற்றத்தைத் தோற்றுவித்து விடுகின்றன.‘என்னால் எதுவும் முடியும்; நான் நினைப்பது எல்லாம் நடக்கும்; நான் கேட்பது எல்லாம் கிடைக்கும். நான முயல்வது எல்லாம் ஆகும்’ என்னும் நம்பிக்கை உடலோடும், உள்ளத்தோடும், உணர்வோடும் கலந்து விடுகிறது.

ஒரே ஒருமுறை முடியாது, நடக்காது, கிடைக்காது, ஆகாது என்று நினைத்தாலே உடலிலும், உள்ளத்திலும் எதிர்மறை மாற்றம் ஏற்படுகிறது. பல்லாயிரம் முறை இதே எதிர்மறைச் சொற்களைத் திரும்ப திரும்பச் சொல்லிப் பதியவைத்தால், அப்பதிவு உங்கள் உடலிலும், உள்ளத்திலும், உணர்விலும் மிகப்பெரும் எதிர்மறை மாற்றங்களைத் தோற்றுவித்து விடுகின்றன.என்னால் எதுவும் முடியாது; நான் கேட்பது எதுவும் கிடைக்காது; நான் கேட்பது எதுவும் கிடைக்காது; நான் நினைப்பது எதுவும் நடக்காது; நான் முயல்வது எதுவும் ஆகாது என்னும் அவநம்பிக்கை உடலோடும், உள்ளத்தோடும் உணர்வோடும் கலந்துவிடுகிறது.நம்பிக்கை நம்மோடு கலக்கும்போது வெற்றி, செல்வம், மகிழ்ச்சி, ஆரோக்கியம், புகழ் பெருமை ஆகியவை நம்மை நோக்கி ஈர்க்கப்படுகின்றன.அவநம்பிக்கை நம்மோடு கலக்கும்போது தோல்வி, வறுமை, கவலை, நோய், தாழ்வு, சிறுமை ஆகியவை நம்மை நோக்கி ஈர்க்கப்படுகின்றன.இப்போது நேர்முகச்சிந்தனை எதிர்மறைச் சிந்தனை ஆகிய இரண்டில் ஒன்றை நீங்ள்ளே தேர்ந்தெடுக்கலாம். எதைத் தேர்வு செய்கிறீர்கள்; நிச்சயம் நேர்முகச் சிந்தனையைத்தேர்வு செய்வீர்கள்.

