Monday, October 31, 2011

மனோசக்தி பாடம் 11

ஆல்பா தியானம் செய்வது எப்படி?மனித மூளையின் அமைப்பு வலது இடது என்று இரண்டு அரைக்கோளங்களாக (Hemisphere) இருப்பதை அறிவியல் பாடத்தில் அறிந்திருப்போம். அவை வலது பக்கத்து மூளை, இடது பக்கத்து மூளை.
இடது, பக்க மூளை ஐம்புலன்களோடு தொடர்புடையது. நாம் விழித்திருக்கும் போது அல்லது உணர்வோடிருக்கும்போது ஐம்புலன்வழி வருகிற, கிடைக்கிற செய்திகளை பகுத்து, தொகுத்து, ஆய்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்து அந்த அனுபவங்களை பகுக்கும்போதும், தொகுக்கும் போதும் உண்டான எண்ணங்கள் அப்படியே வலது பக்கத்து மூளைக்கு அனுப்பி வைக்கிறது.
இந்த இடது பக்கத்து மூளை விழித்துக் கொண்டிருக்கும்போது மட்டும் செயல்படுகின்றது. இதனை நினைவு மனம் Conscious Min, Rational Mind, Objective Mind, Waking Mind, Surface Mind, Voluntary Mind, Male Min என்று பல்வேறு பெயர்களால் அழைக்கலாம்.

இந்த இடது பக்கத்து மூளை சிந்திக்கின்ற வேலையைச் செய்கின்றது. கணக்குப் போடும் வேலையை, காரண காரியங்களை கண்டறிகின்ற வேலையைச் செய்கின்றது.
ஆனால், இந்த வலது பகத்து மூளையோ சிந்திக்கின்ற வேலையைச் செய்யாமல் இடது பக்கத்து மூளை தருகின்ற ஒட்டுமொத்த சிந்தனைகளையும், அனுபவங்களையும் அப்படியே வாங்கி அது உண்மையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும், நிஜமான அனுபவங்களாக இருந்தாலும், கற்பனையான அனுபவங்களாக இருந்தாலும் அவற்றைப் பதிய வைத்துக் கொள்ளுகிற நினைவு வங்கியாக (Memory Bank) கணினியின் நினைவுத்தகடு (Floppy Disk) போல செயல்படுகிறது.
நாம் விழிப்பு நிலையில் இருந்தாலும் உறக்க நிலையில் இருந்தாலும் உயிரோடு இருக்கின்ற எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது. வலது பக்கத்து மூளை உடலின் இயக்கத்திற்கு தேவையான எல்லா உறுப்புகளின் செயல்பாட்டினை கட்டுப்படுத்துகின்ற வேலையைச் செய்கின்றது.

சுயமாக சிந்திபது என்கிற ஆற்றல் அற்றது போல தோன்றகின்றது. இதனை ஆழ்மனம், Sub Concious Mind, Subjective mind, Sleeping Mind, Deep Mind, Involuntary Mind, Female Mind என்று பல்வேறு பெயர்களால் அழைக்கலாம்.

இந்த வலது பக்க ஆழ்மனம் இடது பக்க நினைவு மனப்பகுதியால் வழி நடத்தப்பட்டு மிகப்பெருஞ்சக்தியாக, எல்லாவற்றுக்கும் தீர்வுகளை பெற்றுத்தருகிற, அற்புதங்களை ஆற்றுகிற அரேபிய கதைகளில் வருகிற அலாவுதீனின் அற்புத விளக்குபோல செயல்படுகிறது.
இந்த Sub Concious mind என்று சொல்லப்படுகிற வலது பக்க மூளையே ஆழ்மனம். இதுவே கற்பனையின் நிலைக்களன். இதனைப் பயன்படுத்த அறிந்து கொள்கிறபோதுதான் புதியன படைக்கவும் உருவாக்கவும் நம்மால் இயலுகிறது.

சாதாரணமாக மனிதர்களின் மன இயக்கத்தை
ஆல்பா (∂) பீட்டா(β) தீட்டா (σ) டெல்டா(δ)
என்று நான்கு நிலைகளில் இயக்குவதாக சித்தர்களும், ஞானிகளும் அறிவியலார்களும் அறிந்து கூறுகிறார்கள்.
ஆல்பா நிலையில் மன இயக்கம 8 முதல் 12 சுற்றுகளுக்குள்ளும் (Cycles/Sec)
பீட்டா நிலையில் 13 சுற்றுகளுக்கு மேலும்
தீட்டா நிலையில் 4 முதல் 7 சுற்றுகளுக்குள்ளும்
டெல்டா நிலையில் 3 சுற்றுகளுக்கும் கீழாகவும் 1/2 சுற்று வரையிலும் மனம் இயங்குவதாக குறிப்பிடுகிறார்கள்.
பீட்டா நிலை என்பது விழிப்பு நிலை. உணர்ச்சிவயப்பட்ட மனம் வேகமாக இயங்கும் நிலை (Active and Agitated State)
ஆல்பா நிலை என்பது விழிப்பும் உறக்கமும் அற்ற தூங்காமல் தூங்கும் தியான, மோன நிலை (A Hypnotic State)
டெல்டா என்பது சமாதி நிலை.
நாம் விழித்துக் கொண்டிருக்கும் போது ஐம்புலன்களுக்கும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதால் தொடர்ந்து தகவல்களை ஆய்ந்தும், தொகுத்தும், பகுத்தும் கொண்டிருப்பதால் நினைவு மனம் அதிக இயக்கத்திலும் அதாவது விழிப்பு நிலையிலும் ஆழ்மனம் (Sub Conscious Mind) உறக்க நிலையிலும் இருக்கிறது.

உறக்க நிலையில் இருக்கிற ஆழ்மனத்தை வலது பக்க மூளையை வலது பக்க மூளையை விழிப்படையச் செய்ய, நினைவு மனத்தின் (Concious Mind) செயல்பாடுகளை இயக்க நிலையை குறைக்க வேண்டும். நம் ஐம்புலன்களுக்கும் உள்ள உலக தொடர்புகளை துண்டித்தால் நினைவு மனத்தின் செயல் குறையும். கண்களை மூடி உடலின் எந்த பகுதியிலும் இறுக்கமில்லாமல், தளர்வாக, வசதியாக, பத்மாசனத்திலோ, சுகாசனத்திலோ அல்லது கால் பாதங்கள் தரையில் படிந்த நிலையில் நாற்காலியில் முதுகு, தலை நேராக இருக்கும்படி நிமிர்ந்து அமர்ந்த நிலையிலோ, இன்னும் சொல்லப்போனால் படுத்த நிலையிலோ (படுத்த நிலை உறக்கத்தை உடனே வரவழைத்து விடுவதால், உறக்கம் நினைவு மனத்தின் செயல்பாட்தை முழுவதுமாக தடை செய்து விடுவதால் இந்த நிலை பரிந்துரைக்கப்படுவதில்லை) ஓய்வான மனநிலையில் நம்முடைய மூச்சின் மீது கவனம் செலுத்தும்போது எண்ண அலைகள் அடங்கி மனம் அமையுற்று நினைவு மனத்தின் செயல்பாடு குறைகிறது.

