Air
காற்று நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது. இது நன்கு வீட்டினுள் வர ஜன்னல்களைத்திறந்து வையுங்கள். குறிப்பாக, படுக்கை அறையில்… பாதுகாப்பையும் பார்த்துக்கொள்ளுங்கள்.
Breathe
நன்கு ஆழ்ந்து சுவாசியுங்கள். குறிப்பாகக் காலையில் ஆழ்ந்து மூச்சுப் பயிற்சிசெய்யவும். இளமையைப் புதுப்பிக்கும் எளிய வழி இது.
Chill
கடும் குளிரும் கடுமையான வெப்பமும் இடர்களை உண்டாக்கும். முடிந்தவரைஇவையிரண்டையும் தவிர்த்து, அன்றாட வாழ்வை ஒழுங்குபடுத்தி வாழுங்கள்.
Dwell
தூய்மையான இடத்தில் வாழுங்கள். அசுத்தமான வீடுகளில் வசிப்பதால் உடல் நலத்திற்கு எளிதில் தீங்கு உண்டாகும்.
Eat
வாழ்வதற்காக உணவு உண்ணுங்கள். உண்பதற்காக வாழ்பவர்கள் மிகுந்தசிரமத்திற்குள்ளாவார்கள்.
Fly
ஈக்களும் பிற பூச்சியினங்களும் தூய்மையைக் கெடுக்கும். கொசுக்கள் நோய்நுண்மங்களை காற்றில் பரப்பும். இந்த இரண்டும் உங்கள் வீட்டில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
Getup
அதிகாலையில் எழுந்துவிடுங்கள். இதனால் ஒவ்வொரு நாளையும் சிறப்பாக ஆர்வத்துடன் தொடங்கி வாழலாம்.
Herbs
உடலுக்கு நன்கு ஊட்டம் தரத்தக்கவை மூலிகைகள், பழங்கள், காய்கறிகள். அதாவதுஇயற்கை உணவுவையே உட்கொள்ளுங்கள். செயற்கை உணவைத் தவிருங்கள்.
Illness
பெரும்பாலும் கவனமின்மையால்தான் நோய்கள் தாக்குகின்றன. ஆறுமாதத்திற்கு ஒருமுறை மருத்துவ செக்கப் செய்து கொள்வது நல்லது.
Jogging
காலையோ அல்லது மாலையோ மெல்லோட்டம் செல்வது உடற்கட்டை நன்கு பராமரிக்க உதவும். (மெல்லோட்ட நேரம் : 30 நிமிடங்கள்)
Keep
உலகில் அனைத்து நன்மைகளையும் தரக்கூடியது தூய்மை. தினமும் குளியுங்கள்.தூய்மையான ஆடைகளையே எப்போதும் அணியுங்கள். சுத்தமாக வாழுங்கள்.
Laugh
மகிழ்ச்சியாக வாழுங்கள். கஷ்டங்களின் போது தன்னம்பிக்கையுடன் மனம்விட்டுச்சிரியுங்கள். சிரிப்பு கஷ்டங்களைத் துரத்தும்.
Meditate
ஆழ்ந்து சிந்தித்து வெல்லவும், உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கவும் தினமும்தவறாமல் தியானம் செய்யவும்.
Nicotine
ஒரு போதும் புகைபிடிக்காதீர்கள். சிகரெட்டினால் ஒரு சிறு நன்மையும் இல்லை.வலிந்து நச்சு வலையில் விழாதீர்கள்.
Overweight
அதிக எடை ஏறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அளவான உணவு, உடற்பயிற்சிமுதலியவற்றால் உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மாரடைப்பைத்தவிருங்கள்.
Province no meat
இறைச்சி உணவுகள் உங்கள் உணவுத்தட்டில் இடம் பெறவே கூடாது. இவை நஞ்சு மிகுந்த உணவுகள்.
Quietness
ஒரு நாளில் இருபது நிமிடங்களாவது பரபரப்பு இல்லாமல் அமைதியாகவும் ஓய்வாகவும் இருங்கள். இதனால் நரம்புமண்டலம் சிறப்பாக இயங்க போதுமான அளவு ஓய்வும் இணக்கமும் நரம்புகளுக்கு கிடைக்கின்றன.
Resist
மனம் அமைதியாக இருந்தால் உடல் ஆரோக்கியம் எப்போதும் சீராக இருக்கும்.எப்போதும் நேர்மையான செயல்களை மட்டுமே கவனமாகச் செய்து வந்தால் மனம் எப்போதும் அமைதியாக இருக்கும். குறுக்கு வழிகள் தான் மன அமைதியைக் கெடுக்கின்றன.
Think
நம்மிடம் உள்ள செல்வத்தைவிட உயர்ந்தது நமது உடல்நலம்தான். எனவே, உங்கள் உடல்நலம் பற்றி சிந்தித்து அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஏற்ப வாழுங்கள்.
Ulcer
மதுபானங்கள் அருந்தாதீர்கள். கவலைப்படாதீர்கள். இரண்டும் வயிற்றில் புண்களைஉண்டாக்கும்.
Value
மருத்துவ ஆலோசனைகளின் மதிப்பை உணர்ந்தால், அவற்றைப் பின்பற்றினால் எல்லாவிதமான நோய்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.
Wisdom
உண்மையான அறிவு நமக்குத் தேவை. இதுவும், ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கை முறையும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உதவும்.
X-Ray
உங்களுக்குத் தெரியாமல் இருக்கும் பிரச்னைகளையும் நோய்களையும் எக்ஸ்ரேயும்,உங்களின் இரத்தம், சிறுநீர் போன்ற பரிசோதனைச்சாலை முடிவுகளும் தெள்ளத்தெளிவாக வெளியே காண்பித்தருளும். எனவே, இதுபோன்ற நவீன பரிசோதனைகளைத் தவிர்க்காதீர்கள்.
You are
உங்கள் வேலைகளுக்குச் சமமாக தூங்கும் நேரமும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கடின உழைப்புத் தேவை. அதற்காக அடிப்படை ஓய்வைத் தவிர்க்கவேண்டாம்.
உடல்நலத்தில் அக்கறை கொள்ளாவிடில் எதையும் செய்யாத ‘பிறந்தோம் வாழ்ந்தோம்’என்ற ஒன்றுமே இல்லாத, பூஜ்யமாக நம் வாழ்க்கை முடிந்துவிடும். அதற்கு இடம்கொடுக்காதீர்கள்.
3 comments:
thanks
Health is Wealth.
wow arumaiyana news very very nice!!!
Post a Comment