தியானம்
சித்தர் சலீம்தூக்கத்தின் போது நம்மை அறியாமல் நாம் தியானத்தில் ஈடுபடுகிறோம்
தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது .
உறக்கத்தின் போது குறைந்தளவு தான் பிரபஞ்ச சக்தியை பெறமுடிகிறது.
தியானத்தில் ஈடுபடும்போழுது அபரிதமான சக்தியை பெறமுடியும்.
இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பலமடங்கு விரிவடைய செய்கிறது.
நம்முடைய “ஆறாவது அறிவின்” கதவை திறக்கவும் விரிவடையவும் இது உதவுகிறது.
தியானத்தின் மூலம் கிடைக்கபெறும் அதீதமான சக்தி நம்மை சந்தோசபடுத்தும். நம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணபடுவோம். மேலும் பல சிகரங்களை தொட முடியும் .
தியானம் என்பது ஒரு பயணம்.
தியானத்தின் பொழுது நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம்.
மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு
அறிவாற்றலிலிருந்து நமக்குள்
பின்பு அதையும் தாண்டி
“தியானம்” வெற்றி பெற முதலில் நம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட செயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல் அசைவுகளை பார்ப்பது, பேசுவது, யோசிப்பது போன்ற செயல்களை .
“தியானம்”செய்யும் முறை நாம் தெரிந்து கொள்ளலாம் .
தியானத்தின் போது நாம் முதலில் செய்ய வேண்டியது நம் உடலை கட்டுப்படுத்தி ஒரே இடத்தில் அமர செய்வது .
எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம் .
நமக்கு சௌகரியமான முறையில்.
அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்வது முக்கியம்.
தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற் கொள்ளலாம் . நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம் .
வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.
கால்களை சப்பணமிட்டுக் கொள்ளுங்கள் .
இரண்டு கைகளின் விரல்களை சேர்த்துக் கொள்ளுங்கள் .
கண்களை மெதுவாக மூடுங்கள் .
அமைதியான நிலையில் சகஜ நிலைக்கு வாருங்கள்.
உங்கள் முழு உடலையும் இலசாக்கிக் கொள்ளுங்கள் .
மனதையும் இலசாக்கி கொள்ளுங்கள் .
கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.
கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம்.
நம்முடைய உடல் சகஜநிலையில் இருக்கும்போழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் சேய்யும். அதாவது
மனம் மற்றும் அறிவு நிலைக்கு. மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.
மன தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்தவண்ணமே உள்ளது.
நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் நமது மனதிற்குள் எழுந்தபடியே இருக்கும்.
மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் செல்ல வேண்டும். நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்க துவங்க வேண்டும் .
கவனித்தால் என்பது நமக்கும் இருக்கும் இயற்கையான குணம்.
இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்க துவங்குவதும் .
மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணி செய்ய கூடாது .
காற்றை உள்ளே இழுப்பதும், வெளிய விடுவதும் நமக்கு தெரிந்து நடந்திடக்கூடாது.
மூச்சுகாற்றை சுவாசிப்பதும்,வெளிய அனுப்புவதும் சாதரணமாக நடைபெற வேண்டும்.
நம்முடைய இயற்கையான சுவாசத்தை கவனித்தல் மட்டுமே போதுமானது. இதுதான் முக்கியம்.
இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்க சிறந்த வழி.
எண்ணங்களுக்கு பின் ஓடாதீர்கள்.
கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதிர்கள் .
எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.
இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள் . சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.
அப்பொழுது நமது எண்ண அலைகளின், அளவுகளின் வேகம் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.
இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளி கீற்றை போல் திடப்படுத்திக் கொள்ளும் .
இந்நிலையில்
ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.
எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்.
இந்த நிலையை தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது “எண்ணங்கள் அற்ற நிலை” என்றோ கூறுகிறோம்.
இதுதான் தியான நிலை.
இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முல் பாயும்.
தியானம் அதிகமாக செய்வதின் மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப் பெரும் . நாம் நினைத்த காரியங்கள் இறைவன் மூலம் நமக்கு கிடைக்கும்.