ஆழ்மனம் விழிப்படையத் தொடங்குகிறது.
நம்முடைய சுவாசமும் எண்ணங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவைகள் சுவாசத்தின் வேகம் அதிகரித்தா எண்ணத்தின் வேகமும் அதிகரிக்கும். ஆழ்ந்த சுவாசத்தை எடுத்து மெதுவாக காற்றை வெளியேற்றும் செயலை கவனிக்கத் தொடங்கும்போது புதிய எண்ணங்கள் உருவாவதும், உருவான எண்ணங்களின் பின்னால் தொடர்ந்து செல்வதும், எண்ணங்களே வேண்டாமென்று நிராகரிப்பதும் நிகழ்வதில்லை. எண்ணமற்ற வழிக்கு இதுவே வழி. எல்லா தியான முறைகளையும் தொடங்குவதற்கு இந்த முறையைத்தான் பரிந்துரைக்கிறார்கள். குறிப்பாக அட்டாங் யோகத்தின் சமாதி நிலையை அடைய இதுவே வழி.
தியானம் என்ற சொல்லுக்கு ஏதாவது ஒன்றை எண்ணித்தியானிப்பது என்பது பொருள். அதாவது மனதில் சங்கல்பங்களை (முனைந்து உருவாக்கும் எண்ணத் தீர்மானங்கள் ) உருவாக்குவதும் ஒன்றையே தொடர்ந்து இடைவிடாமல் எண்ணிக் கொண்டிருப்பதும் தியானம்.
ஆல்பா நிலையில் நினைவு மனத்தின் துணைகொண்டு எந்தப் பொருள் குறித்து, புதிய செய்திகள், உத்திகள் தேவையோ எந்தப் புதிய கண்டுபிடிப்புகளுக்கு விடை தேவையோ, சிக்கல்களுக்கு தீர்வு வேண்டுமோ அது குறித்து சிந்தித்தால் அந்த எண்ணங்கள் ஆழ்மனத்தில் (வலது பக்க மூளையில்) பதிந்து உடனேயோ அல்லது மற்ற சமயங்களிலோ நம்முடைய மனதில் புதிய எண்ணங்களும், கற்பனைகளும் விடைகளும், உத்திகளும் ஊற்றெடுக்கும்.
இந்த ஆல்பா நிலை தியானத்தின்போது நாம் எது குறித்து சிந்திக்கின்றோமோ அது தொடர்பான மனப்படங்களை, காட்சிகளாக காண வேண்டும்.
மனித உடல் அழியக்கூடியது, ஆன்மா அழிவில்லாத்து என்பது போல மனித மனதில் உருவாகும் எண்ணங்கள் அழிவதில்லை. எப்படி ஒரு காந்த ஒலி, ஒளி (Audio & Video) நாடாக்களில் சப்தங்களும் காட்சிகளும் பதியவைத்து வைத்து வேண்டும் பொழுது அவற்றை இயக்கிப் பார்க்க முடிகிறதோ அதுபோல இதுவரை வாழ்ந்த இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற எல்லாவித மனிதர்களின் எண்ணங்களும் வான் காந்தத்தில் (Universal Magnetism) பதிய வைத்து பாதுகாக்கப்படுகிறது. வான்காந்தம் ஆற்றல் மற்றும் அறிவின் நிலைக்களன்.
பிரபஞ்ச அறிவிலிருந்து தேவையான செய்திகளை பெறமுடியும் என்று பெஞ்சமின் ஃபிராங்கிளின் போன்ற அறிஞர்கள் நம்பியிருக்கிறார்கள். எடிசன் போன்ற அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் பிரபஞ்ச அறிவிலிருந்து செய்திகளை பெற்றுமிருக்கிறார்கள்.
ஆழ்மனம் நம்மை இந்தப் பிரபஞ்ச மனத்தோடு இணைக்கும் நடுநிலை மனம் நாம் விரும்பும் எதுவாக இருந்தாலும் நாம் எந்த நிலையிலிருந்தாலும் பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்த பொக்கிஷம். இதற்காக பெஞ்சமின் ஃபிராங்கிளின் ஒரு உத்தியை பின்பற்றியிருக்கிறார்.
பெஞ்சமின் ஃபிராங்கிளின் கையில் ஒரு கூழாங்கலை வைத்துக் கொண்டு ஒரு சாய்வு நாற்காலியின் கைப்பிடியின் வெளியே கை இருக்குமாறு வைத்துக் தளர்வாக, ஓய்வாக்க் கண்களை மூடி அமர்ந்து கொண்டு உறங்குவதுபோல் இருப்பாராம். உறக்கம் வருகிறபோது கைப்பிடி தளரந்து கூழாங்கல் தரையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு உலோகத் தகட்டின் மீது விழுந்து ஒலி உண்டாக்கும். அந்த நிலை தூங்காமல் தூங்கும் அறிதுயில் என்கிற ஆல்பா தியான நிலை.
இந்த நிலையில் தன்னுடைய பிரச்சனைகள் குறித்து சிந்திக்கும்போது மின்னல் கீற்றென சில சிந்தனைகள், விடைகள், தீர்வுகள் உண்டாகும். அவை பிரபஞ்ச பதிவிலிரந்து கிடைக்கும் செய்திகள். இந்த வகையான செயல்பாட்டிற்கு பின்னர் நாம் இதை மறந்து இருக்கும்பொழுது சில நேரங்களில் திடீரென்று சில சிந்தனைகளை மனம் உருவாக்கித் தரும். மனதை கசக்கிப் பிழிவதை விட (Brain Storminng) வலிந்து சிந்திப்பதை விட ஓய்வாக மகிழ்ச்சியாக இருக்கும்பொழுதே கற்பனை ஊற்றெடுக்கும்.

கற்பனை, படைப்பாற்றல், புதியன உருவாக்கல் என்பது மாற்றி யோசிக்கற ஒருமுறை. நேரடி சிந்தனை (Straight Thinking) கணக்குப்போடுவது போல் பக்கவாட்டுச் சிந்தை (Lateral Thinking) என்பதுதான் புதிய சிந்தனை, மாறுபட்ட சிந்தனை, கற்பனை.
இப்படி மாற்றி யோசிக்கிற Lateral Thinking இல்லையென்றாலும் Permutation Combination என்கிற முறையில் புதியன உருவாக்க எளிய வழிமுறையில் முயலலாம். பூச்சியம் முதல் ஒன்பது வரை பத்து இலக்கங்களை வைத்துக் கொண்டு எல்லையற்ற (Infinit Numbers) புதிய எண்களை உருவாக்குவது போல எல்லா வகையிலும் மாற்றி மாற்றி இணைத்து புதியன படைப்பது எளிது. மனமும் முயற்சியுமே தேவை.

Wednesday, September 28, 2011

மனோசக்தி பாடம் 10

மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்திஆழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப்படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி.

வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும்.

முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது.

visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்வது ஒன்றும் சிரமம் இல்லை.

கனடா நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிற்கு மனோதத்துவ நிபுணராக இருந்த டாக்டர் லீ புலோஸ் (Dr. Lee Pulos) தான் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த மனபயிற்சிகளில் முக்கியமானவை இரண்டு என்கிறார்.

ஒன்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இல்லாதவற்றை அகற்றும் பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிமிடத்திற்கு சுமார் 150 சொற்கள் சொல்லிக் கொள்கிறான் என்றும் வெற்றி பெற விரும்புவன் அச்சொற்களில் தன்னைக் குறைத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை இழக்கிற, பலவீனமான வார்த்தைகளை எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம் என்றும் சொல்கிற அவர் அதற்கான பயிற்சி முதல் பயிற்சி என்கிறார்.

அடுத்த பயிற்சியாக வெற்றியை மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தான் டாக்டர் லீ புலோஸ் கூறுகிறார். வெற்றியை மிகத் தெளிவாக சினிமாப்படம் பார்ப்பது போல் மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது முக்கியம் என்கிறார் அவர். வெற்றி பெறத் தேவையான அத்தனையும் ஒவ்வொன்றாய் சிறப்பாகச் செய்து முடிப்பது போல மனதில் காட்சியைத் தெளிவாக உருவகப்படுத்துவது முக்கியம் என்கிறார்.

ஆழ்மனதில் சொற்களாகவும், நம்பிக்கைகளாகவும், காட்சிகளாகவும் நாம் அனுப்பிப் பதிய வைக்கும் விஷயங்கள் நம் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அழிப்பனவாக இருக்கக் கூடாது என்பதையும் நம் இலட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைவது போல மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் ஆழ்மனதால் நிஜமாக்கியே காட்டப்படும் என்பதையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது.பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்த பல வெற்றியாளர்கள் தங்களை அறியாமலேயே இப்படி மனத் திரையில் இலட்சியங்களை அடைந்து வெற்றி பெறுவதாக காட்சிகளை உருவாக்கிப் பார்க்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம்

இலட்சியங்களை அடையக் கூடாது.

இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும்.
அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள். ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்.

சகோதர,சகோதரிகளே!!!
நீங்கள் என் பயிற்சியின் மூலம் அடைந்த வெற்றிகளை அன்பு கூர்ந்து என்னோடு பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
சந்தேகங்கள் இருந்தால் மெயில் செய்யவும்.

