Monday, October 31, 2011

மனோசக்தி பாடம் 11

ஆல்பா தியானம் செய்வது எப்படி?



மனித மூளையின் அமைப்பு வலது இடது என்று இரண்டு அரைக்கோளங்களாக (Hemisphere) இருப்பதை அறிவியல் பாடத்தில் அறிந்திருப்போம். அவை வலது பக்கத்து மூளை, இடது பக்கத்து மூளை.
இடது, பக்க மூளை ஐம்புலன்களோடு தொடர்புடையது. நாம் விழித்திருக்கும் போது அல்லது உணர்வோடிருக்கும்போது ஐம்புலன்வழி வருகிற, கிடைக்கிற செய்திகளை பகுத்து, தொகுத்து, ஆய்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்து அந்த அனுபவங்களை பகுக்கும்போதும், தொகுக்கும் போதும் உண்டான எண்ணங்கள் அப்படியே வலது பக்கத்து மூளைக்கு அனுப்பி வைக்கிறது.
இந்த இடது பக்கத்து மூளை விழித்துக் கொண்டிருக்கும்போது மட்டும் செயல்படுகின்றது. இதனை நினைவு மனம் Conscious Min, Rational Mind, Objective Mind, Waking Mind, Surface Mind, Voluntary Mind, Male Min என்று பல்வேறு பெயர்களால் அழைக்கலாம்.

இந்த இடது பக்கத்து மூளை சிந்திக்கின்ற வேலையைச் செய்கின்றது. கணக்குப் போடும் வேலையை, காரண காரியங்களை கண்டறிகின்ற வேலையைச் செய்கின்றது.
ஆனால், இந்த வலது பகத்து மூளையோ சிந்திக்கின்ற வேலையைச் செய்யாமல் இடது பக்கத்து மூளை தருகின்ற ஒட்டுமொத்த சிந்தனைகளையும், அனுபவங்களையும் அப்படியே வாங்கி அது உண்மையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும், நிஜமான அனுபவங்களாக இருந்தாலும், கற்பனையான அனுபவங்களாக இருந்தாலும் அவற்றைப் பதிய வைத்துக் கொள்ளுகிற நினைவு வங்கியாக (Memory Bank) கணினியின் நினைவுத்தகடு (Floppy Disk) போல செயல்படுகிறது.
நாம் விழிப்பு நிலையில் இருந்தாலும் உறக்க நிலையில் இருந்தாலும் உயிரோடு இருக்கின்ற எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது. வலது பக்கத்து மூளை உடலின் இயக்கத்திற்கு தேவையான எல்லா உறுப்புகளின் செயல்பாட்டினை கட்டுப்படுத்துகின்ற வேலையைச் செய்கின்றது.

சுயமாக சிந்திபது என்கிற ஆற்றல் அற்றது போல தோன்றகின்றது. இதனை ஆழ்மனம், Sub Concious Mind, Subjective mind, Sleeping Mind, Deep Mind, Involuntary Mind, Female Mind என்று பல்வேறு பெயர்களால் அழைக்கலாம்.

இந்த வலது பக்க ஆழ்மனம் இடது பக்க நினைவு மனப்பகுதியால் வழி நடத்தப்பட்டு மிகப்பெருஞ்சக்தியாக, எல்லாவற்றுக்கும் தீர்வுகளை பெற்றுத்தருகிற, அற்புதங்களை ஆற்றுகிற அரேபிய கதைகளில் வருகிற அலாவுதீனின் அற்புத விளக்குபோல செயல்படுகிறது.
இந்த Sub Concious mind என்று சொல்லப்படுகிற வலது பக்க மூளையே ஆழ்மனம். இதுவே கற்பனையின் நிலைக்களன். இதனைப் பயன்படுத்த அறிந்து கொள்கிறபோதுதான் புதியன படைக்கவும் உருவாக்கவும் நம்மால் இயலுகிறது.

சாதாரணமாக மனிதர்களின் மன இயக்கத்தை
ஆல்பா (∂) பீட்டா(β) தீட்டா (σ) டெல்டா(δ)
என்று நான்கு நிலைகளில் இயக்குவதாக சித்தர்களும், ஞானிகளும் அறிவியலார்களும் அறிந்து கூறுகிறார்கள்.
ஆல்பா நிலையில் மன இயக்கம 8 முதல் 12 சுற்றுகளுக்குள்ளும் (Cycles/Sec)
பீட்டா நிலையில் 13 சுற்றுகளுக்கு மேலும்
தீட்டா நிலையில் 4 முதல் 7 சுற்றுகளுக்குள்ளும்
டெல்டா நிலையில் 3 சுற்றுகளுக்கும் கீழாகவும் 1/2 சுற்று வரையிலும் மனம் இயங்குவதாக குறிப்பிடுகிறார்கள்.
பீட்டா நிலை என்பது விழிப்பு நிலை. உணர்ச்சிவயப்பட்ட மனம் வேகமாக இயங்கும் நிலை (Active and Agitated State)
ஆல்பா நிலை என்பது விழிப்பும் உறக்கமும் அற்ற தூங்காமல் தூங்கும் தியான, மோன நிலை (A Hypnotic State)
டெல்டா என்பது சமாதி நிலை.
நாம் விழித்துக் கொண்டிருக்கும் போது ஐம்புலன்களுக்கும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதால் தொடர்ந்து தகவல்களை ஆய்ந்தும், தொகுத்தும், பகுத்தும் கொண்டிருப்பதால் நினைவு மனம் அதிக இயக்கத்திலும் அதாவது விழிப்பு நிலையிலும் ஆழ்மனம் (Sub Conscious Mind) உறக்க நிலையிலும் இருக்கிறது.

