Friday, July 3, 2009

தியானம் பழகுங்கள்


தியானம் என்றால் என்ன ?

உங்களுக்குள்ளேயே பதுங்கி இருக்கும் பயனுள்ள, ஆக்கப்பூர்வமான நல்லொழுக்க சக்தியை கண்டறிதல், அனுபவித்தல், பயனடைதலே. ' தியானம் ' உன்னைப் பற்றியே, நீயே ஆழமாக அறிந்து கொள்ளும் உள்ளுணர்வை தூண்டுவதே தியானம்.

அமைதி, அன்பு, மகிழ்ச்சி ஆகிய இயற்கை வளத்தை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம்.

எதிர்மறையான எண்ணங்களில் இருந்து நம்மை விடுத்து - நம்மிலிருந்தே நம்மை விடுவித்து சுகந்திரமான ஆனந்தத்தை அனுபவிப்பதே தியானம்.

ஒவ்வொருவரும் ஓர் ஆன்மா என்பதை உணர வேண்டும். அந்த ஆன்மாவில் தெய்வீக ஒளிப் புள்ளியாய் புறப்படவேண்டும். அந்த ஆன்மீக ஒளியே, மனித சமுதாயத்தின் பொற்காலமாகும். மனம் சரியானால் மற்ற எல்லா விஷயங்களும் சரிவரும் என்பதில் ஐயமில்லை. மனம் பண்பட வேண்டுமானால் அதற்கான பயிற்சியில் ஒவ்வொருவரும் முறையாக ஈடுபட்டு வரவேண்டும். மனம் சீர் பட்டால் புலன்கள் அடக்கம் பெறுகின்றன. புலன்கள் அடங்கியதால் மனம் நம் கைவசம் இருந்துவிடும் என்பதும் சாதாரண வெற்றியல்ல.

மனம் எதை ஆழ்ந்து நினைக்கிறதோ அதன்படியே குணச்சித்திரம் பதிவு ஆகிவிடும். '' எவ்வுருயிரும் எவ்வுயிரை எச்செயலை நினைத்தால்,அதன் தன்மையாகி விடும்'' என்பதே உண்மை. மனிதன் அறிந்த ஏழு சம்பத்துக்கள், உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி, உடல், வலிவு, சுகம், செல்வம் ஆகியவை. இதில் ஒன்று குறைந்தாலும் அதை மனிதன் நாடிப் பெற வேண்டும்.

நமது தமிழர் வாழ்க்கை விஞ்ஞானப் பூர்வமானது. தமிழர்களின் எளிமையும், அன்பும், இனிமையும், வலிமையும், நீதியும், நேர்மையும் அழியா சின்னங்கள். பழந்தமிழ் மக்களின் வாழ்க்கையும் முறைகளையும், சமுதாயப் பழக்க வழக்கங்களையும் மேல் நாட்டினர் கண்டு ஆச்சரியமடைகிறார்கள்.இலக்கியப் படைப்புகளில் காணப்படும் புதுமைகள், கணிதம், வானியல், மருத்துவம், அறுவைச் சிகிச்சை போல் மனதினையும் பக்குவப்படுத்தி வாழ்க்கையில் ஒரு நெறி கண்டவர்கள். நமது வாழ்க்கை நெறி ஒரு வறட்டு கோட்பாடு அல்ல. மனதின் பூரணமே அதன் இலட்சியம். எந்த வெளி உலக சக்தியும் அதனை நசுக்கிவிட முடியாது. இருள் அடர்ந்த பின்னணியிலும் நமது பண்பாடு, கலாச்சார தீபம் அணைந்து விடாமல் அற்புதமாக ஒளிவீசுவது என்றால் நமது முன்னோர்கள், சித்தர்கள் கண்ட " தியானம் "

தியானம் என்பது நம் முன் நிலைத்துள்ள மூச்சைக் கொண்டு நமது அறிவு, சிந்தனை வேறு எங்கும் செல்லாது தூய அன்புடன் நம்முள் இறைவனை நேசிப்பதாகும். தியானம் செய்யும் போது நம்மை அறியாமல் ஒரு காந்த உஷ்ணம் ஏற்படும். அந்த உஷ்ணம் தியானத்தின் மூலம் மேலும் மேலும் பெருகும். காந்த உஷ்ணம் தசாய காந்த உஷ்ணமாக மாறி நமது சிரசில் போய் சேரும். நமது சிரசில் பல சுரப்பிகள் சுரந்து அற்புதங்கள் பல உண்டாகும். இவ்வாறு நிகழ்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை சற்று பார்ப்போம்.

உடல் உள்ளம் தூய்மை அடைகிறது.

உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

உடம்பில் இருக்கும் நோய்கள் குறைகிறது.

அன்பு, சாந்தம், ஆனந்தம், இன்பம் சுரக்கிறது.

சக்தி விரயமாவது தடுக்கப்படுவதுடன் உடலுக்கு புதிய சக்தியும் உற்பத்தியாகிறது.

மனம் இறுக்கத்திலிருந்து தளர்கிறது.