Sunday, September 18, 2011

மனோசக்தி பாடம் 9

அன்பு நிறைந்த வாசகர்களுக்கு,

பலர் என்னிடம் டெலிபதி பற்றி அரிய ஆர்வம் உள்ளதாகவும் அதை கற்று கொடுக்கும் படியும் மெயில் அனுப்பி உள்ளனர். சித்தர் சலீம் உங்கள் ஆர்வத்தை மதித்து உங்களுக்கு எளிய முறையில் டெலிபதி கற்று தருகிறேன் தயவு செய்து இதை நல்ல விசயங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன்.
முதலில் உங்கள் எண்ண அலைகளுக்கு ஒத்த எண்ண அலைகள் உள்ள ஒரு நண்பரை இதில் உதவியாளராக சேர்த்துக் கொள்ளுங்கள். என்றுமே இது போன்ற விஷயங்களில் ஈடுபாடோ, நம்பிக்கையோ இல்லாத ஆள்களைத் தவிருங்கள். உங்கள் சோதனை சமயங்களில் பார்வையாளராகக் கூட அது போன்ற ஆட்கள் அருகில் இருக்க அனுமதிக்க வேண்டாம். இது ஆரம்பக் கட்டங்களில் மிகவும் அவசியம். இதில் நல்ல தேர்ச்சி அடைந்த பின்னர், உங்கள் ஆழ்மன சக்திகள் வலிமை அடைந்த பின்னர் மற்றவர்களின் எப்படிப்பட்ட எதிர்மறை எண்ண அலைகளும் உங்களையும், உங்கள் சக்தியையும் பாதிக்காது. ஆனால் அந்த நிலையை அடையும் வரை ஒத்த எண்ண அலைகள் உள்ள மனிதர்கள், சூழ்நிலைகளே சோதனைக்கு உகந்தவை.
பரபரப்பில்லாத அமைதியான மனநிலையே ஆழ்மன சக்திகள் வெளிப்படப் பொருத்தமான மனநிலை. சரியாகச் சொல்ல முடிய வேண்டுமே என்ற பரபரப்போ, முடியுமா என்ற சந்தேகமோ மனதில் வேண்டாம். முதலில் எளிமையான சோதனையில் இருந்து ஆரம்பியுங்கள். நண்பரிடம் ஒன்றில் இருந்து பத்திற்குள்ளாக ஒரு எண்ணை நினைக்கச் சொல்லுங்கள். அவரை அந்த எண்ணை அவருடைய மனத்திரையில் பெரியதாக உருவாக்கி ஒளிரச்செய்து காணச் சொல்லுங்கள். பின் கண்களை மூடிக்கொண்டு உங்கள் மனத்திரையில் அவர் கண்டு கொண்டு இருக்கும் எண்ணைக் காண முயற்சி செய்யுங்கள். அந்த எண் உங்கள் மனத்திரையில் ஒளிர வேண்டும் என்று எதிர்பாருங்கள்
இந்த முயற்சியில் நீங்கள் உங்களை அறியாமலேயே யூகம் செய்ய முயற்சிக்கக் கூடும். நண்பருக்குப் பிடித்த எண் எது, அவரது அதிர்ஷ்ட எண் எது என்று யூகிக்கத் தோன்றலாம். அதைத் தவிருங்கள். யூகத்தின் மூலம் சரியான எண்ணைச் சொன்னாலும் நம் நோக்கத்திற்கு அது தோல்வியே. ஓரிரு நிமிடங்கள் கழித்து உங்கள் மனத்திரையில் பெரிதாக ஒளிர ஆரம்பிக்கும் எண்ணை, அல்லது உறுதியாக மேலோங்கி நிற்கிற எண்ணை வாய் விட்டு அவரிடம் சொல்லுங்கள். சரி பார்த்துக் கொள்ளுங்கள். 90 சதவீதம் ஆரம்பத்தில் தப்பாகச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால்
அந்த எண் ஆழ்மனதின் முயற்சியின் மூலம் தானாக வரும் முன், பொறுமையில்லாமல் நம் ஆர்வக் கோளாறு ஒரு கற்பனை எண்ணை நாம் வரவழைக்கச் செய்திருக்கலாம்.
முதல் முயற்சியிலேயே குழந்தை நடக்க ஆரம்பித்து விடுவதில்லை. எனவே தளராமல் உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள்.
எண்கள் மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள், பொருள்கள், உங்கள் இருவருக்கும் நன்றாகத் தெரிந்த மனிதர்களின் முகங்கள், ஏதாவது ஒரு துறையின் பிரபலங்கள் என்று மாற்றிக் கொண்டு முயற்சியுங்கள். யூகம், அவசரம், சரியாகச் சொல்ல வேண்டும் என்கிற படபடப்பு போன்றவை இல்லா விட்டால் விரைவிலேயே உங்களால் சரியாகச் சொல்ல முடியும்.
தோல்வியைப் போலவே வெற்றியும் நம் மனநிலையைப் பாதிக்கக் கூடும். அப்படி வெற்றி தோல்விகள் ஏற்படுத்துகிற மாறுதல் மனநிலைகளைத் துடைத்து விட்டு மறுபடியும் புதிதாக ஆரம்பியுங்கள். களைப்பான சமயங்களும் இந்த சோதனைக்கு உகந்ததல்ல. அந்த நேரங்களிலும் சோதனை செய்வதைத் தவிருங்கள்.
அது போல உங்களுக்கு மிக நெருங்கியவர்கள் ஏதாவது சிந்தனையில் இருக்கையில் அவர்களிடம் கேட்காமலேயே அதை உங்களால் உணர முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள். முன்பு சொன்னது போல யூகம், கற்பனை இரண்டின் வழியாக அல்லாமல் தானாக மனதில் வந்து சேரும் வரை பொறுமையாகக் காத்திருங்கள். தானாக விடை ஏதும் வராவிட்டால் விட்டு விடுங்கள்.
கட்டாயப்படுத்தி வரவழைக்க நினைக்கும் விடைகள் சரியாக இருப்பதில்லை. ஒரு விடை மனதில் உறுதியாகத் தோன்றினால் விடை சரி தானா என்று அவர்களிடம் கேட்டு சரிபாருங்கள். தவறாக இருந்தால் அதைப் பொருட்படுத்தாதீர்கள். இது ஒன்றும் உங்கள் வாழ்வை நிர்ணயிக்கும் பரீட்சை அல்ல. அடிக்கடி முயற்சி செய்யுங்கள். போகப் போக நீங்கள் அந்த உணரும் சக்திக்கு ‘ட்யூன் ஆக’ ஆரம்பிப்பீர்கள். பின் நீங்கள் இந்தத் திறனில் வெற்றி பெறுவது அதிகரிக்க ஆரம்பிக்கும்.அடுத்ததாக நீங்கள் உங்கள் எண்ணத்தை அடுத்தவருக்கு அனுப்புவது பற்றிய சோதனையை ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் எளிய சோதனைகளையே ஆரம்பியுங்கள்.
உதாரணத்திற்கு தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது முன்னால் போகும் நபர் திடீரென்று உங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று உறுதியாக எண்ணுங்கள். அவரது பின் கழுத்தில் உங்கள் பார்வையைப் பதித்து ஆழமாக எண்ணுங்கள். அவர் திரும்பிப் பார்க்கிறாரா என்று பாருங்கள். உங்களிடம் பேச வரும் நபர் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு சொல்லை அல்லது ஒரு விஷயத்தைப் பற்றி கண்டிப்பாக உங்களிடம் சொல்ல வேண்டும் என்று உறுதியாக, ஆழமாக எண்ணுங்கள். நீங்கள் நினைக்கிறபடி அந்த நபர் நடந்து கொள்கிறாரா, சொல்கிறாரா என்று பாருங்கள்.
அப்படி நடக்கா விட்டால் அது உங்களின் சக்தியின் குறைபாடாக இருக்க வேண்டியதில்லை. வேறு காரணங்கள் கூட இருக்கலாம். உங்கள் முன்னால் போய்க் கொண்டிருக்கும் நபர் தன்னைப் பாதிக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போயிருக்கலாம். ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து போய் இருக்கிற நபரை அந்த சிந்தனையில் இருந்து வெளியே வர வைத்துப் பின் திரும்ப வைப்பது மிகவும் சக்தி படைத்த ஒருசிலரால் மட்டுமே முடியும். ஓரளவு சக்தி பெற்றவர்களாலும் கூட அது முடியாது. அது போல ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போய் அதைப் பற்றி உங்களிடம் பேச வரும் ஒரு நபரை சம்பந்தமில்லாத விஷயத்தையோ, அதற்குப் பொருத்தமில்லாத வார்த்தையையோ சொல்ல வைப்பதும் கடினமே. ஆகவே இது போன்ற சமயங்களில் முன்பே ஏதோ சிந்தனையிலோ, கவலையிலோ, வேலைப்பளுவிலோ மூழ்கி இருப்பவர்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப் பொருத்தமானவர்கள் அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்.
இது போல பல சோதனைகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உருவாக்கிக் கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்களைக் கூட வாய் விட்டுச் சொல்லாமல் உங்கள் எண்ணங்கள் மூலம் இயக்க முடிகிறதா என்று பாருங்கள். இதிலும் அது அந்த நபருக்கு இசைவில்லாத செயல்களைச் செய்ய வைக்கும் முயற்சியாக இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த சோதனைகள் சுவாரசியமானவை. இதில் கிடைக்கும் வெற்றி தோல்விகளுக்குப் பெரிய முக்கியத்துவத்தைத் தராதீர்கள். சற்று முன் விளக்கியபடி தோல்விகளுக்கு உங்கள் ஆழ்மனசக்திக்கு சம்பந்தமில்லாத வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அதையும் அலசுங்கள்.
போகப் போக உங்கள் முயற்சிகளில் வெற்றிகள் அதிகரித்துக் கொண்டே போவதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் இந்த சோதனைகள் குறித்தும், நீங்கள் அடைந்த வெற்றிகள் குறித்தும் மற்றவர்களிடம் சொல்வதையோ, அலசுவதையோ தவிர்ப்பது நல்லது. காரணத்தைப் பின்பு பார்ப்போம்.

Saturday, September 17, 2011

மனோசக்தி பாடம் 8

யோகாவின் ஏழு சக்கர நிலைகள்

யோக மார்கத்தில் இருக்கும் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் குண்டலினி வார்த்தையை உபயோகிக்காமல் இருக்க முடியாது. அடிப்படையான உயிராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள். யோகா மற்றும் தியானங்களில் திளைத்தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும் அறிவார்கள்.

உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம். ஒரு பாம்பு அசையாமல் இருக்கும்போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும்போதுதான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும்போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்துவமும் நமக்குப் புரியும். குண்டலினியை எழுப்பினால் என்ன செய்ய முடியும் என்று சொல்வதற்கு முன் மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது.

சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. அது என்ன உணவாக இருந்தாலும் அதிலுள்ள புரதம், கொழுப்பு எதுவாயுனும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப்படுகிறது. இந்தப் பிராண சக்தியே வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70000 நாடிகள் வழியாகப் பாய்கிறது. இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு முக்கிய மைய நாடிகளில் இணைகிறது. இவற்றையே மனித உடலில் ஏழு சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது. இவையே ஆற்றல் மையங்கள். (கட்டுரையில் ஆற்றல் மையம் என்றாலும் சக்கரம் என்றாலும் ஒரே பொருளாகக் கருத வேண்டுகிறேன்.) இந்த ஏழு சக்கரங்கள்தான் ஒவ்வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன. மனித உடலில் உள்ள இந்த ஏழு சக்கரங்களையும் ஒவ்வொன்றாகக் கீழிருந்து மேலாகக் காண்போம்.முதலில் மூலாதாரம்.
இது பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்க்கும் இடையில் அமைந்துள்ளது. சரியாக சொல்லவேண்டுமானால் முதுகுத்தண்டின் பின் புறமாக அமைந்துள்ளது ஆசனவாய்க்கு இரண்டு இஞ்சு மேலே என்று சொல்லலாம், இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன், உணவு, உறக்கத்தில் அதிக விருப்பம் கொண்டவனாக இருப்பான். இந்த மூலாதாரச் சக்கரம்தான் மனிதனின் வளர்ச்சிக்கு அடிப்படியான முக்கிய தூண்டு சக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் நிலத்துக்கு நிகராகச் சொல்லப்படுகிறது.

இரண்டாவது சுவாதிஷ்டானம்.
இது பிறப்புறுப்புக்கு சற்று மேலாக அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க நாட்டம் கொள்வான். இந்தச் சக்கரம் நீர்த் தத்துவத்துக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.

மூன்றாவது மணிப்பூரகம்.
இது தொப்புளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும். மணிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான். இந்தச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதிபலிக்கிறது.

நான்காவது அனாகதம்.
இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு மற்றும் படைப்பாற்றல் ஆகும். இது காற்று தத்துவத்தைக் குறிக்கிறது.

ஐந்தாவது விசுக்தி.
இது தொண்டைக் குழியில் அமைந்துள்ளது. ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் தீமைகளை தடுத்து நிறுத்துவது ஆகும்.