உறக்க நிலையில் இருக்கிற ஆழ்மனத்தை வலது பக்க மூளையை வலது பக்க மூளையை விழிப்படையச் செய்ய, நினைவு மனத்தின் (Concious Mind) செயல்பாடுகளை இயக்க நிலையை குறைக்க வேண்டும். நம் ஐம்புலன்களுக்கும் உள்ள உலக தொடர்புகளை துண்டித்தால் நினைவு மனத்தின் செயல் குறையும். கண்களை மூடி உடலின் எந்த பகுதியிலும் இறுக்கமில்லாமல், தளர்வாக, வசதியாக, பத்மாசனத்திலோ, சுகாசனத்திலோ அல்லது கால் பாதங்கள் தரையில் படிந்த நிலையில் நாற்காலியில் முதுகு, தலை நேராக இருக்கும்படி நிமிர்ந்து அமர்ந்த நிலையிலோ, இன்னும் சொல்லப்போனால் படுத்த நிலையிலோ (படுத்த நிலை உறக்கத்தை உடனே வரவழைத்து விடுவதால், உறக்கம் நினைவு மனத்தின் செயல்பாட்தை முழுவதுமாக தடை செய்து விடுவதால் இந்த நிலை பரிந்துரைக்கப்படுவதில்லை) ஓய்வான மனநிலையில் நம்முடைய மூச்சின் மீது கவனம் செலுத்தும்போது எண்ண அலைகள் அடங்கி மனம் அமையுற்று நினைவு மனத்தின் செயல்பாடு குறைகிறது.

