Sunday, July 26, 2009

காந்த மருத்துவம்


காந்த மருத்துவம்
சிறந்த மாற்று மருத்துவ முறையில் ஒன்றாக திகழ்வது காந்த மருத்துவம். இம்முறையில் மருந்து, மாத்திரை, ஊசி என்று எதுவுமில்லை. அறுவை சிகிச்சைகள் இன்றி பக்க விளைவுகள் ஏதுமின்றி ஓர் எளிய சிகிச்சை முறை இது.

சித்தா, ஆயுர்வேதம் போன்ற மற்ற மருத்துவ முறைகளுடன் காந்த மருத்துவத்தை ஒரு துணை மருத்துவமாகவும் பயண்படுத்தலாம். அதனால் நோய் விரைவில் குணமாகும்.

காந்த சிகிச்சை முறையில் உள்ளுக்கு அருந்தும் மருந்து காந்த நீர் மட்டுமே. இது உடலின் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் ஜீரண உறுப்புகள், நரம்புகள், ரத்தகுழாய்கள் ஆகியவற்றில் உண்டாகும் குறைகளை நீக்குகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

உடலில் சேரும் கொழுப்புகள் (கொலஸ்ட்ரால்) சிறுநீரகத்தில் ஏற்படும் கல் முதலியவற்றை கரைக்கும் தன்மை காந்தநீருக்கு உண்டு.

பல் வலியையும், பல் கூச்சத்தையும் நீக்கும் திறனும் காந்த நீருக்கு இருக்கிறது. காந்தநீரானது உடலில் தேவையற்ற கழிவுகளை நீக்கி ஆரோக்கியத்தை பேணிக் காக்கிறது.

சைனஸ், உடல் பருமன், தீராத நாட்பட்ட தலைவலி, மூட்டுவலி, இடுப்பு வலி, கழுத்துவலி, பெண்கள் மாதவிடாய் தொடர்புடைய கோளாறுகள் போன்ற பல நோய்களை காந்த மருத்துவத்தின் மூலம் குணமாக்கலாம்.

பயன்கள் :

நம் உடம்பிலுள்ள நோய் எதிர்ப்பு திறனை வளர்த்து வியாதிகளை நீக்குகிறது. இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தி உடலுறுப்புகளை சரியாக இயங்கச் செய்கிறது.

நோய் உள்ள இடங்களில் வட துருவ, தென் துருவ காந்த வட்டுகளை வைத்து சிகிச்சை செய்தால் நோயின் வீரியம் படிப்படியாக குறைந்து அறவே நீக்கச் செய்யலாம்.

தேவைப்பட்டால் உணவிலும் கொஞ்சம் மாறுதல்களை செய்துகொள்ள வேண்டும். கட்டுப்பாடான உணவு முறையும் காந்த மருத்துவமும் நோயை விரைவில் குணப்படுத்தி இயற்கை நல் வாழ்வை அளிக்கும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை :

* காலை, மாலை மட்டுமே காந்த மருத்துவ சிகிச்சைக்கு ஏற்ற நேரங்கள்.

* காந்த வட்டுகளும், காந்த பட்டையும் சிகிச்சைக்கு அவசியம்.

* சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்தோ சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

* சாப்பிட்டதுமே காந்த நீரை அருந்தக் கூடாது - ஒரு மணி நேரம் கழித்தே அருந்தலாம்.

* காந்த வைத்தியம் செய்து கொண்ட அரைமணி நேரத்திற்குள் குளிக்கக்கூடாது, குளிர்ந்த பானங்கள் எதுவும் அருந்தக்கூடாது. குளிர்ந்த நீரும் குடிக்கக் கூடாது.

* பேறுகால பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் காந்த மருத்துவம் செய்வது தவறு.

* காந்த மருத்துவம் எடுத்துக் கொள்ளும் போது கைக்கடிகாரத்தை கழற்றிவிடுவதுடன் பேட்டரிகளில் இயங்கும் பொருட்களான கால்குலேட்டர்,
டிரான்ஸிஸ்டர் ரேடியோ முதலியவற்றுடனும் உடலுக்கு தொடர்பு கூடாது. சாவி போன்ற இரும்பாலான எந்த பொருளும் இருக்கக் கூடாது.

* மர நாற்காலி, மரப்பலகை அல்லது பாயின் மீது உட்கார்ந்து தான் காந்த சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.

* காந்த கருவிகளை இதயத்தின் அருகிலும், மூளையின் அருகிலும் பயன்படுத்தக்கூடாது. மருத்துவரின் அறிவுரைப்படி நோய்க்கு தக்கவாறு ஏற்ற காந்த கருவிகளை பயன்படுத்துவது மிகவும் இன்றியமையாதது.

காந்த நீர் தயாரிப்பது எப்படி?

மத்திய தர காந்தங்களை ஒரு மரப்பலகையில் வைக்க வேண்டும். கொதிக்கவைத்து ஆறிய குடிநீரை இரு ப்ளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டில்களில் நிரப்ப வேண்டும். ஒரு பாட்டில் நீரை காந்தத்தின் வட துருவத்தின் மீதும் மற்றொரு பாட்டில் நீரை தென் துருவத்தின் மீதும் வைத்து எட்டு மணி நேரம் கழித்து எடுக்க வேண்டும். இரு பாட்டில் நீரையும் பிறகு ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கலக்கவும். இதை மீண்டும் தனித்தனி பாட்டில்களில் ஊற்றி மரப்பலகை மீது வைக்க வேண்டும். இந்த நீரே இரு துருவ காந்த நீர். பெரியவர்கள் 2 அவுன்ஸ் வீதம் குடிக்க வேண்டும்.

இரண்டாவது முறை :

கொதித்து ஆறிய குடிநீரை ஒரு பாட்டிலில் நிரப்ப வேண்டும். அதை மத்தியத்தர காந்தத்தின் தென் துருவத்தின் மீது வைக்க வேண்டும். இன்னொரு மத்திய தர காந்தத்தின் வட துருவம் அதன் மேல்பகுதியில் படுமாறு வைக்கவேண்டும். 8 மணி நேரம் கழித்து காந்தங்களை விட்டு நீரை எடுத்து ஒரு மரப்பலகை மீது வைக்க வேண்டும். இதுவும் இரு துருவ நீராகும்.

காந்தங்கள் :

அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை எடையுள்ள நடுத்திறன் காந்தம் மற்றும் ஈ என் டி காந்தங்கள் ஆகியன இம்மருத்துவத்திற்கு தேவையான பொருட்கள். அத்துடன் காந்தப் பட்டைகளும் தேவை. ஒவ்வொரு நோய்க்கும் உரிய பட்டைகளை நோய்க்குரிய இடத்தில் கட்டிக்கொண்டு சிகிச்சை அளித்துக் கொள்ளலாம்.

அந்த வகையில் தலைப்பட்டை, கழுத்துப்பட்டை, இடுப்புப்பட்டை, வயிற்றுப்பட்டை, நீரிழிவு பட்டை, ஆஸ்துமா பட்டை, மூட்டுப்பட்டை, இரத்த அழுத்தப்பட்டை, காந்த மூக்குக் கண்ணாடி என இதில் பல வகைகள் உள்ளன. இவற்றை உரிய காந்த மருத்துவரை அணுகிப் பெறலாம்.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

பக்க விளைவு அற்ற இந்த மருத்துவம் அனைவருக்கும் ஏற்றது.

Post a Comment