ஆறாவது ஆக்ஞை (அல்லது ஆக்கினை).
இது மனிதனின் புருவ மத்தியில் அமைந்துள்ளது. ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்படக் காரணமாக அமைவது இந்தச் சக்கரம்தான்.
இறுதியாக சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்).
இது உச்சந்தலையில் அமைந்துள்ளது. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித் தருவது இந்தச் சக்கரம்தான். இந்தச் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக மலர்வதைப் போல் சொல்லப்படுகிறது.

சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத்தூண்டப்படுவது இல்லை. பெரும்பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப்பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். வெகுசிலர்தான் நான்கு வரை வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.

இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவதுதான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலினியை எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும்போது மனிதனின் அளப்பறியா ஆற்றல் வெளிப்படுகிறது.
அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள்தான் யோகாவும் தியானமும்.

பொதுவாகவே எல்லா யோகா மற்றும் தியானப் பயிற்சிகளும் கட்டுப்பாடற்ற ஐந்து புலன்கள், மனம் மற்றும் உணர்ச்சிகளை ஒரு நிலைக்குக் கொண்டு வர வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கொண்டு வரும்போது புலன்கள் தாண்டிய ஓர் அனுபவத்தை உணர வாய்ப்பாக அது அமைகிறது. இந்தவொரு அனுபவத்தை அடைவதே மனித வாழ்வின் இலட்சியம் என்று விவேகானந்தர் பல இடங்களில் குறிப்பிட்டதுண்டு. ‘ஆமாம், இதெல்லாம் என்ன பேச்சு? சாதரண வாழ்வுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?’ என்கிறீர்களா?
நீங்கள் பிறந்து இத்தனை வருட வாழ்வில் எப்பொழுதாவது, “நான் ஏன் பிறந்தேன்” என்று உங்களைக் கேட்டுக்கொண்டதுண்டா? கேட்டிருந்தால் பதில் கிடைத்ததா? கிடைத்த பதில் உண்மையில் முழுமையானதா? அப்பதில் முழுமை எனில் உங்கள் வாழ்வும் பரிபூரண சுகமாக முழுமையாக இருக்கும். ஆனால் பெரும்பான்மையோர்க்குக் கிடைக்கும் பதில் அறிவியலில் இருந்து கிடைத்த அரைகுறை பதிலாகத்தான் இருக்கும். அந்த பதில்கள் இம்மி அளவு கூட சுகத்தைத் தராது. ஏன் பிறந்தேன் என்பதே தெரியாமல் இருப்பதால்தான் ஏன் வாழ்கிறேன் என்று புரிவதில்லை. பெரும்பான்மை மக்கள் “பிறந்து விட்டேன்; அதனால் வாழ்கிறேன்” என்றுதான் வாழ்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வாழ்வை பரிபூரணமாக உணர்வதோ வாழ்வதோ இல்லை.
பிறந்ததே ஏன் என்று தெரியாமல் இருப்பதால்தான் வாழ்கையை பற்றி ஒன்றும் புரிவதில்லை. சரி, பிறந்தது ஏன் என்று தெரிவதில்லை. இறுதி நிலையாவது தெளிவாகத் தெரிந்தால்தானே அதற்காக முயற்சி செய்து அதை அடைந்து வாழ்வை பரிபூரணமாக்க முடியும். இறுதி நிலை என்ன என்றாவது தெரிந்து நீங்கள் அதை அடைய முயற்சி செய்ததுண்டா? ஆதியும் (பிறப்புக்கு முன்) புரியவில்லை, அந்தமும் (இறப்புக்கு பின்) புரியவில்லை. அப்புறம் எப்படி இடைப்பட்ட வாழ்வைப் புரிந்துகொள்ள முடியும். பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உள்ளதை அறிவதே ஆன்மிகம். இதைத் தவிர வேறு எதுவும் ஆன்மிகம் ஆகாது. நீங்கள் வேறு எதிலாவது ஈடுபட்டிருந்தால் அது ஆன்மீகப் பாதைக்கான முயற்சியாகவோ / அல்லது படி நிலைகளாகவோ இருக்கலாம். உங்களுடைய இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரோ ஒருவர் பதில் சொல்லி உங்களுக்குப் புரியவைக்க முடியாது. அப்படி முயன்றால் நீங்கள் அதை வெறுமனே நம்ப முடியும் அல்லது கட்டுக்கதை என்று உதறித் தள்ளத்தான் முடியும். இந்தக் கேள்விகளுக்கு விடையுமாய் வாழ்வை பரிபூரணமாக்கும் அருமருந்தாய் மேற்சொன்ன புலன்கள் தாண்டிய அனுபவம் இருக்கும். சாதரண மனிதனுக்கும் இது சாத்தியமே. தேவை முயற்சி மட்டுமே. அதற்கான வழிமுறை குண்டலினியை எழுப்புவதே. கருவிகள் யோகாவும் தியானமும். சாதாரண வாழ்வுக்கு இது மிகத் தொலைவானது அல்ல. மிக நெருங்கியதே. அத்தகையதொரு புலன்கள் தாண்டிய அனுபவம் உங்கள் மொத்த வாழ்வையும் வேறொரு பரிமாணத்தில், பரிபூரணமான ஒன்றை அடித்தளமாகக் கொண்டு நகர்த்திச் செல்லும். இந்த, புலன்கள் தாண்டிய நிலையே, “யோகம்”. இந்த யோக நிலையையே ஆன்ம விடுதலை, ஜீவன் முக்தி, இறையோடு கலத்தல், தன்னை உணர்தல் என்று பலரும் பலவாறாகச் சொல்கிறார்கள்.

சாதரண வாழ்வுக்கு இது நெருங்கியதே என்று சொல்லியாகிவிட்டது. அது எப்படி என்றும் சொல்லி விடுகிறேன். நம் வாழ்வில் எதை அடைவதாயினும் நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்றை வைத்துத்தான் அடைய முடியும். இல்லாத ஒன்றை வைத்து எதையும் அடைய முடியாது. நம்மிடம் என்ன உள்ளது? உடல் உள்ளது, மனம் உள்ளது, உணர்ச்சி உள்ளது, எல்லாவற்றிற்கும் மேலாக உயிர் சக்தி உள்ளது. இந்த நான்கில் ஏதாவது ஒன்றின் மூலமாகத்தான் நாம் எந்தொவொரு செயலும் (கர்மா) செய்ய முடியும்.
உங்கள் உடலைப் பயன்படுத்தி செயல் செய்து யோக நிலையை அடைவது கர்ம யோகம். உங்கள் மனதைப் பயன்படுத்தி அல்லது புத்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது ஞான யோகம். உங்கள் உணர்ச்சியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது பக்தி யோகம். உங்கள் உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது கிரியா யோகம்.
இந்த நான்கு யோக முறைகளில் ஏதாவது ஒரு முறையில் யோக நிலையை அடைவோர் சமூகத்தோடு இணைத்து இருப்பதை விரும்புவதில்லை. ஆனால் இவை நான்கையும் சரியான அளவில் கலந்து பயிற்சி பெறுபவர் சமூகத்தில் இருந்தே யோக நிலையை அடையலாம். இந்த நான்கையும் கலந்து கொடுப்பது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசப்படும். அதற்குதான், “குரு” என்பவர் தேவை. ஆக, யோக நிலை என்பது சமூக வாழ்வைத் துறந்தால்தான் அடைய முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம்.

Saturday, August 27, 2011

மனோசக்தி பாடம் 7

தியானம்மன அலைச் சுழலை Beta Frequency யிலிருந்து படிப்படியாகக் குறைக்கும் கலைக்கு தியானம் என்று பெயர்...
மனதின் அதிர்வெண்கள்
14 - 40 Cycles / Sec Beta
8 - 13 Cycles / Sec Alpha
4- 7 Cycles / Sec Theta
1 - 3 Cycles / Sec Delta

அதிர்வெண்களை EEG(Electro Encephologram) மூலம் அறியலாம்.
நாம் பெரும்பாலும்
பீட்டா நிலையிலேயே இருக்கின்றோம். இந்த நிலை உணர்ச்சிவயப்பட்ட நிலை.

ஆல்பா நிலை கொஞ்சம் அமைதியான நிலை. தியானம் செயதால் இது கிடைக்கும்.

தீட்டா நிலை ஆல்பாவிற்கு அடுத்த நிலை ஆழமான அமைதி.

டெல்டா நிலை இது மருத்துவ அறிவியலில் கோமா நிலை. இங்கே மனிதனுக்கு சுயநினைவு இருப்பதில்லை.
ஆனால் தவத்தில் பழகப் பழக மனம் இறைநிலையுடன் தொடர்பு கொள்ளும்
இதுதான் சமாதி...
அஷ்டாங்க யோகத்தின் கடைசிக் கட்டம் சமாதி....
யோகத்தின் வகைகள்
யம, நியம, ஆசன, ப்ரத்தியாகாரா, ப்ராணாயாமா, தாரணா, தியானா, சமாதி
என எட்டு நிலைகள் கொண்டதே யோகம் . இதில் தியானம் என்பது ஒரு படி
சக்கரங்கள்
கண்ணுக்கு தெரியாமல் (சூட்சமத்தில் ) இருக்கக்கூடிய சக்தி மையங்கள் 7

மூலாதாரம்,
ஸ்வாதிஸ்டானம் ,
மணிப்பூரகம் ,
அனாகதம்,
விசுத்தி ,
ஆக்ஞை ,
மற்றும் சஹஸ்ராரம் ( ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை )

Thursday, August 25, 2011

மனோசக்தி பாடம் 6

யோகா முத்திரைகள்


முத்திரை யோகம் ஹதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.
ஆயுர்வேதம் மற்றும் யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த
“பஞ்ச மஹாபூதங்கள்” ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி. ஆகாயம் “ஈதர்” என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கபதத்துவமாக சொல்லப்படுகிறது. வாயு உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து வாயு உடலில் வாதத்தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. அக்னி பித்தம். லகுவானது. வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த பஞ்சபூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.
நமது கைகளின் ஐந்து விரல்கள் பஞ்ச பூதங்களை குறிக்கின்றன
1. கட்டைவிரல் – அக்னி
2. ஆள்காட்டி விரல் – வாயு
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – பூமி
5. சுண்டுவிரல் – நீர்.
இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால்
உடல் நலம் கூடும்.
முத்திரைகளை பயிலும் முறை
1. “பத்மாசனம்” போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.
2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.
3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு “சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.
4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.
5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.
6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.
முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில
1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.
பயன்கள் – களைத்தை உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.
2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.
பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி ‘பிராண முத்திரையுடன் செய்தால்’ தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.
3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.
பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சலியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.
4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.
5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.
6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.
7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.
பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.
8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.
பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.
9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.
பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
எச்சரிக்கை
1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.
2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.
11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.
பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.
12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.
பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.
நமது பழங்கால முனிவர்கள் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்.