உடல் முழுதும் பூரண ஓய்வு கிடைக்கிறது.

குறைவான பிராண வாயுவே செலவாகிறது.

உள் உறுப்புகளில் உயிரணுகளுக்கு குறைவான வேலை கிடைக்கிறது.

குறைவான சுவாச இயக்கம் கிடைக்கிறது.

இதய துடிப்புக்கு குறைவான இயக்கம் கிடைக்கிறது.

மனிதனின் சிந்தனை சக்தியை தூண்டிவிடுகிறது.

தூக்கத்தினால் கிடைப்பதை விட உடலுக்கு அதிகமான ஓய்வு கிடைக்கிறது.

ஞாபக சக்தி, புத்தி கூர்மை அதிகரிக்கிறது.

மன உலைச்சல் மன அழித்தம் நீங்குகிறது.

அலைபாயும் மனம் அடங்கி அமைதியடைகிறது.

சிந்தனை ஆற்றலும், ஞாபக சக்தியும் கூடுகிறது.

நோய் இன்றி பெரு வாழ்வில் பல்வேறு பலன் கிடைக்கிறது.

மூச்சு விடும் விகிதம் குறைகிறது. ஆதலால் ஆயுள் நீடிக்கிறது.

இரத்த அழுத்தம், இதய நோய்கள், காசநோய்கள், தூக்கமில்லாத வியாதி, தோல் நோய்கள், நீரிவு நோய்களும் குணமடைகிறது.

மனம் சரியானால் மற்ற எல்லா விஷயங்களும் சரிவரும் என்பதில் ஐயமில்லை. மனம் பண்பட வேண்டுமானால் அதற்கான பயிற்சியில் ஒவ்வொருவரும் முறையாக ஈடுபட்டு வரவேண்டும். மனம் சீர்பட்டால் புலன்கள் அடக்கம் பெறுகின்றன. புலன்கள் அடங்கியதால் மனம் நம் கைவசம் இருந்துவிடும் என்பதும் சாதாரண வெற்றியல்ல.

இந்த வெற்றியின் வழி நாம் பரிபூரண ஆத்ம நிம்மதியும், இன்பமும் பெறுகிறோம். ஒருவர் அதிகம் பேசுவது கொண்டோ, சுறுசுறுப்புடன் வேலை செய்வது கொண்டோ இதனைக் கண்டறிய முடியும். அதேபோல்தான் மெளனமாக இருப்பதும்; மெதுவாகப் பேசுவதும் ஒருவரின் மனம் அடங்கப் பெற்றதை அல்லது புலன்கள் அடங்கி விட்டன என்பதை காட்டிவிடாது. சுருக்கமாக ஒருவரின் புறத்தோற்றம்- நடவடிக்கைகளை மட்டும் வைத்துக்கொண்டு மன ஒருமுகப் பாட்டை உறுதிப்படுத்த முடியாது. உதாரணத்திற்க்கு, ஒரு நீர் நிலையில் அதன் மேல்மட்டத்தில் நீரோட்டம் அல்லது அலை குறைந்தோ கூடுதலாகவோ எவ்வாறும் இருக்கலாம். ஆனால் நீர் நிலையின் அடியில் எப்படிப் பார்த்தாலும் நிதானமான நீர்தான் ஓடிக் கொண்டிருக்கும். இவ்வாறுதான், சுற்றியுள்ள சூழ்நிலைகள் பல மாதிரி இருந்தபோதிலும், மனம் என்பது அலையாது ஒரே நிலையில் இருக்கும் தன்மையுண்டு.

மனம் என்பதின் கூர்முனை எண்ணம் புருவ மத்தியிலுள்ள சூஸ்மத்தில் குவிகின்றது. இவ்வாறு குவியும் எண்ணம், ஒரு குழாயிலிருந்து விழும் நீர்த்துளி போல உணர்வு நிலையைத் தந்து கொண்டிருக்கும். அவ்வாறு எண்ணம் குவியாது இருந்தால் புலன்கள் சோர்ந்து தூக்க நிலைதான் உண்டாகும். பற்பல நிகழ்ச்சிகள் காண்பது போலிருக்கும். தியானம் பூரணமாக நடைபெறாது. அது உறைப்பான உணர்வு நிலைக்கோ - புத்திக்கோ கொண்டு செல்லாது. விழிப்பு நிலை இதனால் குறைவு பெறுவதுடன் மயக்க புத்தியைத்தான் வளரச் செய்கிறது. மாறாக, உணர்வு நிலையில் மட்டும் தியானத்தை கொண்டு சென்றால், அந்த உணர்வே பின் இதயத்திற்கு இறங்கி விடுகின்றன.அலை கடலில் நங்கூரமிட்ட கப்பலை போல் பிடிமானம் கொண்டு விடும்.

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

மனம் சரியானால் மற்ற எல்லா விஷயங்களும் சரிவரும் என்பதில் ஐயமில்லை. //

மனமே மந்திரச் சாவி அல்லவா?

Anonymous said...

i like a thiyana

KUMAR said...

eXPECTING NEW

Post a Comment