“எதுவும் என்னால் முடியும்; நான் நினைத்தபடியே நடக்கும்; விரும்பியது எல்லாம் கிடைக்கும்; நான் முயல்வது எல்லாம் ஆகும்” என்று திரும்பத் திரும்ப சொல்லுங்கள்.கண்களை மூடிக்கொண்டு சொல்லுங்கள்; திறந்துகொண்டும் சொல்லுங்கள். உறங்குவதற்கு முன்னர் சொல்லுங்கள். உறங்கி எழுந்த பின்னரும் சொல்லுங்கள். நின்றுகொண்டும், நடந்துகொண்டும் அமர்ந்துகொண்டும், படுத்துக்கொண்டும் சொல்லுங்கள்.நீங்கள் இதைச் சொல்லச் சொல்ல உங்கள் ஆழ்மனதில் இருந்த எதிர்மறைப் பதிவுகள் மறைந்துகொண்டே வருகின்றன.
மறைந்த இடத்தில் ஆக்கப்பதிவுகள் படிந்து விடுகின்றன.மனதைப் பற்றிய முக்கியமான ஒரு விதி ஈர்ப்பு விதியாகும்.“முடியும்” என்று நினைத்தால் முடிப்பதற்குத் தேவையான அறிவு, திறமை, வசதி, வாய்ப்பு, உதவி, ஒத்துழைப்பு ஆகியவற்றை மனமே ஈர்த்துக்கொடுக்கும்.“நடக்கும்” என்று நினைத்தால் நடப்பதற்குத் தோதான நடவடிக்கைகளையும், சம்பவங்களையும் மனமே ஈர்த்துத் தரும்“ஆகும்” என்றுநினைத்தால் ஆவதற்குரிய வாய்ப்பை உங்கள் மனமே ஈர்த்துத் தரும்.முடியாது, நடக்காது, கிடைக்காது, ஆகாது, ஆகிய எதிர்மறைச் சொற்களை நீங்கள் இனி மனதால் நினைக்கவும் கூடாது; வாயால் சொல்லவும் கூடாது, உங்கள் அகராதியில் எங்கெல்லாம் இச்சொற்கள் வருகின்றனவோ அங்கெல்லாம் கிறுக்கி அவற்றை மறைத்து விடுங்கள்.அதன்பின்னர், உங்கள் எல்லாச் செயல்களுமே முடியும், நடக்கும், கிடைக்கும், ஆகும் என்னும் அடிப்படையில் அமைந்துவிடும்.“உங்களால் முடியும்; முடியும் என்று நினைத்தால்” என்று நார்மன் வின்சன்ட் பீல் கூறுகிறார்.“உங்களால் ஒரு காரியம் முடியும் என்று நினைத்தாலும் முடியாது என்று நினைத்தாலும் இரண்டும் உண்மைதான்” என்று கூறுகிறார் என்றிபோர்டு.இவ்விரு வாக்கியங்களிலும் வெற்றியின் இரசிகயம் அடங்கியுள்ளது.‘என்னால் மாவட்ட கலெக்டர் ஆக முடியும்; அதற்குத் தேவையான காரியங்கள் தாமே நடக்கும்; பொருத்தமான உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்கும்’ என்னும் நேர்முகச் சிந்தனை ஆக்கமனப்பான்மையை உங்களிடம் உருவாக்கிவிடுகிறது.ஆகமனப்பான்மை உங்கள் மூளை அணுக்களிலும்,நரம்பு அணுக்களிலும், இரத்த அணுக்களிலும், தசைத் திசுக்களிலும் ஒரு இரசாயன மாற்றத்தை உருவாக்குகிறது.

இராசாயண மாற்றம் உங்கள் அறிவை விரிவாக்கி, திறமையை திடப்படுத்தி, ஆற்றலை வெளிக்கொணர்ந்து, வாய்ப்புகளும், மனிதர்களும் உங்கள் நோக்கி ஈர்க்கபட்டு நீங்கள் வெற்றிபெற்று விடுகிறீர்கள்.வெற்றியின் முதல் இரகசியம் இதுதான்!ஆகவே வறுமை, தோல்வி, நோய் போன்ற சிறைகளில் நீங்கள் அடைபட்டிருப்பீர்களானால், சிறைக்கதவின் பூட்டைத்திறகும் சாவி, மனம் உங்கள் சட்டைப்பையில் தான் உள்ளது.ஆக்கமனப்பான்மை என்னும் அச்சாவியில் முடியும், கிடைக்கும், நடக்கும், ஆகும் என்று பொறித்திருப்பதைக் காணுங்கள்.ஆக்கமனப்பான்மையை கையிலெடுத்தால், அனைத்துச் சிறைகளிலிருந்தும் விடுதலை பெறலாம்.செல்வம், பதவி, புகழ், பெருமை, ஆரோக்கியம், ஆகியவற்றை விரும்பும் அளவுக்கு பெற்றுக் கொள்ளலாம்.நம்புங்கள்; ஆக்கமனப்பான்மையே அரும்பெருஞ்செல்வம்!