Friday, August 19, 2011

மனோசக்தி பாடம் 5

ஆழ்நிலை தியானம்


ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. அத்துடன் இதன் பண்பும், பயனும் பல அறிவியல் ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே இப்பயிற்சி முறை மொழி, சமயம், மார்க்கம் போன்ற குறுகிய எல்லைகளையெல்லாம் கடந்து பரந்து விரிந்து நிற்கிறது. மன இறுக்கமும், மனத் தொய்வும், மகிழ்ச்சியின்மையும் மாற்றுகின்ற ஒரு அரிய மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பரபரப்பு, மனக்கலக்கம், மனத்தவிப்பு, மனத்தொய்வு, தூக்கமின்மை, மன இறுக்கம், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய்க்கு முன் தோன்றும் வேதனை, மலக்குடல் குறைபாடு போன்ற பல குறைபாடுகளை நீக்கவல்லது.
இந்த தியான முறையெனக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக மூப்படைவதையே இத்தியான முறை தடை செய்யக் கூடும் என ஒரு ஆய்வு முடிவு உறுதிப்படுத்துகிறது.
அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.

ஆழ்நிலை தியானத்தின் நன்மைகள் பற்றிப் பேசுகின்ற போது “ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனத்தின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்த கற்றுக் கொள்வது என்பது உடல் நலம் பேண உதவுகின்ற ஒரு நல்ல முறையாகும். நாள் தோறும் நமது நரம்பு மண்டலத்தில் ஏற்படுகின்ற தேய்மானங்களை நீக்கி நரம்புகளை நெறிப்படுத்தி உள்ளத்திற்குப் புத்துணர்ச்சியும், புது உணர்வும் தருவதுடன் நமது தடுப்பாற்றல் சக்தியை உயர்த்தவும் மனநிலை தொடர்புடைய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது” என்று தமது ‘மெடிடேசன் பார் எவிரி படி’ (பெண்குயின்) என்னும் நூலில் குறிப்பிடுகிறார் புகழ் மிக்க உளவியலாரான லூயி புரோடோ.
இலக்கின்றி அலைகின்ற மனதை அடக்கி, அதன் பொருளற்ற புலம்பல்களை நிறுத்தி உள்ளத்தில் சாந்தியும், அமைதியும் நிலவச் செய்வதே தியான முறையாகும். ஆனால் இதைச் செய்கின்ற வழி ஒவ்வொரு தியான முறைக்கும் வேறுபடுகிறது.

ஆழ்நிலை தியானத்தைப் பொருத்தவரை அமைதியான முறையில் அமர்ந்து ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் மனதிற்குள் ஜெபம் செய்வதாகும். மனப்பாடம் செய்கின்ற காலத்தில் மனம் சில நிமிட நேரம் மனத்தில் ஒன்றலாம். சில நேரம் விலகியும் போகலாம். அது பற்றிக் கவலை கொள்ளாமல் திரும்பத் திரும்ப மனதை ஒரு முகப்படுத்த வேண்டும். நாட்கள் செல்லச் செல்ல, பழக்கம் மனதில் படியப், படிய தொடர்பில்லாத சிந்தனைகள் வருவதும் மனம் அலைபாய்வதும் மட்டுப்படும். மேற்பரப்பில் உயர்ந்தும், தாழ்ந்தும் அலை அலைபாய்கின்ற கடலின் அடியில் சென்று பார்த்தால் நீரின் கீழே ஒரு ஆழ்ந்த அமைதி தென்படுவது தெரியும். அந்த நிலையை ஆழ்நிலை தியானத்தின் மூலம் மனதிற்குள் உணர முடியும்.
‘பீல் கிரேட் வித் டி.எம்’ என்னும் தமது நூலில் டி.எம் என்னும் இவ்வரிய பயிற்சி, மன முறுக்கினை அவிழ்த்து, உடற் தசைகளைத் தளர்வித்து இதுவரை உணராத ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது”, என்று கூறுகிறார்கள். ஜிம் ஆண்டர்சனும், பில் ஸ்டீவன்சனும், அமைதியான நிலையில் எழுகின்ற சிந்தனைகள் வலுமிக்கதாகவும், ஆழ் மனதிலிருந்து எழுவதாகவும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

உரத்த குரலில் ஜெபிப்பதும், மனப்பாடம் செய்வதும் புத்த மதத்தினரின் ஸென் எனப்படும் தியான முறையில் பின்பற்றப்படுகிறது. இதில் ஒரே சீராக மூச்சு விடுவதும் மார்பு உயர்ந்து தாழ்வதுமே உணரப்படுகிறது. விபாஸ்ஸனா என்னும் மற்றுமொரு வகைப் புத்த மதத்தினரின் தியான முறையில் உடலிலிருந்து விடுபட்ட நிலையில், வெளியிலிருந்து கொண்டு, உடலையும், மனதையும் உற்று நோக்குதல் பயிலப்படுகிறது.
தய் சூ ச்சுஹான் என்னும் போர்க் களப் பயிற்சி முறையும் அய்க்கிடோ என்னும் ஜப்பானியப் பயிற்சியும் அசைவு அல்லது இயக்கத்தின் மூலம் செய்யப்படுகின்ற தியான முறைகள் என்று கருதப்படுகின்றன.

இந்த தியான முறையில், பயிற்சி பெறுபவர்க்கு ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை சொல்ல வேண்டும் இந்த மந்திரத்தை தினம் காலையிலும் மாலையிலும் 1/2 மணி நேரம், மனதுக்குள்ளேயே ஜபிக்க வேண்டும். இதற்காக பத்மாசனத்தில் தான் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும் என்பதில்லை. நாற்காலியில் உட்கார்ந்து கூட ஜபிக்கலாம். ஜபிக்கும் போது மனது அலைபாய்ந்து எண்ணங்கள் சிதறினாலும், விடாமல் மந்திரத்தை சொல்லிக் கொண்டே (மனதுக்குள்) இருக்க வேண்டும். ஆழ்நிலை தியானத்தை பயின்றவர்கள் மனதை ஒரு முகப்படுத்துவது இந்த முறையால் சுலபமாகிறது என்கின்றனர்.

Monday, August 15, 2011

மனோசக்தி பாடம் 4


ஹாரா தியானம்

ஹாரா என்பது மையம் என்ற பொருளைத் தரும் ஜப்பானியச் சொல். இது தொப்புளுக்குக் கீழ் இரண்டு விரல் அகலம் கழித்து இருக்கும் பகுதியைக் குறிக்கும். இது மணிப்புரா சக்ரா சக்தி மையத்தைக் குறிக்கும். இது உடலின் வலிமைக்கு முக்கிய மையமாக கருதப்படுகிறது. ஒருவன் இந்த சக்தி மையத்தில் கவனத்தைக் குவித்து தியான நிலையில் இருக்கும் போது எல்லையற்ற சக்தியுடையவனாக இருக்கிறான் என்கிறார்கள். அய்கிடோ (Aikodo) என்ற ஒரு வகை ஜப்பானிய மல்யுத்ததில் இந்த ஹாரா பகுதி மிக முக்கியத்துவம் வகிக்கிறது.

அய்கிடோவை உலகத்திற்கு அளித்த Morihei Ueshiba ஹாராவில் தன்னை ஐக்கியமாக்கி இருக்கும் கலையில் இணையற்ற நிபுணராக விளங்கினார். அப்படி ஒரு முறை அவர் இருக்கையில் சக்தி வாய்ந்த ஐந்தாறு மனிதர்கள் என்ன முயன்றும் அவரைத் தூக்கவோ, அவரை நகர்த்தவோ பிரம்மப் பிரயத்தனம் செய்தும் முடியாமல் தோற்றுப் போனார்கள். இன்னொரு நிகழ்ச்சியில் ஒரு சேர ஆறு பயிற்சி வீரர்கள் அவரைத் தாக்க வந்த போது எந்த வித அலட்டலும் இல்லாமல் அந்த ஆறு பேரையும் ஒவ்வொருவராக அவர் தூக்கி எறிந்ததாகச் சொல்லப்படுகிறது. இது கேட்பதற்கு தமிழ் சினிமா கதாநாயகன் போடும் சண்டைக் காட்சி போல தோன்றினாலும் பல பேர் முன்னிலையில் நடத்திக்காட்டப்பட்ட சம்பவங்கள்.
பண்டைய மருத்துவ சிகிச்சை முறைகளிலும் ஹாரா பகுதி மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது. உடலின் எல்லா நோய்களையும் கண்டறிய வயிற்றுப் பகுதியே அதிகம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. உடலுறுப்புகளின் ஒருங்கிணைப்பு முறையாக இல்லாவிட்டாலும் அதை ஹாரா பகுதி மூலம் அக்காலத்தில் கண்டறிந்தார்கள். அதை சரி செய்யவும் ஹாரா பகுதியை பலப்படுத்தவும் மூச்சுப் பயிற்சியும், தியானமும் பயன்படுத்தப்பட்டன. இனி ஹாரா தியானம் செய்யும் முறையைக் காண்போம்.
1) தரையில் சம்மணமிட்டோ, அல்லது நாற்காலியிலோ சௌகரியமாகவோ நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள்.


