Wednesday, July 1, 2009

தன்னம்பிக்கை




Confidence - நம்பிக்கை
Courage - தைரியம்
Convincing Power - திருப்திபடுத்தும் சக்தி

நாம் பேசும் போது தனித்துப் பேசவதில்லை. பேசப் பேச நாம் சிந்திக்கவும் செய்கிறோம். எனவே பேச்சிற்கும், சிந்தனைக்கும் தொடர்பு உள்ளது. மற்றவர்கள் பேசும் போது அதைக் கவனமாக, உன்னிப்பாக நாம் கவனிக்க வேண்டும். கவனித்தல் என்பதை பழக்கப்படுத்திவிட்டால் மற்றவர்களை நாம் நிச்சயம் வெல்ல முடியும். சிறப்பாக சிந்திக்கவும் சரியாக கவனிக்கவும் வேண்டுமெனில் படிக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் நாம் பெறும் ஒவ்வொரு அனுபவமும் மகிழ்ச்சியைத் தரும். எனவே சிந்தித்துப் பேசுங்கள். நிறைய புத்தகங்களைப் படியுங்கள். குறைவாகப் பேசி அதிகமாக கவனியுங்கள்.

இப்பொழுது 3Cக்கு வருவோம். அதில் முதல் C Confidence - நம்பிக்கை.

நம்பிக்கையே வெற்றிக்கு வழி வகுக்கும். எந்தவொரு செயலைச் செய்தாலும் முதலில் அச்செயலை நிச்சயம் நன்றாகச் செய்வேன் என்ற நம்பிக்கை மனதில் வேண்டும். மேலும் நாம் பேசும் போது மற்றவர்கள் நம் சொற்களை நம்பும் விதமாக நாம் பேச வேண்டுமெனில் நல்ல உதாரணங்களை மேற்கோள் காட்ட வேண்டும். உண்மையான சம்பவங்களை பேச்சின் இடையே கூற வேண்டும்.

நம் மீது நமக்கு நம்பிக்கை வர வேண்டுமெனில் முதலில் நான் யார்? என் பலம் என்ன? பலவீனம் என்ன? என்று நமக்குள் நாம் கேட்க வேண்டும். நம்மிடம் அளவிறகு அதிகமான சக்தி உள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதற்கு தன்னம்பிக்கை தான் ஒரே வழி.

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள என்னால் முடியும்’, நான் நிச்சயம் வெல்வேன்’ என்ற எண்ணம் இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். மனிதன் கடலில் மிதக்கும் பெரிய பனிக்கட்டிப் பாறைக்கு ஒப்பானவன். ஆம். மிதக்கும் பனிக்கட்டிப் பாறையில் சிறிய பாகம் மட்டுமே நீருக்கு மேல் கண்களுக்குத் தென்படும், பெரும் பகுதி தண்ணீருக்குள் மறைந்திருக்கும். ஒவ்வொருவரும் நிறையத் திறமைகளை மறைத்தும், மறந்தும் வைத்திருக்கிறோம். வெளியே கொண்டு வரவும் மறுக்கிறோம். ஏன்? ஏன் இந்த தயக்கம்? மாறுங்கள்! துணிந்து நில்லுங்கள். எது வேண்டுமானாலும் நடக்கலாம், கவலை வேண்டாம்; முயற்சியுங்கள்! வெற்றி நிச்சயம்.

இதைத்தான் சுவாமி விவேகானந்தர் தன் தொண்டர்களைப் பார்த்துக் கூறியுள்ளார். ‘நீங்கள் யாரும் செம்மறியாடோ, வெள்ளாடோ அல்ல நீங்கள் ஒவ்வொருவரும் சிங்கம்! எனவே துணிந்து நில்லுங்கள். பயம் வேண்டாம்’. நம் திறமைகளைச் சரியான நேரத்தில் சரியான இடத்தில் நாம் வெளிப்படுத்தவில்லையெனில் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாது.

அடுத்து இரண்டாவது C Courage - தைரியம்.

தைரியத்தை வளர்த்துக கொள்ள மிகச் சரியான வழி கற்பனையான தைரியத்தை கனவு காண வேண்டும். எதைக் கூற விரும்பினாலும் அதை தைரியமாக உரத்த குரலில் தெளிவாகக் கூற வேண்டும். இதைப் பிரபல அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் என்பவர் ‘நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு இருந்து தொடங்குங்கள். ஏதோ ஒன்றைச் செய்து கொண்டே இருக்க வேண்டும்; எதிலும் முழுத் திருப்தி அடையக்கூடாது; ஏனெனில் திருப்தி முயற்சியை முற்றுப் பெறச் செய்துவிடும். ஒவ்வொரு முறையும் இதை விட இன்னும் நன்றாகச் செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வு எப்போதுமே ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும்.

இறுதியாக மூன்றாவது C Convincing Power - மற்றவர்களைத் திருப்திப்படுத்தும் சக்தி.

எப்பொழுது ஒரு செயலில் நம்பிக்கையும் தைரியமும் நிறைந்து காணப்படுகிறதோ அப்பொழுது நாம் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களை திருப்திப் படுத்தும் இங்கு புன்னகை மிகமிக அவசியம். ஏனெனில் புன்னகையோடு ஒருவரை நாம் திட்டினாலும் கூட அதை தவறாக எடுத்துக் கொள்ளாது பின்பு அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று சிந்திக்கத் தோன்றும். மேலும் புன்னகையை நாம் அணிந்திருந்தால் எதையும் தேடி நாம் அலைய வேண்டியதில்லை. அனைத்துமே நம்மை நாடி வரும்.

மேலே கூறப்பட்டுள்ள செயல்களைச் செய்ய மனதிற்கு பயிற்சி அவசியம். நாம் நினைத்ததை சாதிக்க இதோ ஒரு பயிற்சி. அதுதான் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி (Deep Breathing Exercise). அமைதியான இடத்தில் அமர்ந்து மூச்சை மெதுவாக, இலகுவாக, ஓரே சீராக ஆழ்ந்து இழுக்கவும், மூச்சை 4 சொல்லும் வரை இழுக்கவும். பின் 6 சொல்லும் வரை மூச்சை விடவும். கவனம் முழுவதும் மூச்சிலேயே இருப்பது முக்கியம். இவ்வாறு காலையும் மாலையும் 5 முறை செய்தால மனம் நம் கட்டுக்குள் அடங்கும் நாம் சொல்வதைக் கேட்கும்.

2 comments:

வடுவூர் குமார் said...

இதெல்லாம் படிக்க இங்கு ஆளில்லையோ என்று சந்தேகமாக இருக்கு.

இராஜராஜேஸ்வரி said...

ஏனெனில் திருப்தி முயற்சியை முற்றுப் பெறச் செய்துவிடும்.//
உண்மைதான்.தேவைதானே கண்டுபிடிப்பின் தாய்??

Post a Comment