Saturday, August 13, 2011

மனோசக்தி


மனோசக்தி

கண்ணுக்குத் தெரியாத மனோசக்தி ஒன்று நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது என்பதை அறியாமல் அதைத் தூங்கவைத்திருக்கிறோம். நாம்தான் அதைத் தட்டி எழுப்பவேண்டும். நல்லதையே நினைத்தால் நல்லதே நடக்கும், அதைவிட்டு நாம் எப்போதும் பொல்லாததையே நினைத்தால் அதுவே நடக்கும்.
நாம் பிறந்ததிலிருந்தே மனோசக்தி நம்மிடம் இருக்கிறது. யாரிடமிருந்தும் நாம் மனோசக்தியை வங்க வேண்டியதில்லை. பயிற்சியின் மூலம் நாம் அதை அதிகப்படுத்தமுடியும். முனிவர்கள் மட்டும்தான் மனோசக்திப் பெற்றவர்களா? இல்லை தனிமனிதன் ஒவ்வொருவரும் மனோசக்தியைப் பயன்படுத்த முடியும்.
.
இரண்டு மனம் வேண்டுமென்று நாம் கேட்கவேண்டியதே இல்லை. இரண்டு மனங்களுடன்தான் நாம் பிறந்திருக்கிறோம். நாம் பயிற்சித்தப்படி நடக்கும் வெளிமனம், நாம் பயிற்சிக்காத உள்மனம். அதைப் பயிற்சித்து உபயோகிக்க ஆரம்பித்தால் உலகம் நம் கையில்.
படைப்பின்படி எல்லா மனித உள்மனங்களும் பிறப்பிலிருந்து இணைக்கப் பட்டிருக்கின்றன. அதைத் தூண்டுவதோ துண்டிப்பதோ நம் கையில் இருக்கிறது. பயிற்சியினால் தவிர நம் வெளிமனத்தால் அதை உணர முடியாது.
நாம் உறங்கும்போது நம் வெளிமனமும் உறங்குகிறது, ஆனால் நம் உள்மனம் மட்டும் மற்ற உள்மனங்களுடன் தொடர்புக் கொண்டுதான் உள்ளது.நம் உள்மனம் நாம் பயிற்சிக் கொடுத்தப்படி நல்லதும் செய்யும், கெடுதலும் செய்யும்.
இயற்கையாகவே மனோசக்தியைப் பயன்படுத்துவோரும் நல்லத் தரமானப் பயிற்சினால் மனோசக்தியைப் பயன்படுத்துவோரும் நல்லதையே நினைத்து ஏன் நல்லதையே செய்யக்கூடாது?
கேடுதல்கள் செய்பவர்கள் தற்சமயம் நலமாக வாழ்வதுபோல் தோன்றினாலும் இறுதியில் படுகுழியில் தள்ளப்படுவதை நாம் பார்க்கப் போகிறோம்.
வாழ்க மனோசக்தி!

Tuesday, August 9, 2011

எளிய முறை குண்டலினி


எளிய முறை குண்டலினி

எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம்.
காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம். புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும். ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்.

மனம் வேறு உயிர் வேறு என்று தான் பொதுவாக மக்கள் கருதுகிறார்கள். அப்படியல்ல. உயிரே தான் படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. உயிர் உடலில் இயங்கும் போது எக்காரணத்தாலும் உடலில் எந்தப் பகுதியிலேனும் அணு அடுக்கச் சீர் குலைந்து போனால் உயிருக்குத் துன்ப உணர்ச்சி ஏற்படுகிறது. அவ்வுணர்ச்சியிலிருந்து மீள ஒரு பொருளோ, செயலோ, பிறர் உதவியோ தேவைப்படுகின்றது. அப்போது தேவை என்ற மனநிலையாக உயிர் ஆற்றல் ஓங்கி நிற்கின்றது. பின் அதுவே முயற்சி, செயல், இன்ப துன்ப விளைவுகள், அனுபோகம், அனுபவம், தெளிவு, முடிவு என்ற நிலைகளாகப் படர்ந்து இயஙகுகின்றது. இந்த உண்மை யோகத்தின் முதல் படியாகிய ஆக்கினை தவப்பயிற்சியால் தெளிவாக விளங்கும்.

ஆக்கினைச் சக்கரம்

உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலைதான் மாயை எனப்படும். உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகள் அறுவகைக் குணங்களாகும்.

அவையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்வேட்பு, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்பனவாகும். அறுகுண வயபட்டு மக்கள் செயலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம்.

ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகின்றது. மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது தனது ஆற்றலை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை மணம் இவையாக மாற்றி அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது.

தனது இயக்க விளைவுதான் இன்பமும் துன்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவு பெற்றுத் தன் ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும். தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும் தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டு சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவுக்குத் திறமை பெருகும். மெய்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில் ஆக்கினைச் சக்கர யோகமேயாகும். ஆசானால் எழுப்பப் பெற்ற குண்டலினி சக்தியின் இயக்க விரைவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கும். உடல்நலம், மனநலம் ஓங்கும். முகம் அழகு பெறும்.