Monday, August 13, 2012

மனோசக்தி பாடம் 14

                                                           ஆழ்மனம்
 
* மூளை இயங்கும் பொழுது மெல்லிய மின் அலைகளை வெளியிடும். இவற்றை ஈ ஈ ஜி, என்ற கருவியின் மூலம் அளக்க முடியும். ஒரு வினாடிக்கு இத்தனை சைக்கிள் வேகத்தில் மூளை இயங்குகிறது என்று இக்கருவி பதிவு செய்யும்.

* மூளையின் வேகத்தை நான்கு நிலைகளாக பிரிக்கலாம். பீட்டா,ஆல்பா,தீட்டா,டெல்ட்டா. இதில் ஆல்பா நிலைதான் மனதின் மிகவும் சக்தி வாய்ந்த நிலை. அந்த நிலையில்தான் நம் ஆழ்மனம் திறக்கிறது.

* ஆழ்மனதுடன் நாம் தொடர்பு கொள்ளும் நேரத்தில் பிரபஞ்சத்துடனேயே நமக்கு தொடர்பு ஏற்படுகிறது. ஆழ்மனமதில் பதிக்கப்படும் எண்ணம், பிரபஞ்சத்திற்கு ஒரு செய்தியாக சென்றடைகிறது. அதன் பின்னர், பிரபஞ்சம்நமக்காகசெயல்பட்டு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி
அதை நிகழ்த்திகொடுக்கிறது. பிரபஞ்சசக்தியின் மூலம், மூடிய பல கதவுகள் திறக்கும். புதிய வழிகள் பிறக்கும். இலட்சியங்கள் நிறைவேறும்.
வாழ்வு பிரமிக்கத்தக்க வகையில் சிறப்புறும்.

* நம்முடைய மூளையை வலது பக்கம் மற்றும் இடது பக்கம் என்று இரண்டாக பிரிக்கலாம். இவ்விரண்டு செயல்பாடுகளும் மாறுபடும்.

* வெளியிலிருந்து நமக்கு வரும் எல்லா தகவல்களையும் மூளையின் இடது பக்கம் உள்வாங்கி சேமிக்கும். அந்த தகவல்களை பொறுத்தே நமது மனதில் பகுத்தறியும் சிந்தனை உருவாகிறது.


* நடந்த விசியங்களை அசை போடும் தன்மை இடது மூளையை சேர்ந்ததுதான் படுத்ததுடன் தூக்கம் வராமல் தவிப்பது இடது மூளையின் தீவிர செயல்பாட்டால்தான்.

* வலது பக்க மூளை நமக்கு இருக்கும் சில திறமைகளை செயல்படுத்துகிறது.
உள்ளுணர்வு,உணர்ச்சிகள்,ஆக்கபூர்வ சிந்தனைகள்,ஆகியவை இதில் அடங்கும்.

* வலது பக்க மூளை ஊக்குவிக்கப்படும் பொழுதுதான் ஆழ்மனம் திறக்கிறது. மூளையின் ஆல்பா நிலைதான் வலது பக்க மூளையை உடனடியாக ஊக்குவிக்க வல்லது.

* தியானத்தின் மூலமாக மூளையின் வேகத்தை ஆல்பா நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.
அந்த நேரத்தில் நமது ஆழ்மனம் திறக்கிறது. அதன் சக்த்தியை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

* ஆழ்மனம் திறந்திருக்கும் பொது நமது இலட்சியங்களை ஒரு காட்சியாக மனத்திரையில் பதிய செய்ய வேண்டும். ஆழ்மனத்தின் சக்தி செயல்பட துவங்கியதும் இலட்சியம் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் மெல்ல நிகழ துவங்கும்.


No comments:

Post a Comment