ஆழ்மனம் விழிப்படையத் தொடங்குகிறது.
நம்முடைய சுவாசமும் எண்ணங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவைகள் சுவாசத்தின் வேகம் அதிகரித்தா எண்ணத்தின் வேகமும் அதிகரிக்கும். ஆழ்ந்த சுவாசத்தை எடுத்து மெதுவாக காற்றை வெளியேற்றும் செயலை கவனிக்கத் தொடங்கும்போது புதிய எண்ணங்கள் உருவாவதும், உருவான எண்ணங்களின் பின்னால் தொடர்ந்து செல்வதும், எண்ணங்களே வேண்டாமென்று நிராகரிப்பதும் நிகழ்வதில்லை. எண்ணமற்ற வழிக்கு இதுவே வழி. எல்லா தியான முறைகளையும் தொடங்குவதற்கு இந்த முறையைத்தான் பரிந்துரைக்கிறார்கள். குறிப்பாக அட்டாங் யோகத்தின் சமாதி நிலையை அடைய இதுவே வழி.
தியானம் என்ற சொல்லுக்கு ஏதாவது ஒன்றை எண்ணித்தியானிப்பது என்பது பொருள். அதாவது மனதில் சங்கல்பங்களை (முனைந்து உருவாக்கும் எண்ணத் தீர்மானங்கள் ) உருவாக்குவதும் ஒன்றையே தொடர்ந்து இடைவிடாமல் எண்ணிக் கொண்டிருப்பதும் தியானம்.
ஆல்பா நிலையில் நினைவு மனத்தின் துணைகொண்டு எந்தப் பொருள் குறித்து, புதிய செய்திகள், உத்திகள் தேவையோ எந்தப் புதிய கண்டுபிடிப்புகளுக்கு விடை தேவையோ, சிக்கல்களுக்கு தீர்வு வேண்டுமோ அது குறித்து சிந்தித்தால் அந்த எண்ணங்கள் ஆழ்மனத்தில் (வலது பக்க மூளையில்) பதிந்து உடனேயோ அல்லது மற்ற சமயங்களிலோ நம்முடைய மனதில் புதிய எண்ணங்களும், கற்பனைகளும் விடைகளும், உத்திகளும் ஊற்றெடுக்கும்.
இந்த ஆல்பா நிலை தியானத்தின்போது நாம் எது குறித்து சிந்திக்கின்றோமோ அது தொடர்பான மனப்படங்களை, காட்சிகளாக காண வேண்டும்.
மனித உடல் அழியக்கூடியது, ஆன்மா அழிவில்லாத்து என்பது போல மனித மனதில் உருவாகும் எண்ணங்கள் அழிவதில்லை. எப்படி ஒரு காந்த ஒலி, ஒளி (Audio & Video) நாடாக்களில் சப்தங்களும் காட்சிகளும் பதியவைத்து வைத்து வேண்டும் பொழுது அவற்றை இயக்கிப் பார்க்க முடிகிறதோ அதுபோல இதுவரை வாழ்ந்த இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற எல்லாவித மனிதர்களின் எண்ணங்களும் வான் காந்தத்தில் (Universal Magnetism) பதிய வைத்து பாதுகாக்கப்படுகிறது. வான்காந்தம் ஆற்றல் மற்றும் அறிவின் நிலைக்களன்.
பிரபஞ்ச அறிவிலிருந்து தேவையான செய்திகளை பெறமுடியும் என்று பெஞ்சமின் ஃபிராங்கிளின் போன்ற அறிஞர்கள் நம்பியிருக்கிறார்கள். எடிசன் போன்ற அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் பிரபஞ்ச அறிவிலிருந்து செய்திகளை பெற்றுமிருக்கிறார்கள்.
ஆழ்மனம் நம்மை இந்தப் பிரபஞ்ச மனத்தோடு இணைக்கும் நடுநிலை மனம் நாம் விரும்பும் எதுவாக இருந்தாலும் நாம் எந்த நிலையிலிருந்தாலும் பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்த பொக்கிஷம். இதற்காக பெஞ்சமின் ஃபிராங்கிளின் ஒரு உத்தியை பின்பற்றியிருக்கிறார்.
பெஞ்சமின் ஃபிராங்கிளின் கையில் ஒரு கூழாங்கலை வைத்துக் கொண்டு ஒரு சாய்வு நாற்காலியின் கைப்பிடியின் வெளியே கை இருக்குமாறு வைத்துக் தளர்வாக, ஓய்வாக்க் கண்களை மூடி அமர்ந்து கொண்டு உறங்குவதுபோல் இருப்பாராம். உறக்கம் வருகிறபோது கைப்பிடி தளரந்து கூழாங்கல் தரையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு உலோகத் தகட்டின் மீது விழுந்து ஒலி உண்டாக்கும். அந்த நிலை தூங்காமல் தூங்கும் அறிதுயில் என்கிற ஆல்பா தியான நிலை.
இந்த நிலையில் தன்னுடைய பிரச்சனைகள் குறித்து சிந்திக்கும்போது மின்னல் கீற்றென சில சிந்தனைகள், விடைகள், தீர்வுகள் உண்டாகும். அவை பிரபஞ்ச பதிவிலிரந்து கிடைக்கும் செய்திகள். இந்த வகையான செயல்பாட்டிற்கு பின்னர் நாம் இதை மறந்து இருக்கும்பொழுது சில நேரங்களில் திடீரென்று சில சிந்தனைகளை மனம் உருவாக்கித் தரும். மனதை கசக்கிப் பிழிவதை விட (Brain Storminng) வலிந்து சிந்திப்பதை விட ஓய்வாக மகிழ்ச்சியாக இருக்கும்பொழுதே கற்பனை ஊற்றெடுக்கும்.

கற்பனை, படைப்பாற்றல், புதியன உருவாக்கல் என்பது மாற்றி யோசிக்கற ஒருமுறை. நேரடி சிந்தனை (Straight Thinking) கணக்குப்போடுவது போல் பக்கவாட்டுச் சிந்தை (Lateral Thinking) என்பதுதான் புதிய சிந்தனை, மாறுபட்ட சிந்தனை, கற்பனை.
இப்படி மாற்றி யோசிக்கிற Lateral Thinking இல்லையென்றாலும் Permutation Combination என்கிற முறையில் புதியன உருவாக்க எளிய வழிமுறையில் முயலலாம். பூச்சியம் முதல் ஒன்பது வரை பத்து இலக்கங்களை வைத்துக் கொண்டு எல்லையற்ற (Infinit Numbers) புதிய எண்களை உருவாக்குவது போல எல்லா வகையிலும் மாற்றி மாற்றி இணைத்து புதியன படைப்பது எளிது. மனமும் முயற்சியுமே தேவை.

3 comments:

sellvaraj.blogspot.com said...

அண்ணா உங்கள் படைப்புகள் இடைவிடாமல் தொடர என் வாழ்த்துக்கள்.
By : Selvam

MOHAMED SALEEM said...

நன்றி செல்வம் தொடர்ந்து பயிற்சி செய்து பலன் பெறவும்.

Anonymous said...

ithu migavum payanulla katturai.vazhthukal-saranya

Post a Comment