2) படத்தில் காட்டியுள்ளது போல் உங்கள் வலது கைவிரல்கள் மீது இடது கைவிரல்களை வைத்து இரு பெருவிரல்களும் லேசாகத் தொட்டுக் கொண்டிருக்கும் படியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் கைகள் ஒரு நீள்வட்டத்தை உருவாக்கி இருக்கும். மிகவும் பவித்திரமான ஒரு பொருளை அந்தக் கைகளில் வைத்திருப்பது போல் கவனத்துடன் இந்த முத்திரையை வைத்திருங்கள். இந்த முத்திரை மனதை அமைதியாக வைத்திருக்க மிகவும் உதவுவதாகக் கருதப்படுகிறது. உங்கள் கைகள் உங்கள் அடிவயிற்றை லேசாக ஒட்டியபடி இருக்கட்டும்.


3) உங்கள் கவனம் உங்கள் மூச்சில் இருக்கட்டும். மூச்சு சீராகும் வரை முழுக்கவனமும் மூச்சிலேயே வைத்திருங்கள்.


4) அமைதியை உள்மூச்சில் பெறுவதாகவும், டென்ஷன், கவலை போன்றவற்றை வெளிமூச்சில் வெளியே அனுப்பி விடுவதாகவும் எண்ணிக் கொள்ளுங்கள். சில மூச்சுகளில் மூச்சு சீராகி மனமும் அமைதி அடைந்தவுடன் உங்கள் கவனத்தை ஹாரா மீது திருப்புங்கள்.

5) ஹாரா பகுதியில் ஒரு பொன்னிற பந்து இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்தப் பந்தை சக்திகளின் இருப்பிடமாக எண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் உள்மூச்சில் அந்தப் பொன்னிறப்பந்து விரிவடைவதாகவும், வெளிமூச்சில் பழைய நிலைக்கு சக்தி பெற்று திரும்புவதாகவும் நினைத்துக் கொள்ளுங்கள்.

6) இப்படி நீங்கள் செய்யச் செய்ய உங்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள இறுக்கம் எல்லாம் குறைந்து ஒரு விதமாக லேசாவதை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்.

7) இந்தப் பயிற்சியால் ஹாரா அல்லது மணிப்புரா சக்ரா கழிவுகள் நீங்கி சுத்தமடைவதாகவும், பெரும் பலம் பெறுவதாகவும் உணருங்கள்.

8) ஆரம்பத்தில் உருவகப்படுத்தி செய்த இந்த தியானம் பயிற்சியின் காலப்போக்கில் உண்மையாகவே ஹாராவின் சக்தியை பலப்படுத்தி அசைக்க முடியாத மன அமைதியையும், மன உறுதியையும் ஏற்ப்படுத்த ஆரம்பிக்கும்.

இந்த தியானம் மன அமைதியை மட்டுமல்லாமல் உடல் வலிமைக்கும் மிகவும் உதவுகிறது. நாம் முன்பு கண்டபடி Aikodo வில் மட்டுமல்லாமல் உடலின் பொதுவான பலத்திற்கும், இந்த ஹாரா தியானம் பெருமளவு உதவுகிறது. ஹாராவில் மனதைக் குவித்து ஐக்கியமாகி இருக்கும் சமயங்களில் எந்த வித தாக்குதலிலும் தளர்ந்து விடாமலும், நிலை குலைந்து விடாமல் இருத்தல் மிக சுலபமாகிறது.

மன அமைதி, உடல் வலிமை இரண்டையும் தரவல்ல ஹாரா தியானத்தை நீங்களும் செய்து பார்த்து பலனடையலாமே

Sunday, August 14, 2011

நம்பிக்கை


நம்பிக்கை


நம்பிக்கை மாபெரும் சக்தி. அது மலைகளை நகர்த் துவதோடு, தடைகளை தகர்த்தெறியும் சக்தி கொண்டது. அது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தருவ தோடு வாழ்க்கையை சந்தோசமாகவும் மாற்றிவிடுகின்றது.

எமது அனைத்து விதமான சிக்கல்கள், தோல்விகளுக்கும் தீர்வு நம்பிக்கை தான் எனலாம். எமது உள்ளத்தில் எப்போது அது நுழைகின்றதோ அப்போதே எம்மை விட்டும் ஏமாற்றம் அழுத்தம் என்பன வெளியேற்றப்படுகின் றன. "கடுகளவு நம்பிக்கை வைத்துக் கொண்டு மலையை நகருமாறு சொல்லுங்கள். அது நகர்ந்துவிடும்" என் றொரு முன்னோர் கருத்தும் இருக்கின்றது.

நம்பிக்கை தடைகளைத் தாண்டும்
தன்னம்பிக்கையே வெற்றியின் இரகசியம்" என ராலிப் வார்டோ இமர்சன் கூறுகிறார். அதேபோல கோதே (Gothe) என்ற ஜேர்மனிய கவிஞன் "நீ எவ்வளவு வேக மாக உன்மீது நம்பிக்கை கொள்கிறாயோ அவ்வளவு விரைவாக வாழ்க்கைத் தத்துவத்தை புரிந்து கொள் வாய்" என்றான்.
எனவே வாழ்வின் சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நம்பிக்கை என்பது அவசியமாகின்றது. பிரச்சினைக ளின் போது கஷ்டப்படுத்திக் கொள்ளாதீர்கள். அமை தியாக (Stay calm) நம்பிக்கையோடு (Be faith) இருங்கள். ஏனெனில் நம்பிக்கை என்பது அனைத்து கஷ்டங்களை யும் தகர்த்தெறியக் கூடியது.

நேர்முகச்சிந்தனை

நேர்முகச்சிந்தனை
நீங்கள் வெற்றிபெறப் பிறந்தவர்; நினைத்தை முடிக்கும் ஆற்றல் பெற்றவர்; விரும்பியதை அடையும் தகுதியும் திறமையும் இயற்கையாக உங்களிடம் உள்ளன.
உங்களைப் போன்றுதான் எல்லா மனிதர்களுமே படைக்கப்பட்டுள்ளனர். இயற்கை, மனிதன் வளர்வதற்கேற்ப, உயர்வதற்கேற்ப, முன்னேறுவதற்கேற்ப, வெற்றிபெறுவதற்கேற்ப, அவன் உடலையும், மனதையும் நுணுக்கமாக உருவாக்கியுள்ளது.
ஆனால், பெரும்பாலான மனிதர்கள் வறுமையில் வாடுகின்றனர். பற்றாக்குறையில் பரிதவிக்கின்றனர். தோல்வியில் துவண்டுபோய் இருக்கின்றனரே! இது ஏன்?நீங்கள் எதிர்மறைச் சிந்தனை என்னும் சிறையில் அகப்பட்டுக் கொண்டீர்கள்.

வேறு யாரும் உங்களைச் சிறையில் அடைக்கவில்லை.சிறையை அமைத்தவரும் நீங்கள்தான். அதனுள் அடைத்துக் கொண்டவரும் நீங்கள் தான். சுதந்திரத்தை இழந்து துன்பப்படுபவரும் நீங்கள்தான்.எவராவது நம் அறையை நோக்கி வர மாட்டார்களா? கதவைத் திறக்க மாட்டார்களா? நம்மைச் சிறைமீட்க மாட்டார்களா? என்று ஏங்கிக் கொண்டுள்ளீர்கள்.சிறைக்கதவில் உள்ள “முடியாது, நடக்காது, ஆகாது, கிடைக்காது” என்னும் நான்கு கம்பிகளையும் எண்ணிக் கொண்டுள்ளீர்கள்.“வறுமை, பற்றாக்குறை, தோல்வி” ஆகிய சிறையிலிருந்து நீங்கள் விடுதலை பெறுவது எப்படி? ஒன்று முடியாது, ஆகாது, கிடைக்காது என்னும் நான்கு கம்பிகளையும், வளைத்து முறித்துக்கொண்டு வெளியில் வரவேண்டும். அல்லது சிறைக்கதவின் பூட்டைத் திறக்கும் சாவி எங்கே, எவரிடம் உள்ளது என்று கண்டுபிடிக்க வேண்டும்.உங்கள் விடுதலையைத் தடை செய்யும் கம்பிகளை முறிப்பது கடினமானதன்று.
அத்துடன் சிறைக்கதவின் பூட்டைத்திறக்கும் சாவி உங்களிடமே உள்ளது என்பது ஒரு ஆச்சரியமான, அதிர்ச்சிதரும் உண்மை.“எதிர்மறை எண்ணம்” என்னும் கற்களால் சிறையை அமைத்து, “முடியாது, நடக்காது, ஆகாது, கிடைக்காது” என்னும் கம்பிகளால் கதவை அமைத்து, உங்களை நீங்களே சிறையில் அடைத்துக்கொண்டு, கதவைத் திறக்கும் சாவியை சட்டைப்பையில் போட்டுக் கொண்டீர்கள்.“மனம்” என்னும் சட்டைப்பையில் “எண்ணம்” எனும் சாவியைப் போட்டது நீங்கள்தான். ஆனால், பூட்டுவதற்குப் பயன்பட்ட எண்ணம் என்னும் சாவிதான் திறப்பதற்கும் பயன்படும் உண்மை உங்களுக்கு தோன்றவில்லை.உண்மையில் உங்களை விடுதலையாக்கும் “ஆக்கமனப்பான்மை” என்னும் சாவி உங்கள் மனம் என்னும் சட்டைப் பையில்தான் உள்ளது.அதை நீங்கள் எடுக்க வேண்டும், அடைத்துக் கொண்டதும் “எண்ணம்” என்னும் சாவியால்தான்; சிறைக்கதவின் பூட்டைத்திறக்கப் பயன்படுத்தப்போவதும் “எண்ணம்” என்னும் சாவிதான்.எண்ணம் என்னும் சாவிக்கு இரு முகங்கள்உண்டு. ஒன்று ஆக்க முகம் மற்றொன்று எதிர்மறை முகம் ஆனாலும் சாவி ஒன்றுதான் அப்படியானால், ஆக்கமனப்பான்மை, என்றால் என்ன? அச்சாவியை கொண்டு வறுமை என்னும் சிறைக்கதவின் பூட்டைத்திறந்து, வெற்றி என்னும் விடுதலையை அடைவதுஎப்படி? என்று அறிவதில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.நல்லது. அறிந்துகொள்வோம்.

