Saturday, July 18, 2009

சூரிய கிரகணம்


சென்னை: ''வரும் ஜூலை-22 ஆம் தேதி ஏற்பட உள்ள சூரிய கிரகணத்தை வெறும் கண்களினால் பார்க்கக் கூடாது அதற்கான பிரத்யேக கண்ணாடி வடிவமைக்கப்பட்டுள்ளது."என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் இராமலிங்கம் தெரிவித்தார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்..' வருகிற 22 ஆம் தேதி காலை 5.52 முதல் 6.21 வரை சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்தியாவில் குஜராத்,அஸ்ஸாம் வழியாக 170 மைல்கள் தொலைவுக்கு சீனாவரை இந்த கிரகண நிழலை காணமுடியும்.

சென்னையில் 68 சதவீதம் இந்த கிரகணத்தை காண முடியும். சென்னை மெரினா கடற்கரையில் தீருவானமியூர் திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் இந்த கிரகணத்தை பார்க்க அறிவியல் இயக்கம் சார்பில் 500 கண்ணாடிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் 10 இடங்களில் இந்த கண்ணாடி மூலம் கிரகணத்தை பார்க்க வழி செய்யப்பட்டுள்ளது. இந்த கிரகண காலத்தில் நாம் இயல்பாக எல்லா வேலைகளையும் செய்யலாம்.

நிலநடுக்கம், சுனாமி ஆகிய பாதிப்புகள் ஏற்படாது. வீட்டில் எந்த பரிகாரமும் செய்ய வேண்டாம்.

இவ்வாறு சொல்வதெல்லாம் மூட நம்பிக்கையின் அடிப்படையிலானது. அறிவியல்ரீதியானது இல்லை." என்றார்.

6 comments:

ஆ.ஞானசேகரன் said...

//இவ்வாறு சொல்வதெல்லாம் மூட நம்பிக்கையின் அடிப்படையிலானது. அறிவியல்ரீதியானது இல்லை." என்றார். //

பகிர்வுக்கு நன்றி நண்பரே

நிகழ்காலத்தில்... said...

\\தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் இராமலிங்கம் தெரிவித்தார்.\\

\\இவ்வாறு சொல்வதெல்லாம் மூட நம்பிக்கையின் அடிப்படையிலானது. அறிவியல்ரீதியானது இல்லை."\\

:)))

தியானம் தொடர்புடைய தங்களுக்கு இந்த கருத்து ஏற்புடையதா???

MOHAMED SALEEM said...

என் பதிவை படித்ததற்கு நன்றி ஆ.ஞானசேகரன் தொடர்ந்து கருத்துக்களை சொல்லவும்.

MOHAMED SALEEM said...

நண்பர் நிகழ்காலத்தில்...யாம் அறிவியல் மற்றும் ஆன்மிகம் இரண்டிலும் ஒத்துபோகும் விசயங்களை மட்டும் எடுத்துகொள்வேன்.

நிகழ்காலத்தில்... said...

சலீம்,

இது பொதுவான பதில்,

ஏற்புடையதா, இல்லையா

இரண்டில் ஒன்றைச் சொல்லுங்கள்

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Post a Comment