Sunday, July 12, 2009

மனக்கட்டுப்பாடு




சித்தி பெறுவதிலோ அதனை வளப்படுத்திக்கொள்வதற்கோ
பயன்படும் சாதனங்கள், சாதனைகள், சாதகங்கள் பலவுண்டு.
மனவளப்பயிற்சி, மனக்கட்டுப்பாடு, மானசயோகம், ஹடயோகம்
போன்றவை அவசியமானவை.

ஒரு சிறிய விஷயம். மனிதமூளையில் ஸெல்கள் சாதாரணமானவை
யல்ல. ந்யூரான் எனப்படும் அந்த ஸெல்கள் மிகவும் வித்தியாசமானவை.
அவற்றின் செயல்பாட்டைச் சரியாகப் இன்னும் புரிந்துகொள்ள இயலவில்லை.
உணர்வுகள், உணர்ச்சிகள், சிந்தனை, ஞாபகம், கண்டுபிடிப்புகள்,
உருவகச்சிந்தனை, உருவகமில்லாச் சிந்தனை, கூட்டல், கழித்தல்,
பெருக்கல், வகுத்தல், பகுத்தறிதல், மற்ற அங்கங்களின் செயல்பாடு,
உணர்ச்சி, ஐம்புலன்கள், உடலின் தானியங்கி இயக்கம் என்று
ஆயிரக்கணக்கான விஷயங்களை ந்யூரான்கள் செய்யும். வெளியில்
நடக்கும் பல விஷயங்களையும் கவனித்துக்கொண்டு, அவற்றை ஆராய்ந்து
அவற்றைப் பகுத்து அறிந்து, தேவைப்பட்டால் செயல்படச் செய்யும்.

மனித மூளையில் 15 பில்லியன் ந்யூரான்கள் இருக்கின்றன.
இவற்றிலிருந்து டெண்ட்ரைட்ஸ் என்னும் இழைகள் கிளைகள் இழைகள்
புறப்பட்டு எங்கெங்கோ சென்று அங்கிருக்கும் பல ந்யூரான்களுடன்
தொடர்பு கொள்ளும். இந்த மாதிரியான ஸினாப்ஸிஸ் தொடர்புகள் பல
கோடிக்கணக்கானவை இருக்கின்றன.
ந்யூரான்களின் செயல்பாடு மனிதனின் சுயக்கட்டுப்பாட்டிலும்
இருக்கும். ஆனால் அவ்விதம் இருக்கும் ந்யூரான்களின் எண்ணிக்கை
மிக மிகக் குறைவு. மிகவும் ஜீனியஸாக இருப்பவர்கள், கவனகர்கள்,
யோகிகள் போன்றவர்களுக்குக்கூட மொத்தத்தில் 15 சதவிகிதமே
சுயகட்டுப்பாட்டில் இருக்கும். சராசரி விகிதம் 5 சதவிகிதம் மட்டுமே.
சற்று யோசித்துப் பார்க்கவேண்டும்.
5 சதவிகிதம் சராசரி மனிதனுக்கு.
ஆற்றல் படைத்தவர்களுக்கு 15 சதவிகிதம்.
அப்படியானால் 50 சதவிகிதம்? அவர்கள் எந்த அளவுக்கு ஆற்றல்
படைத்தவர்களாக இருப்பார்கள்.
நான் முன்பெல்லாம் எண்ணுவதுண்டு......
ஈ.ஈ.ஜி. என்னும் விஷயம் ஒன்று இருக்கிறது. எலெக்ட்ரோ
என்கெஃபாலோகிராம் என்னும் இது, மூளையின் பல பாகங்களில் ஏற்படும்
செயற்பாடுகளின் விளைவால் ஆங்காங்கு ஏற்படும் மின்னதிர்வுகளை அளந்து
வரைபடமாக்கிக் காட்டும்.
இதிலேயே இன்னொரு சங்கதியும் இருக்கிறது.
பையோஃபீட்பேக் என்பது. மனதில் ஓடும் சிந்தனைகள் எப்படி எப்படிப்
பட்ட மின் அதிர்வுகளையும் ஹோர்மோன், என்ஸைம் சுரப்பு போன்றவற்றையும்
ஏற்படுத்துகின்றன என்பதைக் காட்டக்கூடியது.
தமிழ்ச் செய்யுள் யாப்பில் மிகக் கஷ்டமான சில பாடல்வகைகள்
இருக்கின்றன. ஆசு கவி, சித்திரக்கவி, சிலேடைக்கவி, பங்கி போன்றவை
அவற்றில் அடங்கும்.
ஒரு கவிஞரைப் பிடித்து இந்த மெஷீன்களில் மாட்டிவைத்து,
அவரை - உதாரணமாக மாலைமாற்றுப் பாடல் ஒன்றை இயற்றுமாறு
சொல்லலாம்.
ஈஈஜி, பையோஃபீட்பேக் ஆகியவற்றால் உடல், மூளை ஆகியவற்றில்
ஏற்படுவனவற்றைக் கண்டறியலாம்.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

பொயசொல்வதைக் கண்டுபிடிக்கும் கருவி இந்த அடிப்படையில் தானே அமைந்திருக்கும்?

Post a Comment