நீங்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில்வெற்றி பெற விரும்புகிறீர்கள் அல்லது தொழில், வணிகத்தில், ஐந்து ஆண்டுகளில் ஒருகோடி ரூபாய் சம்பாதிக விரும்புகிறீர்கள். அல்லது நீங்கள்பணியாற்றும் கல்லூரியின் முதல்வர் ஆக விரும்புகிறீர்கள். அல்லது தமிழ் நாட்டளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆக விரும்புகிறீர்கள் அல்லது தமிழ் நாட்டு அமைச்சராக விரும்புகிறீர்கள்.மேற்கூறிய குறிக்கோளில் ஒன்றை அல்லது உங்கள் ஆசையில் ஒன்றை மட்டும், தேர்ந்தெடுத்து அதற்கான முயற்சியில் இறங்கிவிட முடியுசெய்யுங்கள்.நீங்கள் தேர்ந்தெடுத்த குறிக்கோளை நினைத்துக்கொண்டே சற்று நேரம் கண்களை மூடுங்கள். கண்களை மூடிய நிலையிலேயே ‘என் குறிக்கோளில் நான் வெற்றிபெற முடியுமா?’ என்று வாய்விட்டுக் கேளுங்கள். மீண்டும் மீண்டும் சில நிமிடங்களுக்கு இதே கேள்வியைக் கேளுங்கள்.நீங்கள் கேட்ட கேள்விக்கு ‘முடியும்’ என்னும்பதில் கிடைத்திருக்கலாம். சிலருக்கு ‘முடியாது’ என்னும் பதில் கிடைத்திருக்கலாம்.குறிக்கோளை நிறைவேற்றத் தேவையான சம்பவங்கள் நடக்குமா? “நடக்கும்” நான் செய்ய விரும்பும் சாதனைக்கான உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்குமா? “கிடைக்கும்” . நான் செய்துவரும் முயற்சிகள் ஒன்று சேர்ந்து சாதனையாக மாறுமா? “மாறும்”.நீங்கள் கேட்ட வினாக்களுக்கெல்லாம் உங்களுக்குள்ளிருந்து “முடியும், கிடைக்கும், நடக்கும் ஆகும், வேண்டும். இருக்கிறது” என்னும் பதில்கள் கிடைக்குமானால் நீங்கள் ஒரு நேர்மறைச்சிந்தனையாளர்.நீங்கள் கேட்ட வினாக்களுக்கு உங்களுக்குள்ளிலிருந்து “முடியாது, கிடைக்காது, நடக்காது, ஆகாது, இல்லை” என்னும் பதில்களைப் பெறுவீர்களானால் நீங்கள் ஒரு எதிர்மறைச் சிந்தனையாளர்.நீங்கள் புரிந்துகொண்டாலும் இல்லாவிட்டாலும் இவ்விருவகைச் சிந்தனைகள்தான் உங்கள் வாழ்க்கையை நிர்ணயித்திருக்கின்றன. அல்லது நிர்ணயிக்கப் போகின்றன.
மீண்டும் ஒருமுறை அதே கேள்விகளைக்கேட்டு முடியும். நடக்கும், கிடைக்கும், ஆகும் போன்ற பதில்களை அழுத்தமாக உணர்ச்சியோடு, மனப்பூர்வமாச் சொல்லிப்பாருங்கள்.உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி த்தும்பும்; முகம் விரிவடையும், உடல் பூரிக்கும்; மனதில் தெம்பு உண்டாகும்.அதே கேள்விகளை மீண்டும் கேட்டு, முடியாது, நடக்காது, ஆகாது என்னும் பதில்களை உணர்ச்சியோடு சொல்லிப்பாருங்கள்.உங்கள் உள்ளத்தில் கவலையும், ஏமாற்றமும் உதிக்கும்; முகம் சோர்ந்து போய்விடும்; மனதில் இருக்கும் தெம்பு இறங்குவதை நீங்களே உணர முடியும்.ஆக்கச் சிந்தனையால் ஏற்படும் உடல் உணர்ச்சி மாறுதல்களை நீங்களே அனுபவித்து அறியலாம். எதிர்மறைச் சிந்தனையால் உண்டாகும் உடல், உணர்ச்சி மாறுதல்களையும் நீங்களே அனுபவித்து உணரலாம்.ஒரே ஒருமுறை முடியும், நடக்கும், ஆகும், கிடைக்கும் என்று நினைத்தாலே உடலும், உள்ளமும் மாற்றம் அடைகின்றன. பல்லாயிரம் முறை இதே ஆக்கச்சொற்களை திரும்பத்திரும்பச் சொல்லி உள்ளத்தில் பதியவைத்தால், அப்பதிவு உங்கள் உடலிலும், உள்ளத்திலும், உணர்விலும் மிகப்பெரும் மாற்றத்தைத் தோற்றுவித்து விடுகின்றன.‘என்னால் எதுவும் முடியும்; நான் நினைப்பது எல்லாம் நடக்கும்; நான் கேட்பது எல்லாம் கிடைக்கும். நான முயல்வது எல்லாம் ஆகும்’ என்னும் நம்பிக்கை உடலோடும், உள்ளத்தோடும், உணர்வோடும் கலந்து விடுகிறது.

ஒரே ஒருமுறை முடியாது, நடக்காது, கிடைக்காது, ஆகாது என்று நினைத்தாலே உடலிலும், உள்ளத்திலும் எதிர்மறை மாற்றம் ஏற்படுகிறது. பல்லாயிரம் முறை இதே எதிர்மறைச் சொற்களைத் திரும்ப திரும்பச் சொல்லிப் பதியவைத்தால், அப்பதிவு உங்கள் உடலிலும், உள்ளத்திலும், உணர்விலும் மிகப்பெரும் எதிர்மறை மாற்றங்களைத் தோற்றுவித்து விடுகின்றன.என்னால் எதுவும் முடியாது; நான் கேட்பது எதுவும் கிடைக்காது; நான் கேட்பது எதுவும் கிடைக்காது; நான் நினைப்பது எதுவும் நடக்காது; நான் முயல்வது எதுவும் ஆகாது என்னும் அவநம்பிக்கை உடலோடும், உள்ளத்தோடும் உணர்வோடும் கலந்துவிடுகிறது.நம்பிக்கை நம்மோடு கலக்கும்போது வெற்றி, செல்வம், மகிழ்ச்சி, ஆரோக்கியம், புகழ் பெருமை ஆகியவை நம்மை நோக்கி ஈர்க்கப்படுகின்றன.அவநம்பிக்கை நம்மோடு கலக்கும்போது தோல்வி, வறுமை, கவலை, நோய், தாழ்வு, சிறுமை ஆகியவை நம்மை நோக்கி ஈர்க்கப்படுகின்றன.இப்போது நேர்முகச்சிந்தனை எதிர்மறைச் சிந்தனை ஆகிய இரண்டில் ஒன்றை நீங்ள்ளே தேர்ந்தெடுக்கலாம். எதைத் தேர்வு செய்கிறீர்கள்; நிச்சயம் நேர்முகச் சிந்தனையைத்தேர்வு செய்வீர்கள்.

“எதுவும் என்னால் முடியும்; நான் நினைத்தபடியே நடக்கும்; விரும்பியது எல்லாம் கிடைக்கும்; நான் முயல்வது எல்லாம் ஆகும்” என்று திரும்பத் திரும்ப சொல்லுங்கள்.கண்களை மூடிக்கொண்டு சொல்லுங்கள்; திறந்துகொண்டும் சொல்லுங்கள். உறங்குவதற்கு முன்னர் சொல்லுங்கள். உறங்கி எழுந்த பின்னரும் சொல்லுங்கள். நின்றுகொண்டும், நடந்துகொண்டும் அமர்ந்துகொண்டும், படுத்துக்கொண்டும் சொல்லுங்கள்.நீங்கள் இதைச் சொல்லச் சொல்ல உங்கள் ஆழ்மனதில் இருந்த எதிர்மறைப் பதிவுகள் மறைந்துகொண்டே வருகின்றன.
மறைந்த இடத்தில் ஆக்கப்பதிவுகள் படிந்து விடுகின்றன.மனதைப் பற்றிய முக்கியமான ஒரு விதி ஈர்ப்பு விதியாகும்.“முடியும்” என்று நினைத்தால் முடிப்பதற்குத் தேவையான அறிவு, திறமை, வசதி, வாய்ப்பு, உதவி, ஒத்துழைப்பு ஆகியவற்றை மனமே ஈர்த்துக்கொடுக்கும்.“நடக்கும்” என்று நினைத்தால் நடப்பதற்குத் தோதான நடவடிக்கைகளையும், சம்பவங்களையும் மனமே ஈர்த்துத் தரும்“ஆகும்” என்றுநினைத்தால் ஆவதற்குரிய வாய்ப்பை உங்கள் மனமே ஈர்த்துத் தரும்.முடியாது, நடக்காது, கிடைக்காது, ஆகாது, ஆகிய எதிர்மறைச் சொற்களை நீங்கள் இனி மனதால் நினைக்கவும் கூடாது; வாயால் சொல்லவும் கூடாது, உங்கள் அகராதியில் எங்கெல்லாம் இச்சொற்கள் வருகின்றனவோ அங்கெல்லாம் கிறுக்கி அவற்றை மறைத்து விடுங்கள்.அதன்பின்னர், உங்கள் எல்லாச் செயல்களுமே முடியும், நடக்கும், கிடைக்கும், ஆகும் என்னும் அடிப்படையில் அமைந்துவிடும்.“உங்களால் முடியும்; முடியும் என்று நினைத்தால்” என்று நார்மன் வின்சன்ட் பீல் கூறுகிறார்.“உங்களால் ஒரு காரியம் முடியும் என்று நினைத்தாலும் முடியாது என்று நினைத்தாலும் இரண்டும் உண்மைதான்” என்று கூறுகிறார் என்றிபோர்டு.இவ்விரு வாக்கியங்களிலும் வெற்றியின் இரசிகயம் அடங்கியுள்ளது.‘என்னால் மாவட்ட கலெக்டர் ஆக முடியும்; அதற்குத் தேவையான காரியங்கள் தாமே நடக்கும்; பொருத்தமான உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்கும்’ என்னும் நேர்முகச் சிந்தனை ஆக்கமனப்பான்மையை உங்களிடம் உருவாக்கிவிடுகிறது.ஆகமனப்பான்மை உங்கள் மூளை அணுக்களிலும்,நரம்பு அணுக்களிலும், இரத்த அணுக்களிலும், தசைத் திசுக்களிலும் ஒரு இரசாயன மாற்றத்தை உருவாக்குகிறது.

இராசாயண மாற்றம் உங்கள் அறிவை விரிவாக்கி, திறமையை திடப்படுத்தி, ஆற்றலை வெளிக்கொணர்ந்து, வாய்ப்புகளும், மனிதர்களும் உங்கள் நோக்கி ஈர்க்கபட்டு நீங்கள் வெற்றிபெற்று விடுகிறீர்கள்.வெற்றியின் முதல் இரகசியம் இதுதான்!ஆகவே வறுமை, தோல்வி, நோய் போன்ற சிறைகளில் நீங்கள் அடைபட்டிருப்பீர்களானால், சிறைக்கதவின் பூட்டைத்திறகும் சாவி, மனம் உங்கள் சட்டைப்பையில் தான் உள்ளது.ஆக்கமனப்பான்மை என்னும் அச்சாவியில் முடியும், கிடைக்கும், நடக்கும், ஆகும் என்று பொறித்திருப்பதைக் காணுங்கள்.ஆக்கமனப்பான்மையை கையிலெடுத்தால், அனைத்துச் சிறைகளிலிருந்தும் விடுதலை பெறலாம்.செல்வம், பதவி, புகழ், பெருமை, ஆரோக்கியம், ஆகியவற்றை விரும்பும் அளவுக்கு பெற்றுக் கொள்ளலாம்.நம்புங்கள்; ஆக்கமனப்பான்மையே அரும்பெருஞ்செல்வம்!

Saturday, August 13, 2011

மனோசக்தி


மனோசக்தி

கண்ணுக்குத் தெரியாத மனோசக்தி ஒன்று நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது என்பதை அறியாமல் அதைத் தூங்கவைத்திருக்கிறோம். நாம்தான் அதைத் தட்டி எழுப்பவேண்டும். நல்லதையே நினைத்தால் நல்லதே நடக்கும், அதைவிட்டு நாம் எப்போதும் பொல்லாததையே நினைத்தால் அதுவே நடக்கும்.
நாம் பிறந்ததிலிருந்தே மனோசக்தி நம்மிடம் இருக்கிறது. யாரிடமிருந்தும் நாம் மனோசக்தியை வங்க வேண்டியதில்லை. பயிற்சியின் மூலம் நாம் அதை அதிகப்படுத்தமுடியும். முனிவர்கள் மட்டும்தான் மனோசக்திப் பெற்றவர்களா? இல்லை தனிமனிதன் ஒவ்வொருவரும் மனோசக்தியைப் பயன்படுத்த முடியும்.
.
இரண்டு மனம் வேண்டுமென்று நாம் கேட்கவேண்டியதே இல்லை. இரண்டு மனங்களுடன்தான் நாம் பிறந்திருக்கிறோம். நாம் பயிற்சித்தப்படி நடக்கும் வெளிமனம், நாம் பயிற்சிக்காத உள்மனம். அதைப் பயிற்சித்து உபயோகிக்க ஆரம்பித்தால் உலகம் நம் கையில்.
படைப்பின்படி எல்லா மனித உள்மனங்களும் பிறப்பிலிருந்து இணைக்கப் பட்டிருக்கின்றன. அதைத் தூண்டுவதோ துண்டிப்பதோ நம் கையில் இருக்கிறது. பயிற்சியினால் தவிர நம் வெளிமனத்தால் அதை உணர முடியாது.
நாம் உறங்கும்போது நம் வெளிமனமும் உறங்குகிறது, ஆனால் நம் உள்மனம் மட்டும் மற்ற உள்மனங்களுடன் தொடர்புக் கொண்டுதான் உள்ளது.நம் உள்மனம் நாம் பயிற்சிக் கொடுத்தப்படி நல்லதும் செய்யும், கெடுதலும் செய்யும்.
இயற்கையாகவே மனோசக்தியைப் பயன்படுத்துவோரும் நல்லத் தரமானப் பயிற்சினால் மனோசக்தியைப் பயன்படுத்துவோரும் நல்லதையே நினைத்து ஏன் நல்லதையே செய்யக்கூடாது?
கேடுதல்கள் செய்பவர்கள் தற்சமயம் நலமாக வாழ்வதுபோல் தோன்றினாலும் இறுதியில் படுகுழியில் தள்ளப்படுவதை நாம் பார்க்கப் போகிறோம்.
வாழ்க மனோசக்தி!

Tuesday, August 9, 2011

எளிய முறை குண்டலினி


எளிய முறை குண்டலினி

எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம்.
காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம். புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும். ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்.

மனம் வேறு உயிர் வேறு என்று தான் பொதுவாக மக்கள் கருதுகிறார்கள். அப்படியல்ல. உயிரே தான் படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. உயிர் உடலில் இயங்கும் போது எக்காரணத்தாலும் உடலில் எந்தப் பகுதியிலேனும் அணு அடுக்கச் சீர் குலைந்து போனால் உயிருக்குத் துன்ப உணர்ச்சி ஏற்படுகிறது. அவ்வுணர்ச்சியிலிருந்து மீள ஒரு பொருளோ, செயலோ, பிறர் உதவியோ தேவைப்படுகின்றது. அப்போது தேவை என்ற மனநிலையாக உயிர் ஆற்றல் ஓங்கி நிற்கின்றது. பின் அதுவே முயற்சி, செயல், இன்ப துன்ப விளைவுகள், அனுபோகம், அனுபவம், தெளிவு, முடிவு என்ற நிலைகளாகப் படர்ந்து இயஙகுகின்றது. இந்த உண்மை யோகத்தின் முதல் படியாகிய ஆக்கினை தவப்பயிற்சியால் தெளிவாக விளங்கும்.

ஆக்கினைச் சக்கரம்

உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலைதான் மாயை எனப்படும். உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகள் அறுவகைக் குணங்களாகும்.

அவையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்வேட்பு, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்பனவாகும். அறுகுண வயபட்டு மக்கள் செயலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம்.

ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகின்றது. மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது தனது ஆற்றலை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை மணம் இவையாக மாற்றி அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது.

தனது இயக்க விளைவுதான் இன்பமும் துன்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவு பெற்றுத் தன் ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும். தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும் தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டு சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவுக்குத் திறமை பெருகும். மெய்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில் ஆக்கினைச் சக்கர யோகமேயாகும். ஆசானால் எழுப்பப் பெற்ற குண்டலினி சக்தியின் இயக்க விரைவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கும். உடல்நலம், மனநலம் ஓங்கும். முகம் அழகு பெறும்.

Monday, May 23, 2011

எதையும் சாதிக்கலாம்...


எதையும் சாதிக்கலாம்

தகுதியின் விளிம்பில் நீ தயாராக இருந்தால் வாய்ப்புகள்
உன்னிடம் வாய்ப்புக் கேட்கும். வேகத்தின் உச்சியில்
நீ விவேகத்தை அமர்த்தினால் வெற்றிகள் உன்னிடம் முத்தம் கேட்கும்.
மனிதனே எவ்வாறு விடியாத இரவொன்று கிடையாதோ
அதுபோல் நீ முயன்றால் முடியாத செயலொன்றும் இருக்காது.

வாழ்க்கையில் உங்களுக்கென்று ஓர் இலக்கு இருக்க வேண்டும்.
நீங்கள் இலக்கினை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்.
வெற்றிப் பயணத்திற்கு ஒரு முடிவில்லை.
உள்ளத்தில் உற்சாகமும் சாதனை வேட்கையும் இருந்து கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு நாளும் “இன்று புதிதாகப் பிறந்தோம்” என்ற புத்துணர்வோடு
எழுந்து மகிழ்வோடு பணிகளைத் தொடங்குங்கள்.
கழுகுக்குப் பார்வை மிகவும் கூர்மை. மிக நுட்பமான உயரப்பார்வை.
எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் தரையில் கிடக்கின்ற
இரை அதன் கண்ணுக்குத் தப்புவதில்லை.
மனதைச் சிதறவிடாமல் எவனுடைய பார்வை
லட்சியத்தின் மீது இருக்கிறதோ அவன் வெற்றியைத் தனக்குச்
சொந்தமாக்கிக் கொள்கிறான்.

நண்பனே…

நீ நினைப்பதை சாதித்துக் காட்டு

உன் வாழ்வை வளப